Gmailலில் தேடல்களைத் துல்லியமாக்குதல்

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

Gmail தேடல் முடிவுகளை வடிகட்ட, வார்த்தைகளையோ தேடல் ஆப்பரேட்டர்கள் எனப்படும் குறியீடுகளையோ பயன்படுத்தலாம். முடிவுகளைத் துல்லியமாக வடிகட்ட பல ஆப்பரேட்டர்களை ஒன்றாகச் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

தேடல் ஆப்பரேட்டரைப் பயன்படுத்துதல்

  1. Gmailலுக்குச் செல்லவும்.
  2. தேடல் பெட்டியில் தேடல் ஆப்பரேட்டரை டைப் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • தேடல் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தி நீங்கள் தேடிய பிறகு, இந்த மெசேஜ்களுக்கான வடிப்பானை அமைக்க முடிவுகளைப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் வினவலில் உள்ள எண்களில் இடைவெளி அல்லது சிறுகோடு (-) பயன்படுத்தினால் அவை தனித்தனி எண்களாகக் கருதப்படும். மேலும், புள்ளி (.) தசமமாகக் கருதப்படும். உதாரணமாக, 01.2047-100 என்பது 2 எண்களாகக் கருதப்படும்: 01.2047 மற்றும் 100.
இவற்றின்படி தேடலாம் தேடல் ஆப்பரேட்டர்
அனுப்புநரைக் குறிப்பிட்டுத் தேடுதல்

from:

உதாரணம்: from:amy

பெறுநரைக் குறிப்பிட்டுத் தேடுதல்

to:

உதாரணம்: to:david

தலைப்பில் உள்ள வார்த்தைகளின்படி தேடுதல்

subject:

உதாரணம்: subject:dinner

பல வார்த்தைகளுடன் பொருந்தும் மெசேஜ்களைத் தேடுதல்

OR அல்லது { }

உதாரணம்: from:amy OR from:david

உதாரணம்: {from:amy from:david}

AND

உதாரணம்: from:amy AND to:david

முடிவுகளில் இருந்து சில மெசேஜ்களை அகற்றுதல்

-

உதாரணம்: dinner -movie

அருகருகில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி மெசேஜ்களைத் தேடுதல். குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு இடையில் எத்தனை வார்த்தைகள் இருக்கலாம் என்பதைக் குறிப்பிட எண்களைப் பயன்படுத்தவும்

நீங்கள் முதலாவதாக டைப் செய்த வார்த்தை முதலில் இருக்க வேண்டுமெனில் மேற்கோள்களைச் சேர்க்கவும்.

AROUND

உதாரணம்: holiday AROUND 10 vacation

உதாரணம்: "secret AROUND 25 birthday"

குறிப்பிட்ட லேபிளைக் கொண்ட மெசேஜ்கள்

label:

உதாரணம்: label:friends

இணைப்பைக் கொண்ட மெசேஜ்கள் (இன்லைன் படங்கள் உட்பட)

has:attachment

Google Drive, Docs, Sheets அல்லது Slides இணைப்பு/லிங்க்கைக் கொண்ட மெசேஜ்கள்

has:drive

has:document

has:spreadsheet

has:presentation

YouTube வீடியோ உள்ள மெசேஜ்கள்

has:youtube

அஞ்சல் பட்டியலில் உள்ள மெசேஜ்கள்

list:

உதாரணம்: list:info@example.com

குறிப்பிட்ட பெயர் அல்லது ஃபைல் வகையுடன் கூடிய இணைப்புகள்

filename:

உதாரணம்: filename:pdf

உதாரணம்: filename:homework.txt

சரியான வார்த்தை அல்லது சொற்றொடரைத் தேடுதல்

" "

உதாரணம்: "dinner and movie tonight"

பல தேடல் வார்த்தைகளை ஒன்றாகக் குழுவாக்குதல்

( )

உதாரணம்: subject:(dinner movie)

ஸ்பேம், நீக்கியவை உட்பட அனைத்து ஃபோல்டர்களிலும் உள்ள மெசேஜ்கள்

in:anywhere

உதாரணம்: in:anywhere movie

முக்கியமானது எனக் குறிக்கப்பட்ட மெசேஜ்களைத் தேடுதல்

is:important

label:important

நட்சத்திரமிட்ட, ஒத்திவைக்கப்பட்ட, படிக்காத அல்லது படித்த மெசேஜ்கள்

is:starred

is:snoozed

is:unread

is:read

உதாரணம்: is:read is:starred

குறிப்பிட்ட நிற ஐகானைக் கொண்ட மெசேஜ்கள்

has:yellow-star
has:orange-star
has:red-star
has:purple-star
has:blue-star
has:green-star
has:red-bang
has:orange-guillemet
has:yellow-bang
has:green-check
has:blue-info
has:purple-question

Gmailலில் மின்னஞ்சல்களை நட்சத்திரமிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

cc அல்லது bcc புலத்தில் உள்ள பெறுநர்கள்

cc:

bcc:

உதாரணம்: cc:david

குறிப்பிட்ட காலகட்டத்தில் அனுப்பிய மெசேஜ்களைத் தேடுதல்

after:

before:

older:

newer:

உதாரணம்: after:2004/04/16

உதாரணம்: after:04/16/2004

உதாரணம்: before:2004/04/18

உதாரணம்: before:04/18/2004

குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் பெற்ற மெசேஜ்களை d (நாள்), m (மாதம்) மற்றும் y (ஆண்டு) எழுத்துகளைப் பயன்படுத்தித் தேடலாம்

older_than:

newer_than:

உதாரணம்: newer_than:2d

டெலிவரி செய்யப்பட்ட மெசேஜ்களுக்கான மின்னஞ்சல் மூலம் தேடுதல்

deliveredto:

உதாரணம்: deliveredto:username@gmail.com

குறிப்பிட்ட வகையில் உள்ள மெசேஜ்கள்

category:primary
category:social
category:promotions
category:updates
category:forums
category:reservations
category:purchases

குறிப்பிட்ட பைட்டுகளைவிடப் பெரிய மெசேஜ்கள்

size:

உதாரணம்: size:1000000

குறிப்பிட்ட பைட்டுகளைவிடப் பெரிய/சிறிய மெசேஜ்கள்

larger:

smaller:

உதாரணம்: larger:10M

ஒரு வார்த்தையுடன் சரியாகப் பொருந்தும் முடிவுகள்

+

உதாரணம்: +unicorn

குறிப்பிட்ட மெசேஜ் ஐடி தலைப்பைக் கொண்ட மெசேஜ்கள்

rfc822msgid:

உதாரணம்: rfc822msgid:200503292@example.com

குறிப்பிட்ட லேபிள் உள்ள/இல்லாத மெசேஜ்கள்

has:userlabels

has:nouserlabels

முக்கியம்: லேபிள்கள் முழு உரையாடலுக்கும் இல்லாமல் ஒரு மெசேஜிற்கு மட்டுமே சேர்க்கப்படும்.

நீங்கள் முடக்கிய மெசேஜ்களைத் தேடுதல்

is:muted

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
251101234251405826
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false