மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம் பிரத்தியேக மின்னஞ்சல்களை அனுப்புதல்

Gmailலில் உள்ள மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம் பிரத்தியேக மின்னஞ்சல் விளம்பரத் தொடர்கள், செய்திமடல்கள், அறிவிப்புகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு அனுப்பலாம்.

முக்கியம்: Gmailலில் ‘பலருக்கு அனுப்புதல் பயன்முறைக்கு’ மாற்றாக மெயில் மெர்ஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜை எழுதும்போது “பெறுநர்:” வரிக்கு அடுத்துள்ள, 'மெயில் மெர்ஜைப் பயன்படுத்து' ஐகானை கிளிக் செய்யவும்.

மெயில் மெர்ஜ் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Gmailலில் மெயில் மெர்ஜ்

  • @பெயரின்_முற்பகுதி, @பெயரின்_பிற்பகுதி போன்ற பதிலீட்டுக் குறிச்சொற்களின் மூலம் பிரத்தியேக மெசேஜ்களை அனுப்புவதற்கு மெயில் மெர்ஜ் அம்சம் உதவுகிறது. நீங்கள் மெசேஜை அனுப்பும்போது, ஒவ்வொரு பெறுநரும் மின்னஞ்சலின் பிரத்தியேக நகலைப் பெறுவார்கள். அதில் உள்ள பதிலீட்டுக் குறிச்சொற்களுக்குப் பதிலாக உங்கள் விவரங்கள் இடம்பெறும்.
  • வேறு யாருக்கெல்லாம் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்பதைப் பெறுநர்களால் பார்க்க முடியாது. உரையாடல்களை நீங்கள் எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில் பெறுநர்களின் பதில்களைத் தனித்தனி மெசேஜ் தொடர்களில் பெறுவீர்கள்.
  • அதிக எண்ணிக்கையிலான பெறுநர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் தொடர்புத் தகவல்கள் அடங்கிய விரிதாளை இணைக்கலாம். விரிதாளில் உள்ள எந்த ஒரு நெடுவரிசையையும் உங்கள் மெசேஜில் பதிலீட்டுக் குறிச்சொல்லாகப் பயன்படுத்தலாம். உங்கள் மெசேஜைப் பிரத்தியேகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பெறுநருக்கும் பிரத்தியேகமான விவரங்களைச் சேர்ப்பதும் இதில் அடங்கும்.

மெயில் மெர்ஜ் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான உங்கள் தகுதிநிலையைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

மெயில் மெர்ஜ் அம்சத்தைப் பயன்படுத்த, தகுதியுள்ள Google Workspace திட்டம் உள்ள கணக்கில் உள்நுழையவும்:

  • Workspace Individual
  • Business Standard
  • Business Plus
  • Enterprise Standard
  • Enterprise Plus
  • Education Standard
  • Education Plus

உங்கள் மெசேஜில் நேரடியாகப் பெறுநர்களைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஏற்கெனவே உள்ள வரைவையும் திறக்கலாம்.
  3. "பெறுநர்:" வரியில், பெறுநர்களைச் சேர்க்கவும்.
  4. "பெறுநர்:" புலத்தின் வலதுபக்கத்தில் உள்ள 'மெயில் மெர்ஜைப் பயன்படுத்து' ஐகானை கிளிக் செய்யவும்.
  5. மெயில் மெர்ஜ் அம்சத்தை இயக்கவும்.
  6. உங்கள் மெசேஜில் “@” என்று டைப் செய்யவும்.
  7. பதிலீட்டுக் குறிச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:
    • @பெயரின்_முற்பகுதி
    • @பெயரின்_பிற்பகுதி
    • @முழுப்பெயர்
    • @மின்னஞ்சல் முகவரி
  8. பதிலீட்டுக் குறிச்சொல்லைச் சேர்க்க Enter அழுத்தவும்.

உதவிக்குறிப்புகள்:

  • உங்கள் மெசேஜில் சரியான பெறுநர் பெயர் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, Google Contactsஸில் அவரது பெயரைச் சரிபார்க்கவும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பெறுநர்களைச் சேர்க்க, Google Contactsஸில் ஒரு லேபிளை உருவாக்கி பெறுநர்களை அதில் குழுவாக்கவும். Gmailலில் "பெறுநர்:" வரியில் அந்த லேபிளைச் சேர்க்கும்போது, குழுவாக்கப்பட்டுள்ள பெறுநர்களின் பெயர்கள் தானாகவே நிரப்பப்படும். லேபிள்கள் மூலம் தொடர்புகளை ஒழுங்கமைப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • Google Contactsஸில் பெறுநரின் பெயர் இல்லை என்றால், “பெறுநர்:” வரியில் நீங்கள் டைப் செய்யும் தகவலின் அடிப்படையில் பெயரின் முற்பகுதியையும் பிற்பகுதியையும் மெயில் மெர்ஜ் தானாக நிரப்பும்.
    • எடுத்துக்காட்டாக, “Lisa Rodriguez <lisa@example.com>” என்று பெறுநரின் பெயரை டைப் செய்தால், “Lisa” என்பதை @பெயரின்_முற்பகுதி குறிச்சொல்லாகவும் “Rodriguez” என்பதை @பெயரின்_பிற்பகுதி குறிச்சொல்லாகவும் Gmail பயன்படுத்தும்.

