DMA மற்றும் உங்களின் இணைக்கப்பட்ட சேவைகளைப் பற்றி

டிஜிட்டல் மார்க்கெட்டுகள் சட்டம் (Digital Markets Act - DMA) என்பது மார்ச் 6, 2024 முதல் நடைமுறைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியச் சட்டமாகும். DMAயின்படி, குறிப்பிட்ட சில Google சேவைகளை இணைப்பதற்கான விருப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் Google உங்களுக்கு வழங்குகிறது. இந்த Google சேவைகளில் அடங்குபவை:

  • Search
  • YouTube
  • விளம்பரச் சேவைகள்
  • Google Play
  • Chrome
  • Google Shopping
  • Google Maps

இந்தச் சேவைகள் அனைத்தையும் நீங்கள் இணைக்கலாம், எதையும் இணைக்காமல் இருக்கலாம், இணைக்க வேண்டிய தனிப்பட்ட சேவைகளையும் தேர்வுசெய்யலாம்.

இணைக்கப்பட்டால், இந்தச் சேவைகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தங்களுக்குள்ளும் பிற Google சேவைகளுடனும் தரவைப் பகிர முடியும். உதாரணமாக, உங்கள் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் உங்கள் அமைப்புகளின் அடிப்படையில் பிரத்தியேகமாக்க உதவ, இணைக்கப்பட்ட Google சேவைகள் இணைந்து செயல்படலாம்.

இணைக்க முடியாத Google சேவைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பயனர்களுக்கு இணைக்க முடியாத சேவைகள் என்று எதுவும் கிடையாது. ஜெர்மனியில் உள்ள பயனர்களுக்குச் சில சேவைகளை இணைக்க முடியாது.

உதவிக்குறிப்பு: மேலே குறிப்பிடப்படாத, தங்களுக்குள் தரவைப் பகிர்கின்ற பிற அனைத்து Google சேவைகளும் எப்போதுமே இணைக்கப்பட்டிருக்கும்.

இணைக்கப்பட்ட சேவைகள் - ஓர் அறிமுகம்

சேவைகள் இணைக்கப்படவில்லை என்றால் Google சேவைகள் முழுவதும் பகிரப்படும் தரவைச் சார்ந்த சில அம்சங்கள் கட்டுப்படுத்தப்படும் அல்லது கிடைக்காது. உதாரணமாக:

  • Search, YouTube, Chrome ஆகியவை இணைக்கப்படவில்லை என்றால் “பார்ப்பதற்கு உள்ளவை” போன்ற உங்கள் Search பரிந்துரைகளும், உங்கள் Discover ஊட்டமும் குறைவான அளவில்தான் பிரத்தியேகமாக இருக்கும்.
  • Search, Maps ஆகியவை இணைக்கப்படவில்லை என்றால் Searchசில் செய்த முன்பதிவுகள் Google Mapsஸில் காட்டப்படாது.

பகிரப்படும் தரவைச் சாராத சேவையின் அம்சங்கள் இதனால் பாதிக்கப்படாது.

சேவைகளை இணைக்க வேண்டாம் என்று தேர்வுசெய்தாலும் எந்தவொரு Google சேவையில் இருந்தும் வெளியேற்றப்பட மாட்டீர்கள். மேலும், Google சேவைகளை இணைப்பதால் உங்கள் தரவு மூன்றாம் தரப்புச் சேவைகளுடன் பகிரப்படாது.

இணைக்கப்பட்ட உங்கள் சேவைகளை நிர்வகித்தல்

உங்களிடம் முழுமையான கட்டுப்பாடு உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள Google சேவைகளில் எவையெல்லாம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் தேர்வுகளை உங்கள் Google கணக்கில் எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்து மாற்றலாம். இணைக்கப்பட்ட உங்கள் சேவைகளை நிர்வகிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தரவைப் பற்றி

இணைக்கப்பட்ட Google சேவைகள் முழுவதும் உங்கள் தரவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது?
இணைக்கப்பட்ட Google சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாகச் சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவு, இணைக்கப்பட்ட சேவைகள் முழுவதிலும் பகிரப்படலாம். நீங்கள் தேடுபவை, YouTubeல் பார்க்கும் வீடியோக்கள், Google Playயில் இருந்து நிறுவும் ஆப்ஸ், உங்கள் சாதனத் தகவல் போன்ற தொடர்புடைய தகவல்கள், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள பிற வகையான தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தத் தரவை Google எப்படிப் பயன்படுத்துகிறது?

இணைக்கப்பட்ட சேவைகளுக்கிடையே பகிரப்படும் இந்தத் தரவை எங்கள் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக Google பயன்படுத்தும்:

  • உங்கள் அமைப்புகளின் அடிப்படையில் உள்ளடக்கம், விளம்பரங்கள் போன்ற பிரத்தியேகச் சேவைகளை வழங்குதல்
  • எங்கள் சேவைகளைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்
  • புதிய சேவைகளை உருவாக்குதல்
  • எங்கள் சேவைகளின் செயல்திறனை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும், மக்கள் அவற்றை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளுதல்

இணைக்கப்பட்ட சேவைகள் தொடர்பான உங்கள் தேர்வுகள், Google சேவைகளைப் பிரத்தியேகமாக்குவதற்காக நீங்கள் செய்த தேர்வுகள் போன்றவற்றை மாற்றாது. உங்கள் தரவு பகிரப்படும் விதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களை மட்டுமே இது உங்களுக்கு வழங்குகிறது.

சில சூழல்களில் Google தொடர்ந்து தரவைப் பகிரும்

மோசடியைத் தடுத்தல், ஸ்பேம் மற்றும் தவறான பயன்பாட்டில் இருந்து பாதுகாத்தல், சட்டத்துடன் இணங்குதல் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, அனைத்து Google சேவைகளிலும் (இணைக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும்கூட) உள்ள உங்கள் தரவு, சேவைகள் முழுவதிலும் தொடர்ந்து பகிரப்படலாம்.

இரண்டு சேவைகள் ஒன்றாக வழங்கப்படும்போது பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க உங்களுக்கு உதவவும் Google சேவைகள் முழுவதிலும் உங்கள் தரவு பகிரப்படலாம். 

Related resources 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16211069159049784013
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false