Gmail கையொப்பங்கள் தொடர்பான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

மின்னஞ்சல் கையொப்பம் என்பது மின்னஞ்சலின் இறுதியில் சேர்க்கப்படும் தொடர்புத் தகவல், பிடித்தமான வாசகம் போன்ற ஒரு வார்த்தையாகும். இவை அடிக்குறிப்பைப் போன்று Gmail மின்னஞ்சல்களின் இறுதியில் தானாகவே சேர்க்கப்படும். தேவையெனில் உங்கள் Gmail கையொப்பத்தில் படத்தையும் சேர்க்கலாம். Gmail கையொப்பங்கள் குறித்து மேலும் அறிக.

Gmail கையொப்பம், கையொப்பத்தில் சேர்த்த படங்கள் ஆகியவை தொடர்பாகச் சிக்கல்கள் இருந்தால் இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தீர்வுகளை முயற்சி செய்து பார்க்கவும்.

கையொப்பம் தொடர்பான பொதுவான சிக்கல்களும் அவற்றுக்கான தீர்வுகளும்

கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்கள்

உங்கள் கையொப்பத்தில் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்கள் இருந்தால் இவற்றைச் செய்து பாருங்கள்:

கையொப்பப் படம் சரியாக வடிவமைக்கப்படவில்லை

உங்கள் கையொப்பப் படத்தை வடிவமைப்பதில் சிக்கல்கள் இருந்தால் இவற்றைச் செய்து பாருங்கள்:


Gmail கையொப்பம் தொடர்பான பொதுவான சிக்கல்கள்

Gmail கையொப்பங்களைக் காட்டுவதிலும் வடிவமைப்பதிலும் இருக்கும் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்ய இவற்றைச் செய்து பாருங்கள்.

கையொப்பம் சரியாகக் காட்டப்படவில்லை

சில சமயங்களில் கையொப்பத்தில் உள்ள வடிவமைக்கப்பட்ட வார்த்தையை Gmail சரியாகக் காட்டாது. அந்தச் சமயங்களில், பின்வரும் வழிமுறையைப் பயன்படுத்தி வடிவமைப்பை அகற்றிப் பார்க்கவும்:

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகுஅனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கையொப்பம் பிரிவில் உங்கள் கையொப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வடிவமைப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

கையொப்பப் படம் பெரிதாக இருந்தாலும் இந்தச் சிக்கல் ஏற்படலாம். இதற்கு, பரிந்துரைக்கப்படும் அளவில் கையொப்பப் படத்தைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

கையொப்பத்தில் உள்ள எழுத்துகளை வடிவமைக்க முடியவில்லை

கையொப்பத்தில் உள்ள எழுத்துகளை வடிவமைக்க முடியாதபோது, கையொப்பப் பெட்டியின் மேலே எளிய உரை எனக் காட்டப்பட்டால் கையொப்பத்தைத் திருத்துவதற்கு முன்பு எளிய உரைப் பயன்முறையை முடக்கவும்:

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. எளிய உரைப் பயன்முறை என்பதைத் தேர்வுநீக்கவும்.

கையொப்பத்தில் கூடுதல் எழுத்துகள் உள்ளன

Gmailலின் சில பதிப்புகளில் தடிமன், சாய்வு போன்ற வடிவமைப்பு விருப்பங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த Gmail பதிப்புகளில் வடிவமைக்கப்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தினால் உங்கள் கையொப்பத்தில் கூடுதல் எழுத்துகள் காட்டப்படலாம். கூடுதல் எழுத்துகளை அகற்ற, கையொப்பத்தில் இருந்து வடிவமைப்பை அகற்றவும்:

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகுஅனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கையொப்பம் பிரிவில் உங்கள் கையொப்பத்தை ஹைலைட் செய்யவும்.
  4. வடிவமைப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

அனுப்பிய மின்னஞ்சல்களில் கையொப்பம் மறைக்கப்பட்டு மூன்று புள்ளிகள் காட்டப்படுகின்றன

Gmail மின்னஞ்சலில் உங்கள் கையொப்பம் இல்லையெனில் அது மின்னஞ்சல் உள்ளடக்கத்தின் கீழே இருக்கலாம். மின்னஞ்சல் உள்ளடக்கமும் கையொப்பமும் இரண்டு சிறுகோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.

கையொப்பத்தைப் பார்க்க மின்னஞ்சலின் கீழ்ப்பகுதிக்குச் சென்று மறைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்கள்

படங்களைப் பதிவேற்றுவதில் சிக்கல்கள் இருந்தால் இந்தப் பிரிவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு அதிகமான தீர்வுகளை முயற்சி செய்து பாருங்கள். படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்களில் சில:

  • படம் பதிவேற்றப்படாமல் இருப்பது
  • கையொப்பத்தில் படம் காட்டப்படாமல் இருப்பது
  • Google Driveவில் இருந்து சேர்க்கப்பட்ட படம் கையொப்பத்தில் காட்டப்படாமல் இருப்பது
  • URL மூலம் மட்டுமே படத்தைப் பதிவேற்ற முடிவது

கவனத்திற்கு: இந்தப் பிரிவில் உள்ள வழிமுறைகள் Chrome உலாவியில் பயன்படுத்துவதற்கானவை. Safari, Firefox அல்லது வேறு ஏதேனும் உலாவியைப் பயன்படுத்தினால் அந்தந்த உலாவியின் உதவித் தளத்தைப் பார்க்கவும்.

