ஈமோஜி ரியாக்ஷன்கள் மூலம் மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்தல்

ஈமோஜிகள் மூலம் உங்கள் ரியாக்ஷன்களை வெளிப்படுத்துங்கள், மின்னஞ்சல்களுக்கு விரைவாகப் பதிலளியுங்கள்.

ஈமோஜி ரியாக்ஷனைச் சேர்த்தல்

Gmailலில் ஒவ்வொரு மெசேஜிலும் ஈமோஜி ரியாக்ஷன் விருப்பம் காட்டப்படும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. நீங்கள் பதிலளிக்க விரும்பும் மெசேஜைத் திறக்கவும்.
  3. ஈமோஜி ரியாக்ஷனைச் சேர்ப்பதற்கான ஐகானை Insert emoji கிளிக் செய்யவும்:
    • இது மெசேஜின் மேற்புறத்தில், பதிலளி என்பதற்கு அடுத்து இருக்கும்.
    • மெசேஜின் கீழ்புறத்திலும் இருக்கும்.
  4. ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்.
    • நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஈமோஜி மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில் தோன்றும்.

உதவிக்குறிப்புகள்:

  • மின்னஞ்சலுக்கு யார் ரியாக்ட் செய்துள்ளார் என்பதைப் பார்க்க, அந்த ஈமோஜி ரியாக்ஷனின் மேல் கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  • மின்னஞ்சலுக்கு வேறொருவர் சேர்த்த ஈமோஜியை மீண்டும் பயன்படுத்த, ஏற்கெனவே இருக்கும் ரியாக்ஷன் சிப்பைக் கிளிக் செய்யவும்.
  • மெசேஜ் தொடரில் உள்ள எந்தவொரு மெசேஜுக்கும் ஈமோஜியைச் சேர்க்க, மெசேஜில் மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து ரியாக்ஷனைச் சேர் என்பதைத் தட்டவும்.

ஈமோஜி ரியாக்ஷனை அகற்றுதல்

ஈமோஜி ரியாக்ஷனை அகற்ற உங்கள் மெசேஜின் கீழ்ப்பகுதியில் உள்ள அறிவிப்பில், செயல்தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: Gmailலில் உள்ள “அனுப்பியதை ரத்துசெய்” அமைப்புகளைப் பொறுத்து நீங்கள் ஓர் ஈமோஜியைச் சேர்த்த பிறகு அதை அகற்றுவதற்கு 5 முதல் 30 வினாடிகள் வரை அவகாசம் இருக்கும். இந்த அறிவிப்பு காட்டப்படும் நேர அளவை மாற்ற, அனுப்பிய Gmail மெசேஜ்களை ரத்துசெய்வதற்கான நேரத்தை 'அமைப்புகளுக்குச்' சென்று மாற்றவும். Gmailலில், அனுப்பிய மெசேஜ்களைச் செயல்தவிர்க்கும் அமைப்புகளை மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஈமோஜி ரியாக்ஷன்களை மின்னஞ்சலாக நீங்கள் பெறுவதற்கான காரணம் என்ன?

நீங்கள் பின்வருபவற்றைச் செய்தால், ஈமோஜி ரியாக்ஷன்கள் வேறுவிதமாகக் காட்டப்படலாம். அத்துடன் அது “[பெயர்] Gmail வழியாக ரியாக்ட் செய்துள்ளார்” எனக் கூறும் இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலாகவும் தோன்றலாம்:

ஈமோஜி ரியாக்ஷன்களை அனுப்ப முடியாமல் போவது

இந்தச் சூழல்களில் உங்களால் மின்னஞ்சலுக்கு ரியாக்ட் செய்ய முடியாது:

  • பணி அல்லது பள்ளிக் கணக்கை வைத்திருத்தல். பணி அல்லது பள்ளிக் கணக்குகள் குறித்து மேலும் அறிக.
  • இந்த மெசேஜ், குழு மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருத்தல்.
  • 20க்கும் அதிகமான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டிருத்தல்.
  • நீங்கள் BCCயில் சேர்க்கப்பட்டிருத்தல்.
  • அதே மெசேஜுக்கு ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட ரியாக்ஷன்களை அனுப்பியிருத்தல்.
  • Apple Mail, Microsoft Outlook போன்ற மற்ற மின்னஞ்சல் வழங்குநரில் மின்னஞ்சலைத் திறத்தல்.
  • கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் மூலம் மெசேஜ் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டிருத்தல். Gmail கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
  • அனுப்புநரிடம் பிரத்தியேகப் பதிலுக்கான முகவரி இருத்தல்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2961214741870889955
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false