Gmail கணக்கு ஒன்றை உருவாக்குதல்

Gmailலுக்குப் பதிவு செய்ய Google கணக்கை உருவாக்கவும். Gmailலிலும் YouTube, Google Play, Google Drive போன்ற பிற Google தயாரிப்புகளிலும் உள்நுழைய இந்தப் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தலாம்.

Gmail கணக்கிற்குப் பதிவு செய்தல்

  1. Google கணக்கு உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. திரையில் உள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் கணக்கை அமைக்கவும்.
  4. Gmailலில் உள்நுழைய நீங்கள் உருவாக்கிய கணக்கைப் பயன்படுத்தவும்.

கணக்கை உருவாக்கு

எனக்குத் தேவையான பயனர்பெயர் எடுத்துக்கொள்ளப்பட்டது

நீங்கள் கோரிய பயனர்பெயர் பின்வருமாறு இருந்தால் குறிப்பிட்ட Gmail முகவரியை உங்களால் பெற முடியாது:

  • ஏற்கனவே பயன்படுத்தப்பட்டால்
  • ஏற்கனவே உள்ள பயனர்பெயருடன் ஒத்ததாக இருந்தால் (எடுத்துக்காட்டாக, example@gmail.com ஏற்கனவே உள்ளது, examp1e@gmail.com முகவரியை உங்களால் பயன்படுத்த முடியாது)
  • கடந்தகாலத்தில் யாரோ பயன்படுத்தி பின் நீக்கிவிட்ட பயனர்பெயரைப் போல் உள்ளது
  • ஸ்பேமைத் தடுப்பதற்கு அல்லது துஷ்பிரயோகத்தால் Googleளால் தடைசெய்யப்பட்டுள்ளது

யாரோ என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்கின்றனர்

யாரோ Gmail முகவரியை உருவாக்கி உங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய முயல்வதாக நினைத்தால், நீங்கள்:

துரதிருஷ்டவசமாக, ஆள்மாறாட்டம் தொடர்பாக மூன்றாம் தரப்பினரிடையே மத்தியஸ்தமாக Gmail ற்க இயலாது. Gmail பயன்பாட்டு விதிமுறைகளில் மேலும் அறிக.

Gmailலை உங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்துதல்

பிசினஸிற்கு Gmailலைப் பயன்படுத்த விரும்பினால் தனிப்பட்ட Google கணக்கைவிட Google Workspace கணக்கைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கக்கூடும். Google Workspace இல் இவை அடங்கும்:

  • உங்கள் நிறுவனத்தின் டொமைன் பெயரைப் பயன்படுத்தும் தொழில்முறையிலான, விளம்பரம் இல்லாத Gmail கணக்கு (உதாரணமாக, susan@example.com).
  • பணியாளர்களின் கணக்குகளுக்கான உரிமை, அதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் கணக்குகள், மின்னஞ்சல்கள், ஃபைல்கள் ஆகியவற்றை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
  • நேரடிப் பிரதிநிதியிடம் இருந்து 24/7 ஃபோன், மின்னஞ்சல் மற்றும் உரையாடல் உதவி.
  • அதிகமான Gmail மற்றும் Google Drive சேமிப்பிடம்.
  • தொலைந்து போன சாதனங்களைத் தொலைவில் இருந்தே ரிமோட் வைப் செய்தல் போன்ற உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கான மொபைல் சாதன மேலாண்மை.
  • மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகள்.

Google Workspace குறித்து மேலும் அறியவும் அல்லது கட்டணமற்ற உபயோகத்தைத் துவக்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
203911059780108238
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false