Google Workspaceஸில் பரிசோதனைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுதல்

எங்கள் Google Workspace தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அத்தகைய மேம்பாடுகளும் மாற்றங்களும் உங்கள் அனுபவத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள, நாங்கள் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.

நாங்கள் ஒரு பரிசோதனையை மேற்கொள்ளும்போது, Google Workspace தயாரிப்பில் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்கான பயனர்களை ரேண்டம் முறையில் தேர்ந்தெடுப்போம். பரிசோதனை ரேண்டம் முறையில் நடைபெறுவதால் அதற்கு ஒப்புதல் அளித்தல் செயல்முறையோ ஒப்புதல் நீக்குதல் செயல்முறையோ இருக்காது.

பரிசோதனைப் பயனர்கள்

தனிப்பட்ட Google கணக்குகளில் இணைக்கப்பட்டுள்ள Google Workspace தயாரிப்புகளில் மட்டுமே நாங்கள் பரிசோதனைகளை மேற்கொள்வோம்.

மாற்றங்களின் வகைகள்

பரிசோதனைகள் எப்போதும் வெளிப்படையாகத் தெரியாது. நுண்ணிய மாற்றங்கள் முதல் புதிய அம்சங்கள் வரை, உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கிலேயே பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கால அளவு

ஒவ்வொரு பரிசோதனையும் வேறுபட்டதாகும். ஒரு பரிசோதனை எவ்வளவு நேரம் நீடிக்கும் எனக் கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை.

பயனர் தனியுரிமை

பயனரின் தனியுரிமைக்கு Google Workspace முதன்மை முன்னுரிமை அளிக்கும். மேலும் பரிசோதனைகளை நடத்தும்போது எங்களின் நிலையான தனியுரிமை உறுதிப்பாடுகளை நாங்கள் பின்பற்றுவோம். Googleளின் தனியுரிமைக் கொள்கை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Google Workspace பரிசோதனைகளுக்கும் Google Workspace ஆய்வகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள்

பரிசோதனைகள் என்பவை Googleளில் எங்கள் தயாரிப்புகளின் உருவாக்கச் செயல்முறையின் ஓர் இயல்பான பகுதியாகும். ஆனால், Google Workspace ஆய்வகங்கள் என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது, பயனர்களைப் புதிய AI அம்சங்களைப் பயன்படுத்திப் பார்க்க அழைக்கும் 'அழைப்பாளர்களுக்கு மட்டுமேயான' திட்டமாகும். Workspace Labs பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9918536402858725814
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false