உலாவியின் தற்காலிகச் சேமிப்பை அழித்தல்

Chrome போன்ற உலாவியைப் பயன்படுத்தும்போது நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் உள்ள சில தகவல்கள் உலாவியின் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்படும். தற்காலிகச் சேமிப்பை அழிப்பது கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்யக்கூடும்:

  1. கம்ப்யூட்டரில், Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் அதன் பிறகுஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலும் கருவிகள்அதன் பிறகுஉலாவிய தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேற்புறத்தில் நேர வரம்பைத் தேர்வுசெய்யவும். அனைத்தையும் நீக்க, இதுவரையிலான அனைத்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட படங்களும் ஃபைல்களும் என்ற பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  6. தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
Chromeமின் தற்காலிகச் சேமிப்பை அழிப்பது குறித்த விரிவான தகவல்களுக்கு தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்தல் என்பதற்குச் செல்லவும்.
mail.google.com தளத்திற்கான குக்கீகளை அழித்தல்

நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் இருந்து உருவாக்கப்படும் ஃபைல்களே குக்கீகளாகும். இவை உங்கள் இணைய உலாவல் தொடர்பான தகவல்களைச் சேமித்து ஆன்லைனில் நீங்கள் எளிதாக உலாவ உதவுகின்றன. குக்கீகளை அழிப்பதால், கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்கள் சரிசெய்யப்படலாம்:

  1. கம்ப்யூட்டரில், Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் அதன் பிறகுஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. குக்கீகள் மற்றும் பிற தளத்தின் தரவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கீழே சென்று எல்லாக் குக்கீகளையும் தளத் தரவையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. மேல் வலதுபுறத்தில் உள்ள குக்கீகளைத் தேடு என்ற புலத்தில் mail.google.com என்று டைப் செய்யவும்.
  7. அனைத்தையும் அகற்று என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

Chrome குக்கீகளை அழிப்பது குறித்த விரிவான தகவல்களுக்கு Chromeமில் குக்கீகளை அழித்தல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் என்பதற்குச் செல்லவும்.

Gmailலுக்கான குக்கீகள் அனைத்தையும் அனுமதித்தல்

குறிப்பிட்ட தளங்களுக்கான குக்கீகள் அனைத்தையும் நீங்கள் தடுக்கலாம் அனுமதிக்கலாம். Gmailலுக்கான குக்கீகள் அனைத்தையும் அனுமதிப்பதன் மூலம் கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவது தொடர்பான சிக்கல்கள் சரிசெய்யப்படலாம்:

  1. கம்ப்யூட்டரில், Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் அதன் பிறகுஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே உள்ள பிரத்தியேகச் செயல்பாடுகள் என்பதற்குச் செல்லவும்.
  5. குக்கீகளை எப்போதும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட தளங்கள் என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. தளத்தைச் சேர் என்ற பெட்டியில் mail.google.com என்று டைப் செய்து சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பிட்ட தளங்களுக்கான குக்கீகளை அனுமதிப்பது குறித்த விரிவான தகவல்களுக்கு Chromeமில் குக்கீகளை அழித்தல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் என்பதற்குச் செல்லவும்.

படத்திற்கான Google Drive பகிர்தல் அனுமதிகளை மாற்றுதல்

Google Driveவில் உள்ள படத்தை உங்கள் கையொப்பத்தில் பயன்படுத்த, படத்தைப் பகிர்வதற்கான அமைப்புகளைப் ‘பொது’ என அமைக்க வேண்டும்.

கவனத்திற்கு: பணி/பள்ளிக் கணக்கின் மூலம் Gmailலைப் பயன்படுத்தினால் படங்களைப் பொதுவில் பகிர உங்களை அனுமதிக்குமாறு நிர்வாகியிடம் கேளுங்கள்.

  1. உங்கள் கையொப்பத்தில் பயன்படுத்த வேண்டிய படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பகிர் அல்லது பகிர் அதன் பிறகு இணைப்பைப் பெறுக என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பைப் பெறுக என்பதற்குக் கீழ் உள்ள இணைப்பை உடைய எவரும் அணுகும்படி மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் கையொப்பப் படத்தைப் பார்ப்பதற்குப் பிறரை அனுமதிக்க, பார்வையாளர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் கையொப்பத்தில் Drive படத்தைச் சேர்க்க "எனது இயக்ககம்" விருப்பத்தைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். Driveவில் படத்தைக் கண்டறியவும். அதன்பிறகு தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

Drive பகிர்வு குறித்த விரிவான தகவல்களுக்கு Google Driveவில் இருந்து ஃபைல்களைப் பகிர்தல் என்பதற்குச் செல்லவும்.

