மின்னஞ்சல்களின் பாதுகாப்பைச் சரிபார்த்தல்

சாத்தியமான சூழல்களில், உங்கள் மின்னஞ்சல்களைத் தானாக என்க்ரிப்ட் செய்து Gmail உங்கள் தகவலைப் பாதுகாக்கிறது. இதனால் அவை குறியீடாக மாற்றி அனுப்பப்படும். இந்தப் பாதுகாப்புக் கருவி டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி (TLS) எனப்படும். பிறர் உங்கள் மின்னஞ்சல்களைப் படிப்பதை இது தடுக்கும்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

மெசேஜ்களைப் பார்த்தல்

நீங்கள் கம்ப்யூட்டரிலோ Android சாதனத்திலோ பார்த்தால், இந்தப் பாதுகாப்புக் கருவியால் பாதுகாக்கப்படாத மின்னஞ்சல்களில் 'TLS இல்லை' No TLS என்று காட்டப்படும். இந்த ஐகான் திறந்த சிவப்பு நிறப் பூட்டு போல் தெரியும். வேறு யாரும் இந்த மின்னஞ்சலைப் படிக்கக்கூடும் என்பதே இதன் அர்த்தமாகும். 

'TLS இல்லை' திறந்த பூட்டு இவற்றுக்கு மட்டுமே தோன்றும்:

  • Gmail நுகர்வோர் கணக்குகள் (gmail.com)
  • S/MIME இயக்கப்பட்ட (ஹோஸ்ட் செய்யப்பட்டது) பிசினஸ் சந்தாக்கள்

நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழே வலதுபுறத்தில் உள்ள ‘எழுது’  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "பெறுநர்," "Cc," அல்லது "Bcc" புலத்தில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
  4. “தலைப்பு” புலத்தின் வலதுபுறத்தில் ‘TLS இல்லை’ No TLS என்பதைக் கண்டறியவும்.

முக்கியம்: அந்த ஐகான் காட்டப்பட்டால் என்கிரிப்ஷன் மூலம் மெசேஜ் பாதுகாக்கப்படாமல் இருக்கக்கூடும். வரிப் படிவங்கள், ஒப்பந்தங்கள் போன்ற இரகசிய ஆவணங்களை அந்த முகவரிக்கு அனுப்ப வேண்டாம்.

உங்களுக்கு வந்த மெசேஜ்கள்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மெசேஜைத் தட்டவும்.
  3. அனுப்புநரின் பெயருக்குக் கீழே ‘TLS இல்லை’ No TLS ஐகான் இருக்கிறதா எனப் பார்க்கவும்.

முக்கியம்: அந்த ஐகான் காட்டப்பட்டால் என்கிரிப்ஷன் மூலம் மெசேஜ் பாதுகாக்கப்படாமல் இருக்கக்கூடும்.

சில மின்னஞ்சல்கள் ஏன் என்க்ரிப்ஷன் செய்யப்படுவதில்லை?

இந்தப் பாதுகாப்புக் கருவி இயங்குவதற்கு அனுப்புநர், பெறுநர் இருவரின் மின்னஞ்சல் வழங்குநர்களும் எப்போதும் TLSஸைப் பயன்படுத்த வேண்டும். TLSஸைப் பயன்படுத்தி மின்னஞ்சல் டெலிவரி செய்தல் குறித்து மேலும் அறிக.

நான் பதிலளிக்கும் மெசேஜ்களில் "TLS இல்லை" எச்சரிக்கை காட்டப்படுகிறது

சில மின்னஞ்சல் வழங்குநர்கள் TLSஸைப் பயன்படுத்தி Gmail முகவரிகளுக்கு மெசேஜ்களை அனுப்புவார்கள். ஆனால் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை அவர்களால் பெற முடியாது.

இவற்றுக்குப் பதிலளித்தால், நீங்கள் Gmailலில் இருந்து மெசேஜ் அனுப்பினாலும் இந்த ஐகான் காட்டப்படலாம்.

"TLS இல்லை" எச்சரிக்கை தவறானது

மெசேஜ் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தாலும் "TLS இல்லை" எச்சரிக்கையைப் பின்வரும் சூழ்நிலைகளில் பெறுவீர்கள்:

  • என்க்ரிப்ஷன் கடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சல் வழங்குநருக்குச் செயல்படவில்லை
  • Gmail நேரடியாக மெசேஜை அனுப்பவில்லை. எடுத்துக்காட்டாக, name@yourdomain.com போன்ற பிரத்தியேகமான டொமைன் பெயரை நீங்கள் அமைத்திருந்தால் இந்த ஐகான் காட்டப்படக்கூடும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4684672381579133626
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false