விரிதாளின் மூலம் பெறுநர்களை உங்கள் மெசேஜில் சேர்த்தல்

முக்கியம்: தொடர்புத் தகவல்கள் உங்கள் விரிதாளின் முதல் பக்கத்திலேயே இருக்க வேண்டும், மேலும் அதில் வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஏற்கெனவே உள்ள வரைவையும் திறக்கலாம்.
  3. "பெறுநர்:" புலத்தின் வலதுபக்கத்தில் உள்ள 'மெயில் மெர்ஜைப் பயன்படுத்து' ஐகானை கிளிக் செய்யவும்.
  4. மெயில் மெர்ஜ் அம்சத்தை இயக்கவும்.
  5. விரிதாளில் இருந்து சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விரிதாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. காட்டப்படும் சாளரத்தில், பெறுநர் தகவல் உள்ள விரிதாளின் நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்:
    • மின்னஞ்சல் முகவரி
    • பெயரின் முற்பகுதி
    • பெயரின் பிற்பகுதி (விருப்பத்திற்குரியது)
  9. நிறைவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மெசேஜில் உங்கள் விரிதாள் “பெறுநர்:” வரியில் சேர்க்கப்படும்.
  10. உங்கள் மெசேஜில் “@” என்று டைப் செய்யவும்.
  11. பதிலீட்டுக் குறிச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
    • பதிலீட்டுக் குறிச்சொற்கள் உங்கள் விரிதாளின் நெடுவரிசைத் தலைப்புகளின்படி தீர்மானிக்கப்படுகின்றன.
  12. பதிலீட்டுக் குறிச்சொல்லைச் சேர்க்க Enter அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: பெறுநர் தகவல்களுக்காக நீங்கள் விரிதாளைப் பயன்படுத்தும்போது, அதன் நெடுவரிசைத் தலைப்புகளிலும் மின்னஞ்சல் முகவரிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துகளைச் சரிபார்க்கவும்.

  • நெடுவரிசையின் பெயரில் எழுத்துகள், எண்கள் ஆகியவற்றைத் தவிர சிறப்பு எழுத்துக்குறிகள் இருந்தால், தொடர்புடைய பதிலீட்டுக் குறிச்சொல்லை Gmailலில் அதன் இடத்தின்படி நீங்கள் அடையாளம் காணலாம். எடுத்துக்காட்டாக, முதல் நெடுவரிசை “@A” என்று அழைக்கப்படும்.
  • சிறப்பு எழுத்துக்குறிகள் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் தவறானதாகக் கருதப்படும்.

பதிலீட்டுக் குறிச்சொற்களுக்கான இயல்பு மதிப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

பெறுநருக்கான பதிலீட்டுக் குறிச்சொல்லில் தகவல்கள் விடுபட்டிருந்தால் பிழைச் செய்தியைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் “Sam <sam@example.com>” என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது @பெயரின்_முற்பகுதி அல்லது @பெயரின்_பிற்பகுதி என்ற பதிலீட்டுக் குறிச்சொல்லைப் பயன்படுத்தினால் பிழைச் செய்தி காட்டப்படும். “Sam” என்பது அவருடைய பெயரின் முற்பகுதியா, பிற்பகுதியா என்று Gmailலால் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

இதுபோன்ற சூழலில் நீங்கள்:

  • பிழைச் செய்தியில் உள்ள இயல்பு மதிப்பை டைப் செய்யலாம்.
    • உதாரணமாக, பெயரின் முற்பகுதி இல்லாத பெறுநர்களுக்கு “Hi @பெயரின்_முற்பகுதி” என்பது “Hi friend” என இருக்கலாம்.
  • மீண்டும் வரைவுக்குச் சென்று:
    • Google Contacts அல்லது நீங்கள் இணைத்துள்ள விரிதாளில், “பெறுநர்:” வரியில் விடுபட்ட மதிப்பைச் சேர்க்கவும்.
    • மதிப்புகள் விடுபட்டிருந்தால் அந்தப் பெறுநரை “பெறுநர்:” வரி அல்லது நீங்கள் இணைத்துள்ள விரிதாளில் இருந்து அகற்றவும்.

