Gmail மெசேஜ்கள் இல்லை

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

பின்வரும் சூழ்நிலைகளில் இந்தப் பக்கம் உங்கள் மின்னஞ்சல்களைக் கண்டறிய உங்களுக்கு உதவும்:

  • சில மின்னஞ்சல்கள் தவறுகின்றன.
  • மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸுக்கு வரவில்லை.
  • உங்கள் இன்பாக்ஸ் வெறுமையாக உள்ளது மற்றும் உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.

மேலே உள்ள படிகளைப் பின்பற்றிய பின்னரும் உங்கள் மின்னஞ்சலைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் அந்த மின்னஞ்சல் நீக்கப்பட்டிருக்கக்கூடும் அல்லது ஸ்பேமிற்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.

முதலில் இந்தப் பொதுவான திருத்தங்களை முயலவும்

இந்த வழிமுறைகளில் பலவற்றை Gmail ஆப்ஸ் மூலம் செய்ய முடியாது என்பதால் இவற்றை ஒரு கம்பூட்டரில் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறோம்.

மின்னஞ்சல் காப்பிடப்பட்டதா, நீக்கப்பட்டதா அல்லது ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டதா என்று பார்த்தல்

மின்னஞ்சல்கள் தற்செயலாகக் காப்பிடப்பட்டாலோ நீக்கப்பட்டாலோ ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டாலோ அவை இன்பாக்ஸைத் தவிர்க்கக் கூடும்.

உங்கள் இன்பாக்ஸில் இல்லாதவை உட்பட உங்கள் எல்லா மின்னஞ்சல்களையும் தேட இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. தேடல் பெட்டியில் கீழ்நோக்கிய அம்பை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. அனைத்து அஞ்சல் கீழ் தோன்றுதல் மெனுவைக் கிளிக் செய்து அஞ்சல் & ஸ்பேம் & நீக்கியவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. காணாமல் போன மின்னஞ்சலில் உள்ள சில தகவல்களை உள்ளிடவும். சரியான சொற்கள் அல்லது விவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் புலங்களைக் காலியாக விடவும்.
  5. பெட்டியின் கீழ்ப்பகுதியில் ‘தேடு’ தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தேடல் முடிவுகளை இன்னும் அதிகமாக வடிகட்ட தேடல் செயலிகள் என்பதையும் பயன்படுத்த முடியும்.

மின்னஞ்சல் வடிகட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்

குறிப்பிட்ட சில மின்னஞ்சல்களைத் தானாகக் காப்பிடும் அல்லது நீக்கும் வடிப்பான் ஒன்றை நீங்கள் உருவாக்கியிருக்கக்கூடும்.

வடிப்பான்களைச் சரிபார்க்கும் முறை:

  1. உலாவியில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் வடிப்பான்கள் மற்றும் தடுக்கப்பட்ட முகவரிகள் தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "நீக்கு", "இன்பாக்ஸைத் தவிர்" போன்ற குறிச்சொற்களைக் கொண்ட வடிப்பான்களைத் தேடவும்.
  5. வலதுபுறத்தில் திருத்து அல்லது நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் மின்னஞ்சல்கள் மற்றொரு கணக்கிற்கு முன்னனுப்பப்படுகின்றனவா என்பதைப் பார்க்கவும்

Gmailலில் முன்னனுப்புதலை அமைக்கும் போது அசல் மின்னஞ்சல்களைக் காப்பிடுவதா அல்லது நீக்குவதா என்பதை நீங்கள் தேர்வுசெய்ய முடியும்.

முன்னனுப்புதல் அமைப்புகளை எப்படிச் சரிபார்ப்பது என்பது இதோ:

  1. உலாவியில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் முன்னனுப்புதல் மற்றும் POP/IMAP தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "முன்னனுப்புதல்" பிரிவில் உள்வரும் அஞ்சலின் நகலை முன்னனுப்பு என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்று சரிபார்க்கவும். தேர்ந்தெடுத்திருந்தால் Gmailலின் நகலை இன்பாக்ஸில் வைத்திரு அல்லது Gmailலின் நகலை படித்தது எனக் குறி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: அறியாத முகவரிக்கு உங்கள் மின்னஞ்சல்கள் முன்னனுப்பப்படுகின்றன எனில் முன்னனுப்புதலை முடக்கு என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டு Gmail பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும். உங்களுக்குத் தெரியாத முன்னனுப்புதல் முகவரி இருப்பதைப் பார்த்தால் உங்கள் கணக்கிற்கு யாரோ ஒருவருக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் இருக்கக்கூடும்.

