உங்கள் Gmail இன்பாக்ஸ் தளவமைப்பை மாற்றுதல்

பல இன்பாக்ஸ்கள் உட்பட உங்கள் இன்பாக்ஸைப் பிரத்தியேகமாக்குங்கள்.

உங்கள் இன்பாக்ஸ் தளவமைப்பைத் தேர்வுசெய்யவும்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில், இன்பாக்ஸ் என்பதில் கர்சரை வைத்து கீழ்நோக்கிய அம்புகுறியைக் கீழ்நோக்கிய அம்புக்குறிகிளிக் செய்யவும்.
  3. இயல்பு, முக்கியமானவை முதலில், படிக்காதவை முதலில், நட்சத்திரமிட்டவை முதலில், பல இன்பாக்ஸ்கள் அல்லது முதன்மை இன்பாக்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இன்பாக்ஸ் தளவமைப்பு விருப்பங்களைப் பற்றி அறிக

சில இன்பாக்ஸ் ஸ்டைல்களில் உங்களால் மாற்ற முடிகின்ற கூடுதல் அமைப்புகளும் விருப்பங்களும் இருக்கும்.

இயல்புநிலை (வகைகள் அல்லது தாவல்கள்)

"இயல்பு" எனத் தேர்வுசெய்தால் உங்கள் இன்பாக்ஸ் வெவ்வேறு தாவல்களாக அதாவது "முதன்மை", "சமூகம்", "விளம்பரங்கள்", "அறிவிப்புகள்" போன்றவைகளாகப் பிரிக்கப்படும். "இயல்பு" இன்பாக்ஸ் இருக்கும்போது, உங்கள் மெசேஜ்கள் தானாக வரிசைப்படுத்தப்படும், தேவைப்பட்டால் வகைகளிடையே மெசேஜ்களை நகர்த்திக் கொள்ளலாம்.

இன்பாக்ஸ் தாவல்கள் & வகைகளைப் பற்றி மேலும் அறிக.

முக்கியமானது முதலில்

"முக்கியமானது முதலில்" என்பதைத் தேர்வுசெய்தால் உங்கள் இன்பாக்ஸ் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்: மேலே "முக்கியமானவை", கீழே "மற்ற அனைத்தும்".

எந்த மின்னஞ்சல்களை முக்கியமானவையாகக் குறிப்பது என்று Gmail எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.

படிக்காதது முதலில்

"படிக்காதது முதலில்" என்பதைத் தேர்வுசெய்தால் உங்கள் இன்பாக்ஸ் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்: மேலே "படிக்காதவை", கீழே "மற்ற அனைத்தும்".

நட்சத்திரமிட்டது முதலில்

"நட்சத்திரமிட்டவை முதலில்" என்பதைத் தேர்வுசெய்தால் உங்கள் இன்பாக்ஸ் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்: மேலே "நட்சத்திரமிட்டவை", கீழே "மற்ற அனைத்தும்".

பல இன்பாக்ஸ்கள்

”பல இன்பாக்ஸ்கள்" என்பதைத் தேர்வுசெய்தால் Gmail உங்கள் இன்பாக்ஸில் கூடுதல் பிரிவுகளைச் சேர்க்கும். ஒவ்வொரு பிரிவையும் உருவாக்க தேடல் செயலிகள்/பிரத்தியேகமான லேபிள்களைப் பயன்படுத்தலாம்.

முதன்மை இன்பாக்ஸ்

"முதன்மை இன்பாக்ஸ்" எனத் தேர்வுசெய்தால் உங்கள் இன்பாக்ஸ் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும். "முக்கியமானவை மற்றும் படிக்காதவை", "நட்சத்திரமிட்டவை", "மற்ற அனைத்தும்" அல்லது நீங்கள் உருவாக்கிய லேபிள் என உங்களுக்கு எந்தப் பிரிவுகளைக் காட்ட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

இன்பாக்ஸ்கள் & லேபிள்களின் பட்டியலை மறைத்தல் அல்லது காட்டுதல்
இடது பக்க மெனுவில் இன்பாக்ஸ்களையும் லேபிள்களையும் காண முடியும். இடது பக்க மெனு மறைக்கப்பட்டிருக்கும் போது, உங்கள் மின்னஞ்சல்களுக்கு அதிகமான இடவசதி கிடைக்கும், அதோடு கூடுதல் விருப்பங்களுக்கு மெனுவையும் பெற முடியும்.
இடது கை மெனுவில் மறைக்க:
  1. கம்ப்யூட்டரில், Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் மெனுவைக் கிளிக் செய்யவும் .
உதவிக்குறிப்பு: மெனுவை மீண்டும் காட்ட, மெனுவைக் கிளிக் செய்யவும்  .
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5608098873647311381
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false