கடைசியாக நடந்த கணக்குச் செயல்பாடு

Gmail கணக்கைப் பயன்படுத்திய தேதிகள் மற்றும் நேரங்கள் உட்பட உங்கள் உள்நுழைவு விவரத்தைப் பார்க்கலாம். உங்கள் கணக்கை அணுக உபயோகித்த IP முகவரிகளையும் பார்க்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கணக்கின் செயல்பாடுகளைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் உள்ள விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் ஒட்டுமொத்த Google கணக்கின் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் பார்க்க, பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பக்கத்திற்கும் செல்லலாம்.

"இந்தக் கணக்கில் செய்த செயல்பாடுகள்" பக்கத்தில் காட்டப்படும் தகவல்கள்

"இந்தக் கணக்கில் செய்த செயல்பாடுகள்" பக்கத்தில் கீழே உள்ள தகவல்கள் அடங்கிய உங்கள் உள்நுழைவு விவரங்கள் காட்டப்படும்.

தொடர்ச்சியான அமர்வுத் தகவல்

வேறொரு சாதனம், உலாவி அல்லது இருப்பிடத்தில் இருந்து Gmailலில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைத் "தொடர்ச்சியான அமர்வுத் தகவல்" பகுதியில் பார்க்க முடியும்.

அணுகல் வகை

எந்த உலாவி, சாதனம் அல்லது அஞ்சல் சேவையகத்தில் (POP, IMAP போன்றவை) இருந்து Gmailலை அணுகினீர்கள் என்ற விவரம் "அணுகல் வகை" பிரிவில் காட்டப்படும்.

ஏதேனும் ஆப்ஸை நீங்கள் அங்கீகரித்திருந்தால் மூன்றாம் தரப்பு ஆப்ஸின் இருப்பிடம் (IP முகவரி) காட்டப்படும். 

இருப்பிடம் (IP முகவரி)

உங்கள் Gmail கணக்கைக் கடைசியாக அணுகிய பத்து IP முகவரிகளையும் அவற்றின் தோராயமான இருப்பிடங்களையும் பார்க்க முடியும்.

உங்கள் கணக்கில் சந்தேகிக்கும் செயல்பாட்டைப் பற்றிய எச்சரிக்கையைப் பெற்றால், சந்தேகிக்கக்கூடியது என லேபிள் இடப்பட்டுள்ள 3 கூடுதல் IP முகவரிகள் வரை காண முடியும்.

உங்கள் செயல்பாட்டில் உள்ள பல IP முகவரிகளையும் இருப்பிடங்களையும் பார்ப்பதற்கான சில காரணங்கள்:

  • Apple Mail அல்லது Microsoft Outlook போன்ற பிற சேவைகளில் உங்கள் அஞ்சலைப் படிக்க POP அல்லது IMAP பயன்படுத்தினால், இந்த இருப்பிடத் தகவல்களும் சேர்த்து வழங்கப்படும்.
  • Mail Fetcher பயன்படுத்தினால், Google சேவையகம் மூலம் நீங்கள் மெசேஜ்களைப் பெறுவதால் Google IP காட்டப்படும்.
  • ஃபோன் அல்லது டேப்லெட்டில் Gmail பயன்படுத்தினால், உங்கள் இணையச் சேவை அல்லது மொபைல் சேவை வழங்குநரின் இருப்பிடம் காட்டப்படலாம். இது நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் இருந்து தூரமானதாக இருக்கலாம். சேவை வழங்குநரின் பெயர் உங்களுடையதுடன் பொருந்தும் பட்சத்தில் இது வழக்கத்திற்கு மாறாக நடக்கும் ஒன்றல்ல.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

என்னுடைய கணக்கை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன்

இருப்பிடம் அல்லது அணுகல் வகை போன்ற செயல்பாடு உங்களுக்குத் தெரியாததாக இருந்தால், ஃபிஷ்ஷிங் அல்லது மால்வேர் மூலம் வேறு யாராவது உங்கள் கணக்கை அணுகி இருக்கலாம்.

  1. உடனடியாக உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.
  2. உங்கள் கணக்கைப் பாதுகாக்க, Gmail பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12452676269218046673
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false