Gmail கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

Google Workspace தன் வசம் உள்ள மற்றும் தன்னுடைய அம்சங்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்படும் எல்லாத் தரவையும் என்க்ரிப்ஷன் செய்ய சமீபத்திய கிரிப்டோகிராஃபிக் தரநிலைகளைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக, மற்ற மின்னஞ்சல் சேவை வழங்குநர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளும்போது TLSஸை (டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி) Gmail பயன்படுத்துகிறது. Gmail கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் (Client-side Encryption - CSE) மூலமாக, Googleளின் கிளவுடு மூலம் இயங்கும் சேமிப்பகத்திற்கு ஏதேனும் தரவு அனுப்பப்படுவதற்கு அல்லது அதில் சேமிக்கப்படுவதற்கு முன்பே உங்கள் உலாவியில் என்க்ரிப்ஷன் செய்து உங்களுடைய பாதுகாக்கவேண்டிய/ஒழுங்குபடுத்தப்பட்ட தரவின் ரகசியத்தன்மையை வலுப்படுத்தலாம். இதனால் பெறுநர்களைச் சென்றடையும் வரை உங்கள் மெசேஜ்கள் அனைத்திற்கும் ஒரேவிதமான பாதுகாப்பு வழங்கப்படும்.

தொடங்கும் முன்

இந்த Google Workspace பதிப்புகளில் பரிமாற்றப்படும் மின்னஞ்சல்களுக்குக் கூடுதல் என்க்ரிப்ஷனைச் சேர்க்கலாம்:

  • Enterprise Plus
  • Education Plus
  • Education Standard

இந்த அம்சம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் Google Workspace நிர்வாகியைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம்.

கூடுதல் என்க்ரிப்ஷன் தொடர்பான தகவல்

CSE இயக்கப்பட்டிருந்தால்:

  • இன்லைன் படங்கள், இணைப்புகள் ஆகியவை உட்பட மின்னஞ்சலின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் என்க்ரிப்ஷன் வழங்கப்படும்.
  • தலைப்பு, நேரமுத்திரைகள், பெறுநர்கள் ஆகியவை உட்பட மின்னஞ்சலின் தலைப்பிற்குக் கூடுதல் என்க்ரிப்ஷன் கிடைக்காது.

குறிப்பு: மெசேஜ்களுக்கான கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் இயல்பாகவே இயக்கத்தில் இருக்கும்படி உங்கள் நிர்வாகி அமைத்திருக்கக்கூடும். உங்கள் பெறுநர் தரப்பில் S/MIME ஆதரிக்கப்படவில்லை என்றால், CSEயை நீங்கள் எப்போதும் முடக்கியே வைத்திருக்கலாம்.

உங்கள் டொமைனுக்குள் CSE உடன் மின்னஞ்சல்களை அனுப்புதல்

முக்கியமானது:

  • மின்னஞ்சலை எழுதத் தொடங்கும் முன்பு, கூடுதல் என்க்ரிப்ஷனைச் சேர்க்க வேண்டுமா என்று முடிவெடுக்கவும். ஒரு மின்னஞ்சலை எழுதும்போதே கூடுதல் என்க்ரிப்ஷனைச் சேர்க்கலாம். அப்படிச் செய்தால் உங்கள் மின்னஞ்சல் வரைவு நீக்கப்பட்டு, புதிய வரைவு திறக்கப்படும்.
  • மின்னஞ்சலை எழுதி முடித்தபிறகு, தேவையில்லை என்றால் கூடுதல் என்க்ரிப்ஷனை முடக்கலாம். கூடுதல் என்க்ரிப்ஷனை அகற்றுவதற்கு முன்பு வரைவில் பாதுகாக்கவேண்டிய தகவல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  1. Gmailலில் எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மெசேஜின் மேல் வலது மூலையில் உள்ள மெசேஜ் பாதுகாப்புக்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. "கூடுதல் என்க்ரிப்ஷன்" என்பதன் கீழ் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெறுநர்கள், தலைப்பு, மெசேஜ் உள்ளடக்கம் போன்றவற்றைச் சேர்க்கவும்.
  5. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கேட்கப்பட்டால் உங்கள் அடையாள வழங்குநர் சேவையில் உள்நுழையவும்.

வெளிப்புற டொமைனுக்கு CSE உடன் மின்னஞ்சல்களை அனுப்புதல்

உங்கள் டொமைனைச் சாராத ஒருவருக்கு CSE உடன் மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பு முதலில் டிஜிட்டல் கையொப்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

முக்கியமானது:

