Gmailலில் இன்பாக்ஸ் வகைகள் & பிரிவுகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

‘சமூகம்’ அல்லது ‘விளம்பரங்கள்‘ போன்று உங்கள் மின்னஞ்சல்களைப் பல்வேறு இன்பாக்ஸ் பிரிவுகளாக வரிசைப்படுத்தலாம். இதனால் Gmailலைத் திறக்கும்போது அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்காது.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

வகைப் பிரிவுகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இன்பாக்ஸ் தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "இன்பாக்ஸ் வகை" பிரிவில் இயல்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கவனத்திற்கு: அனைத்துத் தாவல்களையும் மறைக்க, மற்றொரு இன்பாக்ஸ் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. "வகைகள்" பிரிவில், நீங்கள் காட்ட விரும்பும் தாவல்களின் பெட்டிகளைத் தேர்வுசெய்யவும். கவனத்திற்கு: உங்களால் புதிய தாவல்களை உருவாக்க முடியாது; ஏற்கெனவே உள்ள தாவல்களைக் காட்டவோ மறைக்கவோ மட்டுமே முடியும்.
  6. கீழே சென்று மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: அறிவிப்புகளை இயக்கியிருந்தால் உங்கள் ‘முதன்மை’ வகையிலுள்ள மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகளை மட்டுமே பெறுவீர்கள்.

மின்னஞ்சலை ஒரு புதிய வகைக்கு நகர்த்துதல்

1. மின்னஞ்சலை ஒரு புதிய வகையில் சேர்க்க, அதன் வகைப் பிரிவில் அதை இழுத்து விடவும்.
2. அதன் அனுப்புநர் இனி அனுப்பும் அனைத்து மின்னஞ்சல்களையும் அதே வகைக்கு நகர்த்த, கீழே இடது பக்கம் தோன்றும் பாப்-அப் அறிவிப்பில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.  

ஒரு வகையிலுள்ள மின்னஞ்சல்களைக் கண்டறிதல்

ஒரு வகையிலுள்ள மின்னஞ்சல்களைக் கண்டறிய முடியவில்லை

காப்பகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்கள் அவற்றுக்கான வகைப் பிரிவுகளில் காட்டப்படாது.

நீங்கள் காப்பகப்படுத்திய மின்னஞ்சல்களைக் கண்டறிய, பக்கத்தின் மேலே உள்ள பெட்டியில் மின்னஞ்சலைத் தேடவும்.

வகையைத் தேடுதல்

தேடல் வார்த்தையை உள்ளிடும் முன்பு category: என டைப் செய்து அதன்பிறகு வகையின் பெயரை டைப் செய்யவும்.


எடுத்துக்காட்டாக, category:social party என டைப் செய்தால் Social பிரிவில் “party” என்ற சொல் அடங்கிய மின்னஞ்சல்கள் காட்டப்படும்.


தற்போது வகையைப் பிரிவாக இயக்காவிட்டாலும் அவற்றைத் தேடல்களில் பயன்படுத்தலாம்:

  • Primary—உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களும் பிற பிரிவுகளில் காட்டப்படாத மெசேஜ்களும் அடங்கும்.
  • Social—சமூக வலைத்தளங்களின் மெசேஜ்களும் மீடியாவைப் பகிர்வதற்கான தளங்களின் மெசேஜ்களும் அடங்கும்.
  • Promotions—டீல்கள், சலுகைகள், பிற விளம்பரங்கள் ஆகியவை குறித்த மின்னஞ்சல்கள் அடங்கும்.
  • Updates—அறிவிப்புகள், உறுதிப்படுத்தல்கள், ரசீதுகள், பில்கள், அறிக்கைகள் ஆகியவை குறித்த மின்னஞ்சல்கள் அடங்கும்.
  • Forums—ஆன்லைன் குழுக்களிலிருந்து வரும் மெசேஜ்கள், கலந்துரையாடல் மன்றங்கள், அஞ்சல் பட்டியல்கள் ஆகியவை குறித்த மின்னஞ்சல்கள் அடங்கும்.
  • Reservations—விமான உறுதிப்படுத்தல்கள், ஹோட்டல் முன்பதிவுகள், உணவக முன்பதிவுகள் ஆகியவை குறித்த மின்னஞ்சல்கள் அடங்கும்.
  • Purchases— ஆர்டர், ஷிப்பிங், டெலிவரி ஆகியவை குறித்த மின்னஞ்சல்கள் அடங்கும்.

உதவிக்குறிப்பு: “Reservations”, “Purchases” ஆகியவற்றைப் பிரிவுகளாக அமைக்க முடியாது. ஆனால் தேடல்களிலும் வடிப்பான்களிலும் பயன்படுத்தலாம்.

விளம்பரம் தொடர்பான மின்னஞ்சல்கள் தொகுக்கப்படுவதை முடக்குதல்

இயல்பு இன்பாக்ஸைப் பயன்படுத்தினால் விளம்பரம் தொடர்பான மின்னஞ்சல்கள் Gmailலில் 'விளம்பரங்கள்' பிரிவில் காட்டப்படும்.

இந்த அமைப்பை முடக்குவதற்கான வழிமுறை:

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள 'அமைப்புகள்'  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. இன்பாக்ஸ் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு 'விளம்பரங்கள் பிரிவில் முக்கியமான விளம்பர மின்னஞ்சல்களைத் தொகுப்பதை இயக்கு' என்பதைத் தேர்வுநீக்கவும்.

Gmail விளம்பரங்கள் செயல்படும் விதம் குறித்து மேலும் அறிக.

ஒவ்வொரு வகைக்கும் அறிவிப்புகளை மாற்றுதல்

ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு அறிவிப்புகளைத் தேர்வுசெய்யலாம். அறிவிப்புகள் பற்றி மேலும் அறிக.

இன்பாக்ஸில் உள்ள மெசேஜ்களின் எண்ணிக்கையைப் பார்த்தல்

Gmailலில் மெசேஜிற்கு அனுப்பும் பதில்கள் உரையாடல்களாகக் குழுவாக்கப்படும். இன்பாக்ஸில் உரையாடல்களின் எண்ணிக்கையைப் பார்க்கலாம் ஆனால் மெசேஜ்களைப் பார்க்க முடியாது.

இன்பாக்ஸில் எத்தனை மெசேஜ்கள் உள்ளன எனப் பார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும். மெசேஜ்களின் மொத்த எண்ணிக்கையை Gmail ஆப்ஸில் கண்டுபிடிக்க முடியாது.
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள்அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே "உரையாடல் பார்வை" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
  4. உரையாடல் பார்வையை முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இன்பாக்ஸிற்கு மீண்டும் சென்று மெசேஜ்களின் எண்ணிக்கையைப் பார்க்கவும். உங்களிடம் பல்வேறு பிரிவுகள் அல்லது வகைகள் இருந்தால் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் மெசேஜ்களின் எண்ணிக்கையை ஒன்றாகச் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  7. முடிந்ததும் அமைப்புகளுக்கு மீண்டும் சென்று "உரையாடல் பார்வை" என்பதை இயக்கவும்.

இன்பாக்ஸ் வகைகளை இயக்க முடியவில்லை

இன்பாக்ஸில் 2,50,000க்கும் அதிகமான மெசேஜ்கள் இருந்தால் இன்பாக்ஸ் வகைகள் என்பதை இயக்க முடியாது.

இந்த வரம்பிற்குக் கீழே கொண்டு வர, மெசேஜ்களைக் காப்பகப்படுத்தலாம் அல்லது நீக்கலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17398370352427805160
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false