Google சேமிப்பகம் எவ்வாறு செயல்படுகிறது?

ஒவ்வொரு Google கணக்கிற்கும் 15 ஜி.பை. சேமிப்பகம் வழங்கப்படுகிறது. இதை Gmail, Google Drive, Google Photos ஆகியவற்றில் பகிர்ந்து பயன்படுத்தலாம். உங்களுக்கான சேமிப்பக வரம்பை அதிகரிக்க Google One மெம்பர்ஷிப்பை வாங்கிக்கொள்ளலாம் (கிடைக்கும் பட்சத்தில்). அவ்வப்போது, சிறப்புச் சலுகையின் மூலமோ தொடர்புடைய பர்ச்சேஸின் மூலமோ கூடுதல் சேமிப்பகத்தைப் பெறலாம். சேமிப்பிடத்தை எப்படிக் காலியாக்குவது அல்லது மேம்படுத்துவது, உங்கள் சேமிப்பகத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்குச் சேமிப்பகத்தை ஆக்கிரமிப்பவை எவை?

உங்கள் சேமிப்பக வரம்பில் எவையெல்லாம் கணக்கிடப்படும்?

  • Google Photosஸில் அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும்.
  • ஜூன் 1, 2021க்குப் பிறகு Google Photosஸில் உயர்தரத்திலும் (இப்போது ஸ்டோரேஜ் சேவர் என்று அழைக்கப்படுகிறது) அடிப்படைத் தரத்திலும் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும். ஜுன் 1, 2021க்கு முன்பு உயர்தரத்திலோ அடிப்படைத் தரத்திலோ காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் உங்கள் Google கணக்குச் சேமிப்பகத்தின் கீழ் கணக்கிடப்படாது. இந்த மாற்றம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
  • Gmail மின்னஞ்சல்களும் இணைப்புகளும் (ஸ்பேம் மற்றும் நீக்கியவை ஃபோல்டர்களும் இவற்றில் அடங்கும்).
  • Google Driveவில் உள்ள ஃபைல்கள் (PDFகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்).
  • Meet அழைப்பின் ரெக்கார்டிங்குகள்.
  • Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Recorder, Jamboard போன்ற ‘பிறருடன் சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான’ ஆப்ஸ் மூலம் உருவாக்கிய அல்லது திருத்திய ஃபைல்கள்.
    • ஜூன் 1, 2021க்குப் பிறகு உருவாக்கிய அல்லது திருத்திய ஃபைல்கள் உங்கள் சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படும்.
    • ஜூன் 1, 2021க்கு முன்பு பதிவேற்றிய அல்லது கடைசியாகத் திருத்திய ஃபைல்கள் உங்கள் சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படாது.

உதவிக்குறிப்பு: Androidல் உள்ள WhatsApp காப்புப் பிரதிகள் விரைவில் உங்கள் Google கணக்கின் சேமிப்பகத்தில் கணக்கிடப்படும். WhatsApp காப்புப் பிரதி குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சேமிப்பக ஒதுக்கீட்டைத் தாண்டிவிட்டீர்கள் என்பதன் அர்த்தம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேமிப்பிடத்தை விட அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும். உங்களுக்கான சேமிப்பக வரம்பை விட அதிகமாகப் பயன்படுத்தினால், நீங்கள்:

  • Google Driveவில் புதிய ஃபைல்களையோ படங்களையோ பதிவேற்ற முடியாது.
  • Google Photosஸில் படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுக்க முடியாது.
  • Gmail மூலம் மின்னஞ்சல் அனுப்புவதும் பெறுவதும்கூட இயலாமல் போகலாம்.
  • Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard போன்ற பிறருடன் சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய ஆப்ஸில் புதிய ஃபைல்களை உருவாக்க முடியாது. சேமிப்பக உபயோகத்தை நீங்கள் குறைத்துக்கொள்ளும் வரை, பாதிக்கப்பட்ட ஃபைல்களை எவராலும் திருத்தவோ நகலெடுக்கவோ முடியாது.
  • புதிய ரெக்கார்டர் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுக்க முடியாது.
  • குறிப்பு: உங்கள் Google கணக்கில் தொடர்ந்து உள்நுழையவும் அணுகவும் முடியும்.

2 வருடங்களாகவோ அதற்கும் மேலாகவோ சேமிப்பக வரம்பை விட அதிகமாகப் பயன்படுத்தி வந்தால்: சேமிப்பிடத்தைப் போதுமான அளவிற்குக் காலியாக்கவில்லை என்றாலோ தேவையான அளவு கூடுதல் சேமிப்பிடத்தை வாங்கவில்லை என்றாலோ நீங்கள் உபயோகிக்கும் Gmail, Google Photos, Google Drive (Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஃபைல்களும் இதில் அடங்கும்) ஆகியவற்றில் இருந்து உங்கள் உள்ளடக்கம் அனைத்தும் அகற்றப்படக்கூடும்.

