Gmail அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள்:

  • மின்னஞ்சல் கையொப்பத்தைச் சேர்க்கலாம்
  • எந்த மின்னஞ்சல்கள் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கலாம்
  • மற்ற அமைப்புகளை மாற்றலாம்
பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லுதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

நீங்கள் மாற்றக்கூடிய அமைப்புகள்

குறிப்பு: சில Gmail அமைப்புகளைக் கம்ப்யூட்டரில் மட்டுமே மாற்ற முடியும்.

அனுப்புநர் படங்களைக் காட்டுதல்

இந்த அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது மெசேஜ்களைத் தேர்ந்தெடுக்க, அனுப்புநரின் சுயவிவரப் படத்தைத் தட்டவும். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் பதிலாக செக்பாக்ஸ்களைப் பார்ப்பீர்கள்.

  1. நீங்கள் Gmail ஆப்ஸைப் பதிவிறக்கியுள்ளதை உறுதிப்படுத்தவும்.
  2. iPhone/iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  3. மெனு மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. அனுப்புநர் படங்களைக் காட்டு என்பதை இயக்கவும்.
ஸ்வைப் செயல்கள்
ஒரு மெசேஜை இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யும்போது என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்:
  • காப்பிடு
  • நீக்கியவையில் சேர்
  • படித்தது அல்லது படிக்காதது எனக் குறி
  • ஒத்திவை
  • இதற்கு நகர்த்து...
  • ஏதுமில்லை

ஸ்வைப் செயல்களை மாற்றுதல்

குறிப்பு:உங்கள் அமைப்புகளில் "மெசேஜ்களை அகற்றும்போது இதைச் செய்ய விரும்புகிறேன்..." என்பதை நீங்கள் மாற்றாவிட்டால் இடது அல்லது வலது ஸ்வைப் செய்தால் இயல்பாகவே மெசேஜ் காப்பிடப்படும்.
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "இன்பாக்ஸ்" என்பதற்குக் கீழே உள்ள இன்பாக்ஸைப் பிரத்தியேகமாக்குதல் அதன் பிறகு அஞ்சலுக்கான ஸ்வைப் செயல்கள் என்பதைத் தட்டவும்.
  4. வலது ஸ்வைப் அல்லது இடது ஸ்வைப் என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் அமைக்க விரும்பும் ஸ்வைப் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்கிரீன் ரீடருடன் பிரத்தியேக ஸ்வைப்பைப் பயன்படுத்துதல்

நீங்கள் VoiceOverரைப் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பயன் செயல்கள் இன்னும் பயன்படும். ஒரு செயலைத் தேர்வுசெய்ய நீங்கள் விரும்பும் மெசேஜில் கவனம் செலுத்தி பிறகு கீழே ஸ்வைப் செய்யவும்.
குறிப்பு: உங்கள் VoiceOver ரோட்டரை "செயல்கள்" என்பதற்கு அமைத்திருக்க வேண்டும். iPhone, iPad, iPod touch ஆகியவற்றில் VoiceOver ரோட்டர் குறித்து மேலும் அறிக.
தனியுரிமை அமைப்புகள்

தொடர்புகள், படங்கள் போன்ற உங்கள் சாதனத்தில் உள்ள தகவலை Gmail பயன்படுத்தும் முறையைக் கட்டுப்படுத்தும் தனியுரிமை அமைப்புகள் உங்கள் iPhone/iPadல் உள்ளன.

Gmailலைப் பயன்படுத்தும்போது உங்கள் சாதனத்தின் தொடர்புகளையோ படங்களையோ அணுக வேண்டும் எனில் இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  3. தொடர்புகள் அல்லது படங்கள் எப்பதைத் தட்டவும்.
  4. Gmailலை இயக்கவும்.

உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸிற்கு மீண்டும் செல்வதன் மூலம் உங்களால் இந்த அமைப்புகளை எப்போதும் திரும்பப்பெறவோ மாற்றவோ முடியும்.

"Gmail ஆனது இதை அணுக விரும்பும்…"

முதல் முறையாகத் தொடர்புகளையோ படங்களையோ உங்கள் சாதனத்திலிருந்து ஒரு மெசேஜுக்குச் சேர்க்கும்போது இந்தக் கட்டளையைப் பார்ப்பீர்கள்.

சரி என்பதைத் தட்டி இவற்றைச் செய்ய Gmailலை அனுமதிப்பீர்கள்:

  • நீங்கள் மெசேஜ்களை எழுதும்போது உங்கள் சாதனத்திலிருந்து தொடர்புகளைத் தானே நிரப்ப
  • மெசேஜ்களில் படங்களைச் சேர்க்கும்போது மட்டும் உங்கள் பட லைப்ரரியை அணுகுதல்
கீழ்ப்புற வழிசெலுத்தலை மறைத்தல்

இந்த அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது ஸ்க்ரோல் செய்தால் கீழ்ப்புற வழிசெலுத்தல் பட்டி மறையும். இந்த அமைப்பு முடக்கத்தில் இருக்கும்போது ஸ்க்ரோல் செய்தாலும் கீழ்ப்புற வழிசெலுத்தல் பட்டி திரையில் தெரியும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10731118165785380210
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false