Gmail விளம்பரங்கள் வேலை செய்யும் விதம்

Gmailலைத் திறக்கும்போது உங்களுக்கு மிகவும் பயனுள்ள, தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து Gmailலில் காண்பிக்கும் செயல்முறை முற்றிலும் தானே இயங்குகிறது. நீங்கள் Googleளில் உள்நுழைந்திருக்கும்போது ஆன்லைனில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டின் அடிப்படையில் இந்த விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படுகின்றன. உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட உங்கள் Gmail மெசேஜ்களை ஸ்கேன் செய்யவோ படிக்கவோ மாட்டோம்.

தனியுரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் விருப்பங்கள்

உங்கள் Gmail & Google கணக்கு விவரம் உட்பட உங்கள் தனிப்பட்ட தகவலை Google விற்காது. நீங்கள் எங்களிடம் கூறியிருந்தால் தவிர உங்கள் தனிப்பட்ட தகவலை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.

நாங்கள் வழங்கும் விளம்பரங்களின் உள்ளடக்க வகைகள் குறித்து கவனமாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக இனம், மதம், பாலின நாட்டம், உடல்நலம், பாதுகாக்க வேண்டிய நிதி வகைகள் போன்ற அதிமுக்கியமான தகவலின் அடிப்படையில் விளம்பரங்களை Google இலக்குவைக்காது. Gmailலில் காட்டப்படும் விளம்பரங்கள் Gmail விளம்பரக் கொள்கைகளுக்கு உட்பட்டவை.

பிரத்தியேகமாக்கப்பட்ட Gmail விளம்பரங்களுக்காக தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்த வேண்டாம் எனில் விளம்பர அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று விளம்பரப் பிரத்தியேகமாக்கல் அமைப்பை முடக்கவும். நீங்கள் ஒப்புதலை நீக்கினாலும் Gmail விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். ஆனால் அவை உங்கள் Google கணக்குடன் Google இணைத்துள்ள தனிப்பட்ட தரவின் அடிப்படையில் இருக்காது.

உங்கள் தரவை Google எப்படிச் செயலாக்குகிறது என்பது பற்றியும் Googleளின் தனியுரிமைக் கொள்கை பற்றியும் மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8409602262893476339
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false