Chrome மறைநிலைச் சாளரத்தில் படத்தைப் பதிவேற்றுதல்

இயல்பான Chrome சாளரங்கள் போன்று இல்லாமல் Chrome மறைநிலைப் பயன்முறை ஒரு தனிச் சாளரத்தில் இயங்கும். மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தி இணையத்தில் ரகசியமாக உலாவலாம். கையொப்பப் படத்தைப் பதிவேற்றுவதில் இன்னமும் சிக்கல்கள் இருந்தால் மறைநிலைச் சாளரத்தைப் பயன்படுத்திப் படத்தைப் பதிவேற்றவும்:

  1. Chrome உலாவியில் புதிய மறைநிலைச் சாளரத்தைத் திறக்கவும். விரிவான வழிமுறைகள்
  2. Google கணக்கில் உள்நுழையவும்.
  3. உங்கள் Gmail அமைப்புகளுக்குச் சென்று, கையொப்பப் படத்தை வழக்கமாக எப்படிப் பதிவேற்றுவீர்களோ அதே முறையில் பதிவேற்றவும். விரிவான வழிமுறைகள்
  4. மறைநிலைப் பயன்முறையை மூடவும். விரிவான வழிமுறைகள்
வேறொரு உலாவி மூலம் படத்தைப் பதிவேற்றுதல்

இந்தப் பிரிவில் உள்ள பிற தீர்வுகளைப் பயன்படுத்திப் படத்தைப் பதிவேற்ற முடியவில்லை எனில் வேறொரு உலாவியில் இருந்து பதிவேற்றவும்.

கையொப்பப் படத்தை வடிவமைப்பது அல்லது காட்டுவது தொடர்பான சிக்கல்கள்

கையொப்பப் படங்களை வடிவமைப்பதிலோ காட்டுவதிலோ சிக்கல்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு படம்:

  • கேள்விக் குறியாகவோ உடைந்த பட ஐகானாகவோ காட்டப்படும்போது
  • தவறான அளவில் இருக்கும்போது
  • வடிவமைக்க முடியாதபடி இருக்கும்போது

கையொப்பப் படத்தை வடிவமைப்பது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்ய, இந்தப் பிரிவில் உள்ள தீர்வுகளை முயற்சி செய்து பார்க்கவும்.

கையொப்பப் படத்தை நீக்கி மீண்டும் பதிவேற்றுதல்

கையொப்பப் படத்தை நீக்கி அதை மீண்டும் பதிவேற்றவும். விரிவான வழிமுறைகளைப் பார்க்க, Gmail கையொப்பத்தை உருவாக்குதல் என்பதற்குச் செல்லவும்.

வேறொரு முறையைப் பயன்படுத்திப் பதிவேற்றுதல்

உங்கள் கையொப்பத்தில் படத்தைச் சேர்ப்பதற்கு 3 வழிகள் உள்ளன:

  • இணைய முகவரி (URL)–இணையத்தில் பொதுவில் காட்டப்படும் படத்தின் URLலை வழங்குதல்
  • எனது இயக்ககம்–பொதுவில் காட்டுவதற்கான படத்தை உங்கள் Google Driveவில் இருந்து தேர்ந்தெடுத்தல்
  • பதிவேற்றுதல்–மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இருந்து படத்தைப் பதிவேற்றுதல்.

இதில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்திப் படத்தைச் சேர்க்க முடியவில்லை எனில் மற்ற இரண்டு முறைகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

பரிந்துரைக்கப்படும் அளவில் கையொப்பப் படத்தைப் பயன்படுத்துதல்

பரிந்துரைக்கப்படும் அளவு: 70–100 பிக்சல்கள் உயரம், 300–400 பிக்சல்கள் அகலம். மின்னஞ்சல் கையொப்பப் படங்களின் அதிகபட்ச அளவு: 100 பிக்சல்கள் உயரம், 1000 பிக்சல்கள் அகலம்.

படத்தின் அளவை மாற்ற இவற்றை முயன்று பார்க்கவும்:

  • கையொப்பத்தில் படத்தைச் சேர்ப்பதற்கு முன்பு கம்ப்யூட்டர்/மொபைலில் அதன் அளவை மாற்றவும்.
  • கையொப்பத்தில் படத்தைச் சேர்த்த பிறகு கையொப்ப எடிட்டரில் அதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, அளவைத் தேர்ந்தெடுக்கவும்: சிறியது, நடுத்தரம், பெரியது அல்லது அசல் அளவு.
  • Google ஆவணத்தில் படத்தைச் சேர்த்து, அதில் படத்தின் அளவை மாற்றவும். அதன்பிறகு, படத்தை நகலெடுத்து உங்கள் கையொப்பத்தில் ஒட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5026687628216905537
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false