அறிவிப்பு

Google Chatடின் அறைகளை Spacesஸாக மேம்படுத்துகிறோம். மேலும் அறிக.

Gmailலில் Google Chatடைப் பயன்படுத்துதல்

தகவல்தொடர்பை நிர்வகிக்கவும், எப்போதும் இணைப்பில் இருக்கவும், ஒரே இடத்தில் இணைந்து பணியாற்றவும் Gmail இன்பாக்ஸில் Google Chatடைச் சேருங்கள். பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தினால் இந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்த முடியுமா முடியாதா என்பதை உங்கள் நிறுவனம் தீர்மானிக்கும்.
முக்கியம்: Chat ஆப்ஸ் தடுக்கப்பட்டிருந்தாலும் உங்கள் பிள்ளையால் Gmail ஆப்ஸிலோ அதன் இணையப் பதிப்பிலோ Chatடைப் பயன்படுத்த முடியும். உங்கள் பிள்ளையின் Google கணக்கை நிர்வகிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Gmailலில் Chatடை இயக்குதல்/முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள Chat & Meet என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Gmailலில் Chatடை இயக்க/முடக்க, “அரட்டை” என்பதற்கு அடுத்துள்ள Google Chat அல்லது முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Gmailலில் Chat பேனலின் இடத்தை மாற்றுதல்

Chat பேனலை Gmail இன்பாக்ஸின் வலப்பக்கம் அல்லது இடப்பக்கத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள அரட்டை & Meet என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அரட்டைச் சாளர இடநிலை” என்பதற்கு அடுத்துள்ள இன்பாக்ஸின் இடப்புறம் அல்லது இன்பாக்ஸின் வலப்புறம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Gmailலில் உள்ள Chat, வழக்கமான Chat ஆகிய இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?

Chat, Gmailலில் உள்ள Chat ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான அம்சங்களே கிடைக்கும் என்றாலும், மின்னஞ்சல்களை அனுப்புவதும் பெறுவதும் மட்டுமின்றி நண்பர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள் ஆகியோருடன் ஒரே இடத்தில் இருந்தவாறே தகவல்தொடர்பை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த அனுபவத்தை Gmail வழங்குகிறது.

  • Chat: வெவ்வேறு ஆப்ஸுக்கு இடையே மாறுவதைப் பொருட்படுத்தாமல் தனிப்பட்ட உரையாடல் அனுபவத்தைப் பெற விரும்பினால் இதனைப் பயன்படுத்தலாம்.
  • Gmail: ஒரே இடத்தில் பல பணிகளைச் செய்ய விரும்பினாலும் அனைத்துத் தகவல்தொடர்புகளையும் பார்க்க விரும்பினாலும் இதைப் பயன்படுத்தலாம். ஒருங்கிணைக்கப்பட்ட புதிய Gmail தளவமைப்பு குறித்து மேலும் அறிக.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7334443189276520147
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false