Gmail ஆப்ஸில் மற்றொரு மின்னஞ்சல் கணக்கைச் சேர்த்தல்

மின்னஞ்சலை முன்னனுப்புவதற்குப் பதிலாக, Yahoo, Outlook மற்றும் பிற மின்னஞ்சல் முகவரிகளின் மின்னஞ்சலைப் பார்க்கவும் அனுப்பவும் Gmail ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

Google அல்லாத பிற மின்னஞ்சல் கணக்கிற்கும், Google கணக்கிற்குக் கிடைக்கும் Gmail அம்சங்கள் பலவற்றைப் பயன்படுத்த முடியும்:

உங்கள் Gmail கணக்கில் 5 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம்.

மின்னஞ்சல் கணக்கைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உங்கள் Android iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸில் Gmail மற்றும் Gmail அல்லாத கணக்குகளைச் சேர்க்க முடியும். Gmail ஆப்ஸைப் பதிவிறக்கியுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

கணக்கைச் சேர்த்தல்
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. மற்றொரு கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. சேர்க்க விரும்பும் கணக்கின் வகையைத் தேர்வுசெய்யவும்.
    • Gmailலுக்கு, Google என்பதைத் தட்டவும்.
    • iCloud Mail, @me.com, @mac.com போன்ற கணக்குகளைப் பயன்படுத்த iCloud என்பதைத் தட்டவும்.
    • Windowsக்கான Outlook மூலம் பணி அல்லது பள்ளி மின்னஞ்சல்களைப் பார்த்தால் Outlook, Hotmail, Live ஆகியவற்றைத் தட்டவும்.
    • உங்கள் மின்னஞ்சல் சேவை அங்கே காட்டப்படவில்லை என்றால் பிற (IMAP) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் கணக்கைச் சேர்க்க, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேம் பாதுகாப்பு, மின்னஞ்சல் வகைகள் போன்ற அம்சங்களை Gmail அல்லாத பிற கணக்குகளில் பெற, Gmailifyயைப் பயன்படுத்திப் பார்க்கவும் என்பதைத் தட்டவும். உங்களின் பிற மின்னஞ்சல் கணக்குகளுக்கும் Gmail அம்சங்களைப் பெறலாம்.

கணக்கை அகற்றுதல்
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. இந்தச் சாதனத்தில் உள்ள கணக்குகளை நிர்வகி அதன் பிறகு இந்தச் சாதனத்திலிருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

மின்னஞ்சல் கணக்குகளுக்கு இடையே மாறுதல் அல்லது அவற்றின் அனைத்து மெசேஜ்களையும் பார்த்தல்

மின்னஞ்சல் கணக்குகளுக்கு இடையே மாறுதல்

முக்கியம்: Gmail ஆப்ஸில் மெசேஜ்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக இருக்கும்.

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை  திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தட்டவும்.
மின்னஞ்சல் கணக்குகள் அனைத்திலும் உள்ள மெசேஜ்களைப் பார்த்தல்
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டி அதன் பிறகு எல்லா இன்பாக்ஸ் என்பதைத் தட்டவும்.

Gmail ஆப்ஸில் கணக்கைச் சேர்ப்பது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கப்படவில்லை

முக்கியம்: Gmailலில் iCloud Mailலைச் சேர்க்க முயன்றால், iCloud Mail அமைப்புகளை வழங்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் பிற மின்னஞ்சல் சேவையில் இவற்றைச் சரிபார்க்கவும்:

  • சரியான சேவையகம், போர்ட் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்.
  • உள்நுழைய, குறிப்பிட்ட ஆப்ஸின் கடவுச்சொல் தேவைப்படுகிறதா?

உங்களுக்கு "மின்னஞ்சல் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை" என்ற மெசேஜ் காட்டப்படுகிறது

உங்களின் பிற மின்னஞ்சல் சேவையில் மெசேஜ்களுக்கான அதிகபட்சப் பாதுகாப்பு அளவு ஆதரிக்கப்படவில்லை என்றால் இந்த எச்சரிக்கையை உங்களுக்குக் காட்டுவோம்.

சிக்கல் கடுமையாக இல்லை என்றால், பாதுகாப்பற்ற இணைப்பின் மூலம் உங்கள் கணக்கைச் சேர்ப்பதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்:

  1. "பாதுகாப்பு விசை" கீழ்த்தோன்றல் மெனுவைத் தட்டவும்.
  2. ஏதுமில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

முக்கியம்: இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால், உங்கள் மின்னஞ்சல் சேவைக்கான உங்கள் இணைப்பு என்க்ரிப்ஷன் செய்யப்படாது. அதாவது, நீங்கள் சேர்த்துள்ள கணக்கிற்கான பயனர்பெயர், கடவுச்சொல் அல்லது மெசேஜ் தகவலைப் பிறர் பார்க்கக்கூடும்.

சான்றிதழ் பிழை ஏற்பட்டுள்ளது

பாதுகாப்பு இணைப்பை உங்களின் பிற மின்னஞ்சல் சேவை ஆதரிக்கவில்லை என்றால், சான்றிதழ் தொடர்பான பிழைச் செய்தி காட்டப்படலாம். சான்றிதழ் பிழைச் செய்திகளுக்கான உதாரணங்கள்:

  • "சான்றிதழ் நம்பகமானதாக இல்லை"
  • "சான்றிதழ் காலாவதியாகிவிட்டது அல்லது இன்னும் தகுதிபெறவில்லை"
  • "சான்றிதழ் மாற்றப்பட்டது"
  • "சான்றிதழின் தலைப்பும் ஹோஸ்ட்பெயரும் பொருந்தவில்லை"
  • "சான்றிதழ் இல்லை"

பிழையைச் சரிசெய்ய, உங்களின் பிற மின்னஞ்சல் சேவையிடம் புகாரளிக்கலாம்:

  1. பிழைச் செய்தியில் மேலும் தகவல்கள் என்பதைத் தட்டவும்.
  2. மேல் வலதுபுறத்தில், மேலும் மேலும்அதன் பிறகு பகிர் என்பதைத் தட்டவும்.
    • உங்களின் பிற மின்னஞ்சல் சேவையின் தொடர்புத் தகவலை நீங்கள் தேட வேண்டியிருக்கலாம்.

ஏதோ தவறாகிவிட்டது, அல்லது சேவையகத்தின் இணைப்பை Gmailலால் திறக்க முடியவில்லை

Gmail ஆப்ஸில் Exchange, POP போன்ற IMAP அல்லாத கணக்குகளைச் சேர்க்க முடியாது. வேறொரு வகைக் கணக்கைச் சேர்க்கிறீர்கள் என்றால் IMAP இயக்கப்பட்டுள்ளதை உங்கள் மின்னஞ்சல் வழங்குநரிடம் சரிபார்த்துக் கொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

iPhone & iPad Android
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17057329410225453303
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false