Gmailலிலிருந்து வெளியேறுதல்

Gmailலை எந்தச் சாதனத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து Gmailலில் இருந்து வெளியேறவோ Google கணக்கை அகற்றவோ வெவ்வேறு கணக்குகளுக்கு இடையே மாறவோ முடியும்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

கம்ப்யூட்டரில் கணக்கில் இருந்து வெளியேறுதல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உங்கள் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

வேறொரு சாதனத்திலிருந்து வெளியேறுதல்

வேறொரு கம்ப்யூட்டரில் உங்கள் மின்னஞ்சலில் இருந்து வெளியேற மறந்துவிட்டால் தொலைநிலையில் இருந்தே Gmailலில் இருந்து வெளியேறலாம்:

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உங்கள் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. எனது Google கணக்கை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "எனது சாதனங்கள்" என்பதற்குக் கீழே உள்ள அனைத்து சாதனங்களையும் நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ஒரு சாதனத்தைத் தேர்வுசெய்யவும்.
  7. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

வெளியேறாமல் கணக்குகளுக்கு இடையே மாறுதல்

பல உள்நுழைவு அம்சத்தின் உதவியுடன் ஒரே உலாவியில் பல கணக்குகளைப் பயன்படுத்தலாம். அத்துடன் அந்தக் கணக்குகளில் இருந்து வெளியேறாமலேயே அவற்றுக்கு இடையே மாறலாம். பல கணக்குகளில் உள்நுழைதல் குறித்து மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10272682246062536022
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false