Gmailலில் தேடுதல்

தேடுவதற்கான வழிமுறை

முக்கியமானது: ஆஃப்லைன் பயன்முறையில் தேட முடியாது.

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் நீங்கள் தேட விரும்புவதை உள்ளிடவும்.
  3. Enter விசையை அழுத்தவும். மின்னஞ்சல்களின் பட்டியல் தோன்றும். 
  4. தேடலை இன்னும் துல்லியமாக்க, தேடல் பெட்டியின் கீழே உள்ள தேடல் வடிப்பான் சிப்களையோ தேடல் பெட்டியில் உள்ள தேடும் ஆப்பரேட்டர்களையோ பயன்படுத்தவும்.

விருப்பத்தேர்வு: உங்கள் தேடலை இன்னும் துல்லியமாக்க, ஒரு வடிப்பானைக் கிளிக் செய்யவும். கிடைக்கக்கூடிய தேடல் வடிப்பான்கள் பற்றி மேலும் அறிக.

தேடலுக்கு வடிப்பான்களைப் பயன்படுத்துதல்

தேடலைத் தொடங்கும்போதோ தேடலுக்குப் பிறகோ முடிவுகளை இன்னும் துல்லியமாக்க வடிப்பான்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கக்கூடிய தேடல் வடிப்பான்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் கீழே உள்ளன. பல வடிப்பான்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேடல் முடிவுகளை இன்னும் துல்லியமாக்கலாம். 

லேபிள்

  • நீங்கள் உருவாக்கிய குறிப்பிட்ட லேபிளுக்குள் எதை வேண்டுமானாலும் தேடலாம்.

அனுப்புநர்

  • குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட எதையும் தேடலாம். 

பெறுநர் 

  • குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் அனுப்பிய எதையும் தேடலாம். 

இணைப்பு

  • ஏதேனும் ஒர் இணைப்பு அல்லது Google Docs, Google Sheets, PDF போன்ற குறிப்பிட்ட வகை இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலைத் தேடலாம்.

தேதி

  • குறிப்பிட்ட தேதி அல்லது தேதி வரம்பில் அனுப்பப்பட்ட எதையும் தேடலாம்.

படிக்காதது

  • தற்சமயம் "படிக்காதது" எனக் குறிக்கப்பட்டுள்ள எதையும் தேடலாம். 

கேலெண்டர் அறிவிப்புகள் வேண்டாம்

  • Google Calendar அறிவிப்பு அல்லாத எதையும் தேடலாம்.

ஸ்பேம் & நீக்கியவையில் தேடுதல்

ஸ்பேம், நீக்கியவை ஆகியவற்றில் உள்ள மின்னஞ்சல்களை Gmail உங்கள் முடிவுகளில் காட்டாது.

ஸ்பேம், நீக்கியவை ஆகியவற்றிலுள்ள மின்னஞ்சல்களைத் தேடுவதற்கான வழிமுறை இங்கே உள்ளது:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள தேடல் பெட்டியில், கீழ் அம்புக்குறியை கீழ் தோன்றுதல் அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. "தேடு" என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவில் அஞ்சல் & ஸ்பேம் & நீக்கியவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தேடுவதற்கான தகவலை உள்ளிடவும்.
  5. கீழே தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிவுகள் எதுவும் வழங்கப்படாத தேடல்கள்

உங்கள் தேடல் அனுபவத்தை மேம்படுத்த, Gmailலில் உங்கள் தேடல்களுக்கு முடிவுகள் எதுவும் கிடைக்காதபோது தொடர்புடைய முடிவுகள் காட்டப்படுகின்றன.

தேடல் வரலாற்றை அழித்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியைக் கிளிக் செய்யவும். உங்களின் மிகச் சமீபத்திய தேடல் காட்டப்படலாம். 
  3. அந்தத் தேடலுக்குச் சென்று நீக்கு  ஐகானைக் கிளிக் செய்யவும்.

Google சேவையகங்களில் இருந்தும் உங்கள் தேடல் வரலாற்றை அழிக்கலாம். உங்கள் செயல்பாட்டை எவ்வாறு நீக்குவது என்பதை அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3209311904820570776
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false