  • டிஜிட்டல் கையொப்பம் உள்ள மின்னஞ்சல்களில் உங்கள் சான்றிதழ், பெறுநர் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை என்க்ரிப்ஷன் செய்யப் பயன்படுத்தக்கூடிய பொதுக் குறியீடு ஆகியவை இருக்கும்.
  • டிஜிட்டல் கையொப்பங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது, பதிலுக்குப் பெறுநரும் கையொப்பமிட்ட மின்னஞ்சலை அனுப்புவதை உறுதிசெய்து கொள்ளவும். கையொப்பமிட்ட மின்னஞ்சலைப் பெறுநர் அனுப்பும்போது குறியீடு தானாகவே சேமிக்கப்படும். இப்போது, அந்தப் பெறுநரைத் தொடர்புகொள்ளும்போது கூடுதல் என்க்ரிப்ஷன் கிடைக்கும்.
  • ஒவ்வொரு தொடர்புடனும் ஒருமுறை மட்டுமே நீங்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கும்.
  • நீங்களோ நீங்கள் தொடர்புகொள்பவரோ சான்றிதழ்களைப் புதுப்பித்தால் மீண்டும் டிஜிட்டல் கையொப்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கும்.
  1. Gmailலில் எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மெசேஜின் மேல் வலது மூலையில் உள்ள மெசேஜ் பாதுகாப்புக்கான ஐகானை கிளிக் செய்யவும்.
    • கூடுதல் என்க்ரிப்ஷன் இதுவரை இயக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  3. டிஜிட்டல் கையொப்பம் அதன் பிறகு மெசேஜில் கையொப்பமிடுதல் என்பதைக் கிளிக் செய்யவும்
    • சான்றிதழைப் பார்க்கவும் பதிவிறக்கவும் கையொப்பத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் கையொப்பமிட்ட மெசேஜைப் பெறுநருக்கு அனுப்பவும்.
  5. டிஜிட்டல் கையொப்பமிட்ட மின்னஞ்சலைப் பெறுநர் பெற்றுவிட்டார் என்பதை உறுதிப்படுத்த, பதிலுக்குக் கையொப்பமிட்ட மெசேஜை அனுப்புமாறு அவரிடம் கேட்கவும்.

டிஜிட்டல் கையொப்பங்களை நீங்கள் பரிமாறிக்கொண்ட பிறகு CSE கிடைக்கும். அந்தத் தொடர்புடன் தகவல்தொடர்பு கொள்ளும்போது கூடுதல் என்க்ரிப்ஷனை நீங்கள் சேர்க்கலாம்.

CSE என்க்ரிப்ஷன் செய்த மின்னஞ்சலைப் படித்தல்

CSE என்க்ரிப்ஷன் செய்த மெசேஜைப் பெறும்போது அனுப்புநரின் பெயருக்குக் கீழே "என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்" எனக் காட்டப்படும். மெசேஜைப் படிக்க:

  1. Gmailலில் மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் அடையாள வழங்குநர் சேவையில் உள்நுழையவும்.
  3. மெசேஜ் உங்கள் Gmail உலாவிச் சாளரத்தில் தானாகவே டீக்ரிப்ஷன் செய்யப்படும்.

இணைப்பின் அளவு வரம்பு

கூடுதல் என்க்ரிப்ஷன் இயக்கப்பட்டிருந்தால், இணைப்புகள் மற்றும் இன்லைன் படங்களுக்கு 5 மெ.பை. என்ற பதிவேற்ற வரம்பு இருக்கும்.

தடுக்கப்பட்ட ஃபைல் வகைகள்

நீங்கள் CSEயை இயக்கியிருந்து, இணைப்புள்ள மின்னஞ்சலைப் பெற்றால், 'என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட மின்னஞ்சல்களில் வைரஸ்கள் உள்ளதா என ஸ்கேன் செய்ய முடியாது' என்ற எச்சரிக்கைச் செய்தி காட்டப்படும். மின்னஞ்சல் பாதுகாப்பானது என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால் இணைப்புகள் குறித்துக் கவனமாக இருக்கவும். குறிப்பிட்ட ஃபைல் வகை இணைப்புகள் தானாகவே தடுக்கப்படும்.

Gmail தடுக்கும் ஃபைல் வகைகள்:

.ade, .adp, .apk, .appx, .appxbundle, .bat, .cab, .chm, .cmd, .com, .cpl, .diagcab, .diagcfg, .diagpack, .dll, .dmg, .ex, .ex_, .exe, .hta, .img, .ins, .iso, .isp, .jar, .jnlp, .js, .jse, .lib, .lnk, .mde, .msc, .msi, .msix, .msixbundle, .msp, .mst, .nsh, .pif, .ps1, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vhd, .vxd, .wsc, .wsf, .wsh, .xll

அம்சங்களுக்கான வரம்புகள்

கூடுதல் என்க்ரிப்ஷன் இயக்கப்பட்டிருந்தால் இந்த அம்சங்கள் கிடைக்காது:

  • இரகசியப் பயன்முறை
  • மின்னஞ்சல் தளவமைப்புகள்
  • பலருக்கு அனுப்புதல் பயன்முறை
  • மீட்டிங் நேரங்களைப் பரிந்துரைத்தல்
  • பாப்-அவுட் மற்றும் முழுத்திரையில் எழுதும் வசதி
  • குழுக்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்புதல்
  • மின்னஞ்சல் கையொப்பங்கள்
  • ஈமோஜிகள்
  • அச்சிடுதல்

என்க்ரிப்ஷன் நெறிமுறை

பாதுகாப்பான MIME தரவை அனுப்பவும் பெறவும் கூடுதல் என்க்ரிப்ஷன் S/MIME 3.2 IETF தரநிலையைச் சார்ந்திருக்கிறது. S/MIMEக்கு, அனுப்புநர்களும் பெறுநர்களும் Gmail நம்பும் X.509 சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். மின்னஞ்சல் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் S/MIME டிஜிட்டல் கையொப்பங்களுடன் சேர்த்து S/MIME என்க்ரிப்ஷன் பயன்படுத்தப்படுகிறது.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9399846183309035488
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false