Gmail பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

உங்கள் Gmail கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். 

உங்கள் கணக்கிற்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் யாரிடமாவது இருப்பதாகக் கருதினால், உடனடியாக உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

படி 1: பாதுகாப்புச் சரிபார்ப்பை நிறைவு செய்யவும்

பாதுகாப்புச் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் சென்று கணக்கு மீட்டெடுப்பு விருப்பங்களைச் சேர்த்தல், கூடுதல் கணக்குப் பாதுகாப்புக்காக இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல், உங்கள் கணக்கின் அனுமதிகளைச் சரிபார்த்தல் போன்றவற்றைச் செய்யவும்.

எனது பாதுகாப்புச் சரிபார்ப்பைத் தொடங்கு

படி 2: பாதுகாப்பு குறித்த இந்த Gmail உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

வலிமையான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்தல்

முதலில் வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி என்பதை அறிக.

பிறகு உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.

  1. உள்நுழைவு & பாதுகாப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. கடவுச்சொல் என்பதைத் தட்டவும்.
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
Gmail அமைப்புகளைச் சரிபார்த்தல்

நீங்கள் சரிபார்க்க முடிந்த சில அமைப்புகளின் மூலம் உங்கள் மின்னஞ்சல்களுக்கான அணுகல் வேறு யாரிடமும் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

  1. உலாவியின் மூலம் Gmailலைத் திறக்கவும். இந்த அமைப்புகளை Gmail ஆப்ஸிலிருந்து சரிபார்க்க முடியாது.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைத் தட்டவும்.
  3. அமைப்புகளைச் சரிபார்க்க, கீழே உள்ள பிரிவுகளைத் தட்டவும்.

'பொதுவானவை' பிரிவு

  • உங்கள் கையொப்பத்தில் எழுத்துகள் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளவும்.
  • உங்கள் விடுமுறைப் பதிலளிப்பானில் உள்ள வார்த்தைகள் சரியாக இருப்பதையும் இந்த அம்சம் உங்களுக்குத் தேவையில்லாத சமயத்தில் இயக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்துகொள்ள, அதனைச் சரிபார்க்கவும்.

'கணக்குகள் & இறக்குதல்' பிரிவு

  • பட்டியலிடப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் உங்களுடையவைதான் என்பதை உறுதிப்படுத்த, "இவராக அஞ்சலை அனுப்பு" பிரிவைச் சரிபார்க்கவும்.
  • அறியாத நபர்கள் எவருக்கும் உங்கள் கணக்கிற்கு அணுகல் இல்லை என்பதைப் பார்க்க "எனது கணக்கிற்கான அணுகலை வழங்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பட்டியலிடப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் உங்களுடையவைதான் என்பதை உறுதிப்படுத்த, "பிற கணக்குகளின் அஞ்சலைப் பார்க்கவும் (POP3 ஐப் பயன்படுத்தி)" பிரிவைச் சரிபார்க்கவும்.

'வடிப்பான்கள் & தடுக்கப்பட்ட முகவரிகள்' பிரிவு

  • உங்களுக்குத் தெரியாத கணக்கிற்கு மின்னஞ்சல் தானாக முன்னனுப்பப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள, "இவருக்கு முன்னனுப்பு" என்ற வடிப்பானைப் பயன்படுத்திச் சரிபார்க்கவும்.
  • மெசேஜ்களைத் தானாக நீக்கும் ("அதை நீக்கு") வடிப்பான்களை அமைத்துள்ளீர்களா என்று சரிபார்க்கவும்.

'முன்னனுப்புதல் மற்றும் POP/IMAP' பிரிவு

  • உங்கள் மெசேஜ்கள் அறியப்படாத கணக்கிற்கு முன்னனுப்பப்படவில்லை என்பதைச் சரிபார்க்கவும்.
  • POP அல்லது IMAP அமைப்புகள் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளவும்.
Gmail ஆப்ஸைப் புதுப்பித்தல்

உங்கள் ஆப்ஸைப் புதுப்பிக்கும்போது சமீபத்திய பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள்.

  1. App Storeரில் Gmail ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. புதுப்பி என்பதைத் தட்டவும். அதில் "திற" என்பது காட்டப்பட்டால் உங்களிடம் ஏற்கெனவே சமீபத்திய பதிப்பு உள்ளது என அர்த்தம்.
மோசடிகள், ஸ்பேம், ஃபிஷிங் ஆகியவற்றைப் புகாரளித்தல்

தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலை நீங்கள் பெற்றால் அதற்குப் பதிலளிக்கவோ அந்த மெசேஜில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவோ வேண்டாம்.

தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுப்பது அல்லது மோசடிகளைத் தவிர்ப்பது மற்றும் புகாரளிப்பது எப்படி என்பதை அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14294619806436425511
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false