Gmail அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள்:

  • மின்னஞ்சல் கையொப்பத்தைச் சேர்க்கலாம்
  • எந்த மின்னஞ்சல்கள் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கலாம்
  • மற்ற அமைப்புகளை மாற்றலாம்
பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. பொது அமைப்புகள் அல்லது நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கைத் தட்டவும்.

நீங்கள் மாற்றக்கூடிய அமைப்புகள்

குறிப்பு: சில Gmail அமைப்புகளைக் கம்ப்யூட்டரில் மட்டுமே மாற்ற முடியும்.

பொது அமைப்புகள்

இங்கு மாற்றும் அனைத்து அமைப்புகளும் Gmail ஆப்ஸில் நீங்கள் சேர்த்துள்ள அனைத்து Google கணக்குகளுக்கும் பொருந்தும்.

  • இயல்பு அறிவிப்புச் செயல்: உங்கள் சாதனத்தின் அறிவிப்புப் பட்டியில் இருந்து விரிக்கப்பட்ட Gmail அறிவிப்பின் கீழ்ப்புறத்தில் தோன்றும் இயல்புச் செயலை நீக்கவும் அல்லது காப்பிடவும்.
  • உரையாடல் காட்சி: இந்த அமைப்பு இயக்கப்பட்டால் மின்னஞ்சல் தொடரிழையில் உள்ள அனைத்து மெசேஜ்களும் ஒன்றாகக் குழுவாக்கப்படுகின்றன.
  • ஸ்வைப் செயல்கள்: இந்த அமைப்பு இயக்கப்பட்டால் உங்கள் மெசேஜ்கள் பட்டியலில் உள்ள மெசேஜை நீக்க அதை இடது அல்லது வலது பக்கம் ஸ்வைப் செய்யவும். மெசேஜ்களைக் காப்பிட, நீக்க, படித்தது/படிக்காதது எனக் குறிக்க, லேபிளுக்கு நகர்த்த அல்லது ஒத்திவைக்க பொது அமைப்புகளில் வலது அல்லது இடது ஸ்வைப்பை மாற்ற முடியும். இயல்புநிலையாக உங்கள் இயல்புச் செயலாக நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்பைப் பொறுத்து மெசேஜ்களை நீக்க அவற்றை இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யலாம்.
  • அனுப்புநரின் படம்: இந்த அமைப்பு இயக்கப்படும்போது மெசேஜைத் தேர்ந்தெடுக்க அனுப்புநரின் படத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருக்கும் போது, மெசேஜைத் தேர்ந்தெடுக்க அதைத் தொட்டுப் பிடிக்கவும்.
  • இயல்புப் பதில் செயல்: உரையாடலிலுள்ள அனைவருக்கும் அல்லது கடைசியாக அனுப்பியவருக்கு மட்டும் பதிலளிக்குமாறு தேர்வுசெய்யவும்.
  • செய்திகளைத் தானாகப் பொருத்து: இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது படிப்பதை எளிதாக்குவதற்காக மெசேஜ்களின் அளவு மாற்றப்படும்.
  • தானாக அடுத்ததற்குச் செல்: நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பார்த்து முடித்ததும் பழைய மெசேஜ்கள், புதிய மெசேஜ் அல்லது உரையாடல் பட்டியலுக்குச் செல்லுமாறு தேர்வுசெய்யவும்.
  • Gmailலில் இணைய இணைப்புகளைத் திற: இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது வேகமான உலாவலுக்காக இணைப்புகள் உங்கள் Gmail ஆப்ஸில் திறக்கும்.
  • செயல் உறுதிப்படுத்தல்கள்: சில செயல்களைச் செய்ய முன் உறுதிப்படுத்துமாறு கேட்கும். மெசேஜ்களை நீக்குதல், காப்பிடுதல், அனுப்புதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த நீங்கள் கேட்கலாம்.
Gmail கணக்கு அமைப்புகள்

உங்களிடம் பல கணக்குகள் இருந்தால் இங்கு மாற்றும் அனைத்து அமைப்புகளும் நீங்கள் தேர்ந்தெடுத்த கணக்கிற்கு மட்டும் பொருந்தும்.

