Gmailலில் இன்பாக்ஸ் வகைகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உங்கள் இன்பாக்ஸை ஒழுங்கமைத்துப் பராமரிக்க, இன்பாக்ஸ் வகைகளைப் பயன்படுத்தலாம். இன்பாக்ஸ் வகைகள் மூலம், Gmail உங்கள் மின்னஞ்சல்களைத் தானாகவே சமூக வலைதள அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்ற வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தும்.
பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

இன்பாக்ஸ் வகைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

"இயல்பு" என்ற இன்பாக்ஸ் வகையை இயக்கினால், உங்கள் இன்பாக்ஸில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளை நீங்கள் காட்டலாம்:

  • முதன்மை: உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களும் பிற பிரிவுகளில் காட்டப்படாத மின்னஞ்சல்களும் இதில் காட்டப்படும்.
  • சமூகம்: சமூக வலைதளங்களின் மின்னஞ்சல்களும் மீடியாவைப் பகிர்வதற்கான தளங்களின் மின்னஞ்சல்களும் இதில் காட்டப்படும்.
  • விளம்பரங்கள்: டீல்கள், சலுகைகள், பிற விளம்பர மின்னஞ்சல்கள் இதில் காட்டப்படும்.
  • அறிவிப்புகள்: உடனடி கவனம் தேவைப்படாத தானியங்கு உறுதிப்படுத்தல்கள், அறிவிப்புகள், அறிக்கைகள், நினைவூட்டல்களின் மின்னஞ்சல்கள் இதில் காட்டப்படும்.
  • மன்றங்கள்: ஆன்லைன் குழுக்கள், கலந்துரையாடல் மன்றங்கள், அஞ்சல் பட்டியல்கள் ஆகியவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் காட்டப்படும்.
உதவிக்குறிப்பு: இன்பாக்ஸில் 2,50,000க்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் இருந்தால், இன்பாக்ஸ் வகைகளை உங்களால் இயக்க முடியாது. குறிப்பிட்ட வரம்பிற்குக் கீழ் செல்ல, உங்கள் மின்னஞ்சல்களைக் காப்பகப்படுத்தவும் அல்லது நீக்கவும்.

இன்பாக்ஸ் வகைகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனுவை தட்டி அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "இன்பாக்ஸ்" என்பதன் கீழேயுள்ள இன்பாக்ஸ் வகை என்பதைத் தட்டவும்.
  4. இயல்பு இன்பாக்ஸ் என்பதைத் தட்டவும்.
  5. மேல் இடதுபுறத்தில் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. இன்பாக்ஸைப் பிரத்தியேகமாக்குதல் அதன் பிறகு இன்பாக்ஸ் வகைகள் என்பதைத் தட்டவும்.
  7. நீங்கள் காட்ட விரும்பும் வகைகளின் பெட்டிகளைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு அறிவிப்புகளைத் தேர்வுசெய்யலாம். Gmail அறிவிப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இன்பாக்ஸ் வகைகளை முடக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனுவை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. இன்பாக்ஸைப் பிரத்தியேகமாக்குதல் அதன் பிறகு இன்பாக்ஸ் வகைகள் என்பதைத் தட்டவும்.
  6. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளைத் தேர்வுநீக்கவும்.
  7. இன்பாக்ஸ் வகைகள் அனைத்தையும் மறைக்க:

ஒரு வகையிலுள்ள மின்னஞ்சல்களைக் கண்டறிதல்

முக்கியம்: காப்பகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்கள் இன்பாக்ஸ் வகைகளில் காட்டப்படாது. காப்பகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்களைக் கண்டறிய, Gmailலில் "எல்லா அஞ்சல்களும்" லேபிளுக்குச் செல்லவும்.

  1. மேற்புறத்தில் உள்ள தேடல் பட்டியில் category: என்று டைப் செய்யவும்.
  2. தேடல் வார்த்தைக்கு முன்பாக வகையின் பெயரை டைப் செய்யவும்:
    • முதன்மை
    • சமூகம்
    • அறிவிப்புகள்
    • மன்றங்கள்
    • முன்பதிவுகள்
    • பர்ச்சேஸ்கள்

உதாரணமாக, category:சமூகம் பார்ட்டி என்று டைப் செய்தால் “சமூகம்” பிரிவில் “பார்ட்டி” என்ற வார்த்தை அடங்கிய மின்னஞ்சல்கள் காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் "முன்புதிவுகள்" அல்லது "பர்ச்சேஸ்கள்" வகைகளுடன் பொருந்தும் மின்னஞ்சல்களைத் தேடலாம், ஆனால் உங்கள் இன்பாக்ஸில் இந்த வகைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

  • முன்பதிவுகள்: விமான உறுதிப்படுத்தல்கள், ஹோட்டல் முன்பதிவுகள், உணவக முன்பதிவுகள் தொடர்பான மின்னஞ்சல்கள் இதில் காட்டப்படும்.
  • பர்ச்சேஸ்கள்: ஆர்டர், ஷிப்பிங், டெலிவரி ஆகியவற்றுக்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்கள் இதில் காட்டப்படும்.

உங்கள் மின்னஞ்சல்களை Gmail வரிசைப்படுத்தும் விதத்தை மேம்படுத்துதல்

உங்கள் மின்னஞ்சல் எந்த இன்பாக்ஸ் வகைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த, நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

இன்பாக்ஸில் உள்ள மெசேஜ்களின் எண்ணிக்கையைப் பார்த்தல்

Gmailலில் மின்னஞ்சலுக்கு அனுப்பும் பதில்கள் உரையாடல்களாகக் குழுவாக்கப்படும். உங்கள் இன்பாக்ஸில் உரையாடல்களின் எண்ணிக்கையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம், ஆனால் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள முடியாது.

இன்பாக்ஸில் எத்தனை மின்னஞ்சல்கள் உள்ளன என்று பார்க்க இந்தப் வழிமுறையைப் பின்பற்றவும்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
    • மின்னஞ்சல்களின் மொத்த எண்ணிக்கையை Gmail ஆப்ஸில் பார்க்க முடியாது.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்யவும்.
  3. எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே "உரையாடல் பார்வை" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
  5. உரையாடல் பார்வையை முடக்கவும்.
  6. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பார்க்க, உங்கள் இன்பாக்ஸிற்குச் செல்லவும்.
    • உங்களிடம் பல்வேறு பிரிவுகள் அல்லது வகைகள் இருந்தால் ஒவ்வொரு பிரிவில் உள்ள மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும்.
  8. முடித்த பின், அமைப்புகள் பக்கத்திற்குத் திரும்பச் செல்லவும்.
  9. உரையாடல் பார்வையை இயக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10469745610928720134
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false