உங்கள் உள்ளடக்கத்தை அகற்றும் முன்பு, நாங்கள்:

  • Google தயாரிப்புகளில் மின்னஞ்சல் மற்றும் அறிவிப்புகள் மூலம் உங்களுக்கு அது குறித்துத் தெரிவிப்போம். உள்ளடக்கம் நீக்கப்படத் தகுந்ததாக மாறுவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு உங்களைத் தொடர்புகொள்வோம். 
  • கட்டணம் செலுத்தி கூடுதல் சேமிப்பகத்தை வாங்குவதன் மூலமாகவோ ஃபைல்களை அகற்றுவதன் மூலமாகவோ, உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படுவதைத் தவிர்க்க வாய்ப்பளிக்கிறோம்
  • எங்கள் சேவைகளில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்க வாய்ப்பளிக்கிறோம். உங்களின் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

உபயோகத்தை வரம்பிற்குள் கொண்டுவருவது எப்படி?

சேமிப்பிடத்தைக் காலியாக்கும் வழிகளை அறிய உதவும் சேமிப்பக நிர்வகிப்புக் கருவிகளுக்கான அணுகலை வழங்குகிறோம். உங்கள் ஃபைல்களை வேறொரு தனிப்பட்ட சாதனத்தில் பதிவிறக்கி வைத்துக்கொண்டு கிளவுட் சேமிப்பகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது சேமிப்பிடத்தைக் காலியாக்குவதற்கான மற்றொரு வழியாகும்.

Gmail, Drive, Photos ஆகியவற்றுக்குக் கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால் Google One மூலம் கூடுதல் சேமிப்பகத் திட்டத்திற்கு மேம்படுத்தலாம். 

பொதுவான கேள்விகள்

G Suite/Workspace கணக்குகளுக்கும் நுகர்வோர் கணக்குகளுக்கும் இந்தக் கொள்கைகள் பொருந்துமா?
சேமிப்பக ஒதுக்கீடு தொடர்பான மாற்றங்கள் Google Workspace, G Suite for Education, G Suite for Nonprofits ஆகிய திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த மாற்றங்களால் இவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்ள, Google Workspaceஸில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எனும் இடுகையைப் பார்க்கவும். 
Google Sites, Google Keep மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்கும் பிற ஆப்ஸுக்கும் (இங்கே பட்டியலிடப்படாதவை) இந்தக் கொள்கைகள் பொருந்துமா? Blogger உள்ளடக்கமும் YouTube உள்ளடக்கமும் என்னவாகும்?

ஒதுக்கீட்டை மிஞ்சும் சேமிப்பகக் கொள்கை இவற்றுக்குப் பொருந்தாது:

  • Google Sites
  • Google Keep
  • Blogger
  • YouTube

செயலில் இல்லாத கணக்கிற்கான கொள்கை உங்கள் Google கணக்கில் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும் அந்தக் கணக்கிற்கும் பொருந்தும்.

ஒதுக்கீடுசெய்யப்பட்ட சேமிப்பகத்தைவிட அதிகமாகப் பயன்படுத்துகிறேன். எனது உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முன்பு எவ்வளவு கால அவகாசம் கொடுக்கப்படும்? 
உங்கள் கணக்கு இந்தக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டால், உள்ளடக்கத்தை நீக்குவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே உரிய அறிவிப்பை வழங்க முயல்வோம். உங்களுக்கான சேமிப்பக ஒதுக்கீட்டைவிட அதிகமான சேமிப்பிடத்தை 2 வருடங்களாக உபயோகித்திருந்தால் உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படத் தகுந்ததாக ஆகிவிடும். உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் சேமிப்பக உபயோகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது Google One மூலம் கூடுதல் சேமிப்பகத் திட்டத்திற்கு மேம்படுத்தலாம்.
தரவை நீக்குவதற்கு முன்பு எனக்குத் தெரிவிப்பீர்களா? 

உங்கள் கணக்கு இந்தக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டால், உள்ளடக்கத்தை நீக்குவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே உரிய அறிவிப்பை வழங்குவோம்.

அன்புக்குரியவர் இறந்துவிட்டால் அவர் சேமித்து வைத்திருந்த படங்களையும் வீடியோக்களையும் நான் எப்படிப் பாதுகாப்பது?

தங்கள் ஆன்லைன் கணக்குகளை என்ன செய்வதென்று தெளிவான வழிமுறைகளை வழங்காமலேயே பலர் இறந்துபோக நேரிடுவதைப் பார்க்கிறோம். இறந்துபோன பயனரின் கணக்கில் உள்ள படங்களையும் வீடியோக்களையும் வழங்க, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடனும் அவரது பிரதிநிதிகளுடனும் (குறிப்பிட்ட சூழ்நிலைகளில்) Google இணைந்து பணியாற்ற முடியும். இறந்துபோன பயனரின் தரவைக் கோருவதற்கான எங்களின் செயல்முறை குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் இறப்பிற்குப் பிறகோ நீங்கள் நீண்ட காலமாகச் செயலில் இல்லாத நிலையிலோ உங்கள் தரவை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க Inactive Account Manager குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: செயலில் இல்லாத மற்றும் ஒதுக்கீட்டை மிஞ்சும் கணக்குகளுக்கான கொள்கைகளை மீறி Inactive Account Manager அமைப்புகள் செயல்படாது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11859174322424304511
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false