படித்ததற்கான ஒப்புகையைக் கோருதல் அல்லது அனுப்புதல்

நிர்வாகியால் அமைக்கப்பட்ட பணியிடம் அல்லது பணிக்கான Gmail பயன்படுத்தினால் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும். gmail.com கணக்கைப் பயன்படுத்தினால், படித்ததற்கான ஒப்புகைகள் செயல்படாது.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எப்போது திறக்கப்பட்டது என அறிய படித்ததற்கான ஒப்புகையைக் கோரலாம். படித்ததற்கான ஒப்புகை உங்கள் மெசேஜ் திறக்கப்படும்போது அதற்கான நேரம் மற்றும் தேதியுடன் மின்னஞ்சலாக உங்களுக்கு அனுப்பப்படும்.

படித்ததற்கான ஒப்புகையைக் கோருதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் எப்போதும் எழுதுவது போல மின்னஞ்சலை எழுதவும். 
  4. கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் விருப்பங்கள் More send options அதன் பிறகு படித்ததற்கான ஒப்புகையைக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும். 
  5. உங்கள் மெசேஜை அனுப்பவும்.

முக்கியம்: ஏதேனும் படித்ததற்கான ஒப்புகைகள் வந்திருந்தால் அவற்றை உங்கள் இன்பாக்ஸில் பார்ப்பீர்கள். உங்களுக்கு அறிவிப்பு வருவதற்கு முன், மெசேஜை பெற்ற நபர் படித்ததற்கான ஒப்புகைக்கு அனுமதியளிக்க வேண்டியிருக்கலாம்.

படித்ததற்கான ஒப்புகையைத் திருப்பி அனுப்புதல்

படித்ததற்கான ஒப்புகை தேவைப்படும் மெசேஜைப் பெற்றால், உங்கள் நிறுவனம் உங்களை முதலில் அதனை ஒப்புக்கொள்ளக் கேட்டுக்கொண்டால்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. நீங்கள் சாதாரணமாக எவ்வாறு மின்னஞ்சல்களைப் பார்ப்பீர்களோ அவ்வாறு செய்யவும்.
  3. அனுப்புநர் ஒருவர் உங்களிடம் படித்ததற்கான ஒப்புகையைக் கோரினால், ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • ரசீதை இப்போது அனுப்ப, ரசீதுகளை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ரசீதைப் பிறகு அனுப்ப, இப்போது வேண்டாம் என்பதைக் கிளிக் செய்யவும். மெசேஜை அடுத்தமுறை அனுப்பும்போது ரசீதை அனுப்பும்படி கேட்கும்.

உதவிக்குறிப்பு: யாரேனும் படித்ததற்கான ஒப்புகையைக் கோரி, மெசேஜைப் பார்க்க முடியவில்லை என்றால் உங்கள் ரசீது தானாக அனுப்பப்பட்டிருக்கும்.

ஒப்புகைகள் திருப்பி அனுப்பப்படாத போது

படித்ததற்கான ஒப்புகைகள் பெரும்பாலான மின்னஞ்சல் சிஸ்டம்களில் செயல்படும், ஆனால் பின்வரும் காரணங்கள் இருந்தால் படித்ததற்கான ஒப்புகையைப் பெறமாட்டீர்கள்:

  • குழு, அஞ்சல் பட்டியல் அல்லது அலையஸிற்கு மெசேஜ் அனுப்பினால்.
  • உங்கள் நிர்வாகி உங்கள் நிறுவனத்திற்குள் இருப்பவர்களுக்கு அல்லது நிறுவனத்திற்கு வெளியே உள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு ரசீதுகளைத் தடைசெய்தால்.
  • நிகழ்நேரத்தில் ஒத்திசைக்காத மின்னஞ்சல் நிரலைப் பெறுநர் பயன்படுத்தினால் (கேட்டால் மட்டும் ஒத்திசைக்கும் Post Office Protocol [POP] கிளையண்ட் அல்லது G Suite Sync கிளையண்ட்).
  • Internet Message Access Protocol (IMAP) பயன்படுத்தும் மின்னஞ்சல் கிளையண்ட்டில் பெறுநர் படித்ததற்கான ஒப்புகையைத் திருப்பி அனுப்பினால்.

டெலிவரிக்குச் சான்றளிக்க ரசீதிகளில் சார்ந்திருக்காதீர்கள்

ரசீதைப் பெறுவது உங்கள் மெசேஜைப் பெறுநர் பெற்றுக்கொண்டார் என்றாகாது. உங்கள் பெறுநர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சிஸ்டமைப் பொறுத்தே ரசீது செயல்படும்.

எடுத்துக்காட்டாக, IMAP சார்ந்த மின்னஞ்சல் கிளையண்ட்டைப் பயன்படுத்தும் ஒருவர் உங்கள் மெசேஜைப் படித்ததாகக் குறித்துவிட்டு அதைத் திறக்கவில்லை என்றால் படித்ததற்கான ஒப்புகையைப் பெறக்கூடும். சில IMAP அல்லாத மொபைல் மின்னஞ்சல் அமைப்புகள் திருப்பி அனுப்பும் ரசீதுகளை அனுப்புவதே இல்லை.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11040979415861877237
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false