Gmail பின்புலத்தை மாற்றுதல்

உங்கள் Gmail பின்புலத்தை மாற்ற, ஒரு தீமினைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரில், இவற்றை உங்கள் பின்புலமாகப் பயன்படுத்தலாம்: 

  • இயல்புத் தீம்
  • டார்க் தீம்
  • கிடைக்கக்கூடிய பிற தீம்கள்
  • உங்கள் Google Photosஸில் பதிவேற்றிய படம்

கவனத்திற்கு:

  • பதிவேற்றிய படத்தைப் பின்புலமாகப் பயன்படுத்த, அந்தப் படத்தை Google Photosஸில் சேர்க்கவும். படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • சில தீம்களில் வார்த்தைகளின் பின்புலத்தை மாற்றலாம், மூலைகளை இருட்டாக்கலாம், பின்புலத்தை மங்கலாக்கலாம். இந்த விருப்பங்கள் காட்டப்படவில்லை என்றால் அந்தத் தீமில் மாற்றங்களைச் செய்ய முடியாது.
  • பேட்டரியைச் சேமிப்பதற்கும் மொபைலில் மெசேஜ்களை எளிதாகப் பார்ப்பதற்கும் டார்க் தீமிற்கு மாறவும்.

பின்புலத்திற்கான தீமினை மாற்றுதல்

கவனத்திற்கு: Android 10 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே டார்க் தீம் கிடைக்கிறது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு என்பதைத் தட்டவும்.
  3. அமைப்புகள் and then பொது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. தீம் என்பதைத் தட்டவும்.
  5. லைட், டார்க், சிஸ்டத்தின் இயல்புநிலை இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய கட்டுரை

Gmail சுயவிவரப் படத்தை மாற்றுதல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3294036089567676584
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false