Gmailலை ஒழுங்கமைக்க லேபிள்களை உருவாக்குதல்

உங்கள் மின்னஞ்சல்களைச் சேமிக்கும் லேபிள்களை உருவாக்கலாம். ஒரு மின்னஞ்சலுக்குத் தேவையான அளவு எவ்வளவு லேபிள்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். 

குறிப்பு: லேபிள்கள் கோப்புறைகளைப் போன்றவை அல்ல. ஒரு மெசேஜை நீங்கள் நீக்கினால், அது இணைக்கப்பட்ட ஒவ்வொரு லேபிளில் இருந்தும் உங்கள் ஒட்டுமொத்த இன்பாக்ஸில் இருந்தும் அழிக்கப்படும்.

லேபிளை உருவாக்குதல்

உதவிக்குறிப்பு: உங்கள் லேபிள்கள் உங்கள் இன்பாக்ஸில் மட்டுமே காட்டப்படும், உங்கள் பெறுநரின் இன்பாக்ஸில் அல்ல.

  1. கணினியில், Gmailலுக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், கீழ் நோக்கி செய்து மேலே என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புதிய லேபிளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் லேபிளுக்குப் பெயரிடவும்.
  5. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

லேபிள்களைத் திருத்துதல் & நீக்குதல்

லேபிளைத் திருத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் இடதுபக்கத்தில், லேபிளின் பெயருக்கு நகர்த்தவும்.
  3. மேலே என்பதைக் கிளிக் செய்யவும் .
  4. உங்கள் லேபிளைத் திருத்தவும்.

லேபிளை நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் இடது பக்கத்தில், லேபிளின் பெயரின் மீது நகர்த்தவும்.
  3. மேலே  அதன் பிறகு லேபிளை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

லேபிளைச் சேர்த்தல்

உங்கள் இன்பாக்ஸில் உள்ள மெசேஜ்களுக்கு லேபிள் அமைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மெசேஜ்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே, லேபிள்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு லேபிளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஒன்றைப் புதிதாக உருவாக்கவும்.

நீங்கள் எழுதும் மெசேஜுக்கு லேபிள் அமைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ் வலதுபுறத்தில், மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. லேபிள் என்பதைக் கிளீக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் லேபிள்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும்.

மெசேஜை வேறு லேபிளுக்கு நகர்த்துதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே, லேபிள்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தற்போதைய லேபிளில் தேர்வை நீக்கிவிட்டு, புதிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும்.

லேபிள்களை மறைத்தல் அல்லது காட்டுதல்

உங்கள் லேபிள்கள் உங்கள் இன்பாக்ஸின் இடதுபக்கத்தில் காட்டப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ”லேபிள்கள்” தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்யவும். 

500க்கும் மேற்பட்ட லேபிள்களைக் காணலாம்

பக்கத்தின் இடதுபக்கத்தில், 500 லேபிள்கள் வரை பார்க்கலாம். பிற லேபிள்களுக்குள் லேபிள்களை வைத்துக் கொள்ளலாம். 
குறிப்பு: 500க்கும் மேற்பட்ட லேபிள்களைக் கொண்டிருந்தால், பட்டியல் ஏற்றுவதற்கு அதிக நேரம் ஆகலாம். 

உரையாடல் பார்வை ஆன் அல்லது ஆஃப் செய்யப்பட்டுள்ளதைப் பொறுத்து உங்கள் லேபிள்கள் காட்டப்படும்.

  • உரையாடல் பார்வை ஆஃப் செய்யப்பட்டிருந்தால்: நீங்கள் லேபிள் செய்துள்ள தனிப்பட்ட மெசேஜ்களில் மட்டும் காட்டப்படும். யாரேனும் மெசேஜுக்குப் பதிலளித்திருந்தால், பதிலில் லேபிள் காட்டப்படாது.
  • உரையாடல் பார்வை ஆன் செய்யப்பட்டிருந்தால்: முழு உரையாடலுக்கும் லேபிளிடும் போது, ஏற்கெனவே உள்ள மெசேஜ்களில் மட்டும் லேபிள் காட்டப்படும், புதிய மெசேஜ்களில் காட்டப்படாது.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8554370249679575800
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false