Android சாதனத்தில் உள்ள Gmail ஆப்ஸில் பிழை

Android ஃபோன்/டேப்லெட்டில் Gmail ஆப்ஸைப் பயன்படுத்தும்போது பிழை ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய கீழே உள்ள படிகளைப் பயன்படுத்தவும்.

படி 1: ஆப்ஸைப் புதுப்பிக்கவும்

நீங்கள் Gmail ஆப்ஸின் பழைய பதிப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆப்ஸின் பழைய பதிப்புகளில் ஏற்படும் பல பிழைகள் சமீபத்திய பதிப்பில் சரிசெய்யப்பட்டுள்ளன.

Gmail ஆப்ஸைப் புதுப்பித்திடுக

படி 2: பிழையறிந்து திருத்தவும்

ஆப்ஸைப் புதுப்பித்த பிறகும் சிக்கல் சரியாகவில்லை எனில் மேலும் உதவி பெறும் வகையில், உங்களுக்குக் காட்டப்படும் பிழைச் செய்தியைக் கீழே தேர்வுசெய்யவும்.

"இணைப்பைப் பெறும்போது சிக்கல் ஏற்பட்டது"

இந்தப் பிழைச் செய்தி காட்டப்படுவதற்கான சில காரணங்கள்:

சாதனத்தின் தேதி/நேரத்தை நீங்கள் மாற்றியிருந்தால்

சாதனத்தில் தேதியும் நேரமும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

நீங்கள் பொது வைஃபை இணைப்பைப் பயன்படுத்தினால்

பொது இடத்தில் உள்ள இணைய இணைப்புடன் இணைக்கிறீர்கள் எனில் இணைப்பதற்கு முன் கூடுதல் படிகளை நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம். சாதனத்தில் Chrome, Safari போன்ற உலாவியைத் திறந்து, உள்நுழைய வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

Gmail ஆப்ஸில் Gmail அல்லாத முகவரியைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்

உங்கள் சேவையக அமைப்புகளைச் சரிபார்க்கவும்:

  1. Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில், மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. சிக்கல் உள்ள கணக்கைத் தட்டவும்.
  5. "சேவையக அமைப்புகள்" பிரிவில் POP/IMAP நெறிமுறைக்கான "உள்வரும் மின்னஞ்சலுக்கான அமைப்புகள்", "வெளிச்செல்லும் மின்னஞ்சலுக்கான அமைப்புகள்" ஆகியவற்றிலுள்ள தகவல்கள் சரியாக உள்ளனவா எனப் பார்க்கவும்.
"அளவுக்கதிகமான முறை புதுப்பிக்கப்பட்டது"

மின்னஞ்சல் வழங்குநர் அனுமதிப்பதைவிட அதிகமான முறை மின்னஞ்சலை ஒத்திசைக்கிறீர்கள் எனில் இந்தப் பிழைச் செய்தி காட்டப்படும்.

ஒத்திசைவு அமைப்புகளை மாற்ற:

  1. Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில், மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. சிக்கல் உள்ள கணக்கைத் தட்டவும்.
  5. "டேட்டா பயன்பாடு" பிரிவில், ஒத்திசைப்பதற்கான இடைவெளி என்பதைத் தட்டவும்.
  6. இன்னும் அதிகமான கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. சரி என்பதைத் தட்டவும்.
"கோரிய கோப்புறை இல்லை"

Gmail ஆப்ஸில் Gmail அல்லாத கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்தப் பிழைச் செய்தி காட்டப்படுவதற்கான சில காரணங்கள்:

  • நீங்கள் தேடும் கோப்புறை நீக்கப்பட்டிருப்பது. இதைச் சரிசெய்ய, கீழ்நோக்கி ஸ்வைப் செய்து Gmail ஆப்ஸைப் புதுப்பிக்கவும்.
  • அந்தக் கோப்புறைக்குள் கோப்புறைகள் இருப்பது. சில மின்னஞ்சல் சேவைகள் கோப்புறைகளுக்குள் கோப்புறைகள் இருப்பதை அனுமதிப்பதில்லை. இதைச் சரிசெய்ய, மொபைல் உலாவியிலிருந்து உங்கள் அஞ்சல் சேவையில் உள்நுழைந்து, ஏதேனும் துணைக் கோப்புறைகள் இருந்தால் அவற்றை நகர்த்தவும்.
  • Gmail ஆப்ஸிலிருந்து அந்தக் கோப்புறையை அணுக உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அனுமதி வழங்காமல் இருப்பது. இதைச் சரிசெய்ய, மின்னஞ்சல் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.
"அகப் பிழை"

"அகப் பிழை" எனக் காட்டப்பட்டால் அது தானாக மறைந்துவிடும்.

சில நிமிடங்களுக்குப் பிறகும் பிழைச் செய்தி தொடர்ந்து காட்டப்பட்டால்:

  • சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள, Google Workspace நிலை டாஷ்போர்டைப் பார்க்கவும். அனைத்தும் இயல்புநிலைக்குத் திரும்பியதும் டாஷ்போர்டை எங்கள் குழுவினர் புதுப்பிப்பார்கள்.
  • சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • ஆப்ஸை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
  • ஆப்ஸை உடனே நிறுத்தவும். ஃபோனில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து ஆப்ஸ் அல்லது ஆப்ஸ் நிர்வாகி அதன் பிறகு Gmail அதன் பிறகுஉடனே நிறுத்துஎன்பதைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12254083317377862235
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false