மற்றொரு கணக்கிலிருந்து அஞ்சலை Gmailலுக்கு முன்பகிர்கிறீர்கள் எனில் மின்னஞ்சல்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் அவை சிலவேளைகளில் ஸ்பேம் கோப்புறைக்கும் அனுப்பப்படுகின்றன. மின்னஞ்சல்களை Gmailலுக்கு முன்னனுப்புவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து அறிக.

வேறொரு மின்னஞ்சல் கிளையண்ட் மூலம் Gmail மின்னஞ்சல்களைப் படிக்கிறீர்களா என்பதை உங்கள் அமைப்புகளில் பார்க்கவும்

Apple Mail அல்லது Microsoft Outlook போன்ற வேறொரு மின்னஞ்சல் கிளையண்டில் Gmail மின்னஞ்சல்களைப் படிக்கிறீர்கள் எனில் நீங்கள் அமைத்துள்ள முன்னனுப்புதல் வகைக்கான கீழுள்ள படிகளைப் பின்பற்றவும்.

Microsoft Outlook அல்லது Apple Mail போன்ற மின்னஞ்சல் கிளையண்ட்களில் மின்னஞ்சல்களைப் படிக்க IMAPபைப் பயன்படுத்துகிறேன்

பிற அஞ்சல் கிளையண்டில் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் Gmailலிலுள்ள உங்கள் மின்னஞ்சல்கள் பாதிக்கப்படுமா என்பதை IMAPபை அமைக்கும்போது தேர்வுசெய்ய முடியும். எடுத்துக்காட்டாக Apple Mailலில் மின்னஞ்சலை நீக்கினால் அது Gmailலிலும் நீக்கப்படுமா என்பதைத் தேர்வுசெய்ய முடியும்.

பரிந்துரைக்கப்பட்ட IMAP அமைப்புகளைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். மின்னஞ்சல்கள் எப்போது நீக்கப்படும் என்பதை விளக்கும் ஏதேனும் அமைப்புகளைப் பார்க்கவும்.

Gmailலைப் படிக்க இணைய ஆப்ஸ், நீட்டிப்பு அல்லது செருகு நிரலைப் பயன்படுத்துகிறேன்

மின்னஞ்சல்கள் நீக்கப்படுகின்றன அல்லது காப்பிடப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த உங்கள் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.

  1. இணைக்கப்பட்ட ஆப்ஸ் & தளங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. "எனது கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்ஸ்" என்ற பிரிவில் ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் அங்கீகரிக்காத ஏதாவது இருந்தால் சேவை அதன் பிறகு அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

Microsoft Outlook போன்ற மின்னஞ்சல் கிளையண்டுகளில் மின்னஞ்சலைப் படிக்க POPபைப் பயன்படுத்துகிறேன்

நீங்கள் POPபைப் பயன்படுத்தினால் பிற அஞ்சல் கிளையண்டில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களால் Gmailலிலுள்ள உங்கள் மின்னஞ்சல்கள் பாதிக்கப்படுமா என்பதைத் தேர்வுசெய்ய முடியும். எடுத்துக்காட்டாக Microsoft Outlookகில் மின்னஞ்சலை நீக்கினால் அது Gmailலில் இருந்தும் நீக்கப்படுமா என்பதைத் தேர்வுசெய்ய முடியும்.

  1. முன்னனுப்புதல் மற்றும் POP/IMAP அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. POP இயக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த சரிபார்க்கவும்.
  3. "Gmailலின் நகலை நீக்கு" அல்லது "Gmailலின் நகலைக் காப்பிடு" என்பது இருப்பதைப் பார்த்தால் Gmailலின் நகலை இன்பாக்ஸில் வைத்திரு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: POP உடன் சமீபத்திய பயன்முறையைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்தச் சேவையகத்தில் மின்னஞ்சல்களை விடுமாறு உங்கள் மின்னஞ்சல் கிளையன்ட்டின் POP அமைப்புகளை மாற்றவும்.

