Gmailலில் இன்பாக்ஸ் வகைகள் & பிரிவுகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

‘சமூகம்’ அல்லது ‘விளம்பரங்கள்‘ போன்று உங்கள் மின்னஞ்சல்களைப் பல்வேறு இன்பாக்ஸ் பிரிவுகளாக வரிசைப்படுத்தலாம். இதனால் Gmailலைத் திறக்கும்போது அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்காது.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

பிரிவுகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "இன்பாக்ஸ்" என்பதற்குக் கீழே உள்ள இன்பாக்ஸைப் பிரத்தியேகமாக்குதல் அதன் பிறகு இன்பாக்ஸ் வகைகள் என்பதைத் தட்டவும்.
  4. வகைகளைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும்.

மெசேஜ்களை நகர்த்துதல்

புதிய வகைக்கு மெசேஜை நகர்த்துதல்
  1. iPhone/iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மெசேஜைத் திறக்கவும். (நீங்கள் இன்பாக்ஸிலேயே இருக்க வேண்டும் எனில் அனுப்புநரின் சுயவிவரப் படத்தைத் தட்டவும்).
  3. மேலே வலதுபுறத்தில் உள்ள ‘மேலும்’ 더보기 அதன் பிறகு இதற்கு நகர்த்து என்பதைத் தட்டவும்.
  4. புதிய வகையைத் தட்டவும்.
‘முதன்மை’ வகையில் மெசேஜ்கள் காட்டப்படுமாறு செய்தல்

இயல்பு இன்பாக்ஸ் தளவமைப்பைப் பயன்படுத்தினால் நீங்கள் 'நட்சத்திரமிடும்' Star மெசேஜ்கள் இதற்கு முன்பு அவை இருந்த வகையிலும் ‘முதன்மை’ வகையிலும் காட்டப்படும்.

  1. iPhone/iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. இன்பாக்ஸில் இருந்தோ மெசேஜைத் திறந்தோ 'நட்சத்திரமிடு' Star என்பதைத் தட்டவும்.

ஒவ்வொரு வகைக்கும் அறிவிப்புகளை மாற்றுதல்

ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு அறிவிப்புகளைத் தேர்வுசெய்யலாம். அறிவிப்புகள் பற்றி மேலும் அறிக.

இன்பாக்ஸில் உள்ள மெசேஜ்களின் எண்ணிக்கையைப் பார்த்தல்

Gmailலில் மெசேஜிற்கு அனுப்பும் பதில்கள் உரையாடல்களாகக் குழுவாக்கப்படும். இன்பாக்ஸில் உரையாடல்களின் எண்ணிக்கையைப் பார்க்கலாம் ஆனால் மெசேஜ்களைப் பார்க்க முடியாது.

இன்பாக்ஸில் எத்தனை மெசேஜ்கள் உள்ளன எனப் பார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும். மெசேஜ்களின் மொத்த எண்ணிக்கையை Gmail ஆப்ஸில் கண்டுபிடிக்க முடியாது.
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள்அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே "உரையாடல் பார்வை" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
  4. உரையாடல் பார்வையை முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இன்பாக்ஸிற்கு மீண்டும் சென்று மெசேஜ்களின் எண்ணிக்கையைப் பார்க்கவும். உங்களிடம் பல்வேறு பிரிவுகள் அல்லது வகைகள் இருந்தால் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் மெசேஜ்களின் எண்ணிக்கையை ஒன்றாகச் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  7. முடிந்ததும் அமைப்புகளுக்கு மீண்டும் சென்று "உரையாடல் பார்வை" என்பதை இயக்கவும்.

இன்பாக்ஸ் வகைகளை இயக்க முடியவில்லை

இன்பாக்ஸில் 2,50,000க்கும் அதிகமான மெசேஜ்கள் இருந்தால் இன்பாக்ஸ் வகைகள் என்பதை இயக்க முடியாது.

இந்த வரம்பிற்குக் கீழே கொண்டு வர, மெசேஜ்களைக் காப்பகப்படுத்தலாம் அல்லது நீக்கலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5073257232219720576
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false