  • இன்பாக்ஸ் வகை: இயல்பு இன்பாக்ஸ் மற்றும் முதன்மை இன்பாக்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் தேர்வுசெய்யவும்.
  • இன்பாக்ஸ் வகைகள்: உங்கள் வகைகளைத் தேர்வுசெய்யவும்.
  • அறிவிப்புகள்: உங்கள் அறிவிப்பு அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  • இன்பாக்ஸ் ஒலி & அதிர்வு: ஒலி மற்றும் அதிர்வு அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  • கையொப்பம்: Gmail கையொப்பம் ஒன்றை உருவாக்கவும்.
  • விடுமுறை பதிலளிப்பான்: விடுப்பில் இருக்கிறேன் மெசேஜ் ஒன்றை உருவாக்கவும்.
  • ஸ்மார்ட் ரிப்ளைly: இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது, மின்னஞ்சல்களின் அடிப்புறத்தில் பரிந்துரைக்கப்பட்ட பதில்கள் தெரியக்கூடும்.
  • Gmailலை ஒத்திசை: இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது அறிவிப்புகளையும் புதிய மின்னஞ்சல்களையும் தானாகவே பெறுவீர்கள். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது புதுப்பிப்பதற்கு இன்பாக்ஸின் மேற்பகுதியிலிருந்து கீழே இழுக்க வேண்டும்.
  • ஒத்திசைக்க வேண்டிய அஞ்சலின் நாட்கள்: உங்கள் சாதனத்தில் நீங்கள் தானாகவே ஒத்திசைத்துச் சேமிக்க விரும்பும் அஞ்சலின் நாட்களின் எண்ணிக்கையைத் தேர்வுசெய்யவும். ஒத்திசைக்கப்படாத எந்த மெசேஜ்களும் ஆஃப்லைனில் கிடைக்காது.
  • லேபிள்களை நிர்வகி: வெவ்வேறு லேபிள்களுக்கான அறிவிப்பு மற்றும் ஒத்திசைவு அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  • இணைப்புகளைப் பதிவிறக்கு: இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் வைஃபையில் இருந்தால் இணைப்புகள் தானாகவே பதிவிறக்கப்படும். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் இணைப்புகளை நீங்களாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
  • படங்கள்: இந்த அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது உங்கள் மெசேஜ்களுக்குள் படங்கள் காண்பிக்கப்படும்.
  • ஸ்க்ரோல் செய்கையில் வழிசெலுத்தலை மறைத்தல்: இந்த அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது, ஸ்க்ரோல் செய்தால் கீழ்ப்புற வழிசெலுத்தல் பட்டி மறையும். இந்த அமைப்பு முடக்கத்தில் இருக்கும்போது ஸ்க்ரோல் செய்தாலும் கீழ்ப்புற வழிசெலுத்தல் பட்டி திரையில் தெரியும்.
Gmail அல்லாத முகவரிகளுக்கான POP & IMAP அமைப்புகள்

POP அல்லது IMAPயைப் பயன்படுத்தி Gmail அல்லாத முகவரியை Gmailலுக்கு முன்னனுப்பினால் சில அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.

  • கணக்கின் பெயர்: உங்கள் Gmail அல்லாத கணக்கில் ஒரு பெயரைச் சேர்க்கவும்.
  • உங்கள் பெயர்: நீங்கள் மற்றவர்களுக்கு அஞ்சல் அனுப்பும்போது தோன்றும் பெயரை மாற்றவும்.
  • ஒத்திசைக்கும் இடைவேளை: புதிய அஞ்சல் உள்ளதா என்பதை ஆப்ஸ் எப்படிப் சரிபார்க்கிறது என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் 'ஒருபோதும் வேண்டாம்' என்பதைத் தேர்வுசெய்தால் புதிய மெசேஜ்களைக் காண உங்கள் இன்பாக்ஸின் மேலிருந்து கீழே இழுக்க வேண்டும்.
  • சேவையக அமைப்புகள்: சேவையகப் பெயர், போர்ட்டுகள், பாதுகாப்பு வகை போன்ற உங்கள் வழங்குநரின் சேவையக விவரங்களுடன் Gmail ஆப்ஸ் எப்படி தொடர்புபடுத்துகிறது என்பதைத் தேர்வுசெய்யவும். Gmail ஆப்ஸில் உள்ள மெசேஜ்களை நீக்கும்போது உங்கள் கணக்கில் இருந்தும் அவற்றை நீக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். மற்ற வழங்குநருக்கான உங்கள் கடவுச்சொல் மாறினால் அதை இங்கே மாற்றலாம்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13687467003369286900
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false