மேலுள்ள படிகள் உதவவில்லை

நீங்கள் மேலுள்ள படிகளைப் பின்பற்றியும் உங்களால் மின்னஞ்சல்களைக் கண்டறிய முடியாவிட்டால் உங்களுக்கு உள்ள சிக்கலை கீழே தேர்ந்தெடுக்கவும்.

என்னால் இன்னும் குறிப்பிட்ட சில மின்னஞ்சல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

மேலே உள்ள படிகளைப் பின்பற்றிய பின்னரும் உங்கள் மின்னஞ்சலைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் அந்த மின்னஞ்சல் நீக்கப்பட்டிருக்கக்கூடும் அல்லது ஸ்பேமிற்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.

நீக்கிய மின்னஞ்சல்கள் பற்றிய குறிப்புகள்

  • நீங்கள் ஒரு மின்னஞ்சலை நீக்கினால் அது உங்கள் நீக்கியவை கோப்புறையில் 30 நாட்களுக்கு இருக்கும். 30 நாட்களுக்குப் பிறகு நீக்கியவையிலிருந்து மின்னஞ்சல்கள் நிரந்தரமாக நீக்கப்படும்.
  • Gmail மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் ஒரு நகல் மட்டுமே உள்ளது. லேபிள் அல்லது சாதனம் போன்ற ஒரு இடத்திலிருந்து மின்னஞ்சலை நீக்கிவிட்டால் அது Gmailலிலிருந்து முழுதாக நீக்கப்படும்.
  • Gmail ஆனது அசல் மின்னஞ்சலுக்கான அனைத்துப் பதில்களையும் ஒற்றை உரையாடலில் ஒன்றாகக் குழுவாக்கும். நீக்கு என்பதைக் கிளிக் செய்தாலோ தட்டினாலோ அசல் மின்னஞ்சல் மற்றும் ஏதேனும் பதில்கள் உட்பட முழு உரையாடலுமே நீக்கப்படும்.

ஸ்பேம் மின்னஞ்சல்கள் பற்றிய குறிப்புகள்

  • நீங்கள் ஒரு மின்னஞ்சலை ஸ்பேம் எனக் குறித்தால் அது ஸ்பேம் கோப்புறையில் 30 நாட்களுக்கு இருக்கும். 30 நாட்களுக்குப் பிறகு ஸ்பேமிலிருந்து மின்னஞ்சல்கள் நிரந்தரமாக நீக்கப்படும்.
  • மின்னஞ்சல்கள் தவறுதலாக ஸ்பேமிற்கு அனுப்பப்படுவதாக நினைத்தால் ஸ்பேமிலிருந்து மின்னஞ்சல்களை அகற்றுவது எப்படி என்பதை அறிக.
எனது மின்னஞ்சல்களில் பெரும்பாலானவற்றைக் காணவில்லை

உங்கள் கணக்கிலிருந்து மின்னஞ்சல்கள் காணாமல் போனால் உங்கள் அனுமதியின்றி யாரேனும் ஒருவர் அணுகலை பெற்றிருக்கக்கூடும். காணாமல் போன உங்கள் மின்னஞ்சல்களைக் கண்டுபிடிக்கவும் உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் எங்களால் உதவ முடியும்.

முக்கியமானவை: 

  • பணியிடம், பள்ளி, நிறுவனம் போன்றவற்றிற்கான Gmailலைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். 
  • Gmailலில் சேமிப்பகம் நிரம்பிவிட்டால் உங்களால் மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாது. உங்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்கள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
  • ஜூன் 1, 2021 முதல், உங்கள் கணக்கு செயலற்ற நிலையிலேயே இருந்தாலோ 24 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கு நீங்கள் சேமிப்பக வரம்பைவிட அதிகமாகப் பயன்படுத்தினாலோ உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் ஜூன் 1, 2023 முதல் நீக்கப்படலாம். Google சேமிப்பகம் செயல்படும் விதம் குறித்து மேலும் அறிக.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
2856125804504700636
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false