Gmail மின்னஞ்சல்களை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

ஒரு மின்னஞ்சலை நீக்கும்போது அது நீக்கியவை ஃபோல்டரில் 30 நாட்கள் வரை இருக்கும். 30 நாட்களுக்குப் பிறகு, அந்த மின்னஞ்சல் உங்கள் கணக்கில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். அதை மீட்டெடுக்க முடியாது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. நீக்க விரும்பும் ஒவ்வொரு மின்னஞ்சலின் இடதுபுறத்திலும் உள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள நீக்குவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மெசேஜ் தொடரில் உள்ள மின்னஞ்சலை நீக்க:

  1. மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. பதிலளிப்பதற்கான ஐகானுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு இந்த மெசேஜை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு வகையில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் நீக்குதல்

கம்ப்யூட்டரில் உங்கள் Gmail இன்பாக்ஸ் அல்லது வேறொரு வகையில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் நீக்குவது எப்படி என்பதைக் காட்டும் அனிமேஷன்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள இன்பாக்ஸ், லேபிள் அல்லது வேறு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் இடதுபுறத்தில் உங்கள் மின்னஞ்சல்களுக்கு மேலே உள்ள தேர்வுப் பெட்டியைத் தேர்வுசெய்யவும். 
    • தேர்ந்தெடுக்கப்பட்ட உரையாடல்களின் எண்ணிக்கையைக் காட்டும் ஓர் அறிவிப்பு காட்டப்படும். அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்க, அறிவிப்பில் காட்டப்படும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. மேற்புறத்தில் உள்ள நீக்குவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல்களை நிரந்தரமாக நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள மேலும் அதன் பிறகு நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நிரந்தரமாக நீக்க விரும்பும் ஒவ்வொரு மின்னஞ்சலின் இடதுபுறத்திலும் உள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  4. மேற்புறத்தில் உள்ள நிரந்தரமாக நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீக்கியவை ஃபோல்டரில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் நீக்க, அறிவிப்பில் காட்டப்படும் நீக்கியவையை இப்போதே காலியாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீக்கியவை ஃபோல்டரில் உள்ள மின்னஞ்சல்களை மீட்டெடுத்தல்

முக்கியம்: நிரந்தரமாக நீக்கப்பட்ட மின்னஞ்சல்களையும் நீக்கியவை ஃபோல்டருக்கு நகர்த்தப்பட்டு 30 நாட்களுக்கு மேலான மின்னஞ்சல்களையும் மீட்டெடுக்க முடியாது.

கடந்த 30 நாட்களில் நீக்கப்பட்ட மின்னஞ்சல்களாக இருந்தால் அவற்றை நீக்கியவை ஃபோல்டரில் இருந்து நகர்த்த முடியும்.

கம்ப்யூட்டரில் உங்கள் Gmailலில் உள்ள நீக்கியவை ஃபோல்டரில் இருந்து வேறொரு இடத்திற்கு மின்னஞ்சல்களை நகர்த்துவது எப்படி என்பதைக் காட்டும் அனிமேஷன்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள மேலும் அதன் பிறகு நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடுக்க விரும்பும் ஒவ்வொரு மின்னஞ்சலின் இடதுபுறத்திலும் உள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  4. மேற்புறத்தில் உள்ள 'இதற்கு நகர்த்து' ஐகானை  கிளிக் செய்யவும்.
  5. "இதற்கு நகர்த்து" மெனுவில், மின்னஞ்சல்களை எங்கு நகர்த்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14461054117247586671
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false