அனுப்பிய மெசேஜ்களைக் கண்டறிதல்

அனுப்பிய மெசேஜ்களைக் கண்டறிய, Gmailலில் “அனுப்பியவை” ஃபோல்டரைத் திறக்கவும். மெசேஜில் “மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம் அனுப்பியது” என்ற பேனரைப் பார்ப்பீர்கள்.

அனுப்புதல் வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்
மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம், நீங்கள்:
  • “பெறுநர்” வரியில் ஒரு மெசேஜிற்கு 1,500 பெறுநர்கள் வரையிலும் சேர்க்கலாம்
  • ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1,500 பேருக்கு அனுப்பலாம்
    • மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம், ஒரு மெசேஜை 1,000 பெறுநர்களுக்கும் மற்றொரு மெசேஜை 500 பெறுநர்களுக்கும் அனுப்பலாம்.
பணி, பள்ளி மற்றும் Workspace Individual கணக்குகள் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2,000 மெசேஜ்கள் அனுப்பலாம் என்ற வரம்பு உள்ளதால், மெயில் மெர்ஜ் அம்சத்தின் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1,500 பெறுநர்களுக்கு மெசேஜ்களை அனுப்பினாலும் மேலும் 500 சாதாரண மின்னஞ்சல்களை நீங்கள் தொடர்ந்து அனுப்ப முடியும்.
மெயில் மெர்ஜ் அம்சம் மூலம் 1 மாதத்தில் நீங்கள் தொடர்புகொள்ளக்கூடிய தனிப்பட்ட பெறுநர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
Cc மற்றும் Bcc பெறுநர் எண்ணிக்கைக்கான வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்
மெயில் மெர்ஜ் அம்சம் மூலம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜின் “Cc” அல்லது “Bcc” புலத்தில் ஒரேயொரு பெறுநரை மட்டுமே சேர்க்க முடியும். “Cc” அல்லது “Bcc” புலத்தில் சேர்க்கப்படும் பெறுநரின் மின்னஞ்சல் முகவரி, அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களிலும் சேர்க்கப்படும்.
  • எடுத்துக்காட்டாக, ஒரு மெசேஜை 500 பெறுநர்களுக்கு அனுப்பும்போது “Bcc” புலத்தில் "support@company.com" என்பதைச் சேர்த்தால் "support@company.com" என்ற முகவரிக்கு மெசேஜின் 500 நகல்கள் அனுப்பப்படும். இப்படி அனுப்பும்போது “Cc” அல்லது “Bcc” புலத்தில் சேர்க்கும் பெறுநருக்கு அனுப்பப்படும் மெசேஜ் எண்ணிக்கையையும் சேர்த்து உங்களுக்கான தினசரி வரம்பில் 1,000ஐ எட்டிவிட்டதாகக் கணக்கிடப்படும்.
முக்கியம்: விரிதாளைப் பயன்படுத்தி பெறுநர்களைச் சேர்க்கும்போது உங்கள் மெசேஜில் “Cc” அல்லது “Bcc” பெறுநர்களைச் சேர்க்க முடியாது.
குழுவிலகிய பெறுநர்கள்
மெயில் மெர்ஜ் அம்சத்தை இயக்கும்போது, குழுவிலகுவதற்கான பிரத்தியேக இணைப்பு ஒன்று ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியிலும் தானாகவே சேர்க்கப்படும். பெறுநர்கள் இதைப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல்களுக்கு மீண்டும் குழுசேரலாம் அல்லது அவற்றிலிருந்து குழுவிலகலாம்.
பெறுநர் எவரேனும் உங்கள் மின்னஞ்சல்களுக்கு மீண்டும் குழுசேர்ந்தாலோ அவற்றிலிருந்து குழுவிலகினாலோ அது குறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள். ஆனால், குழுவிலகிய பெறுநர்கள் அனைவரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் உங்களுக்குக் கிடைக்காது.
மெசேஜை அனுப்பிய பிறகு காட்டப்படும் உறுதிப்படுத்தல் பெட்டியில், குழுவிலகியுள்ளதால் இந்த மின்னஞ்சல் எத்தனை பேருக்கு அனுப்பப்படாது என்ற மொத்த எண்ணிக்கை காட்டப்படும்.
முக்கியம்: எனினும் அதே டொமைனில் உள்ள வேறு கணக்குகளில் இருந்து மெயில் மெர்ஜ் அம்சத்தைப் பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ நீங்கள் அனுப்பும் மெசேஜ்களைக் குழுவிலகிய பெறுநர்கள் தொடர்ந்து பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, "support@company.com" முகவரியில் இருந்து அவர்கள் குழுவிலகினாலும் "marketing@company.com" என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல்களைத் தொடர்ந்து பெறக்கூடும்.
பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால்:
  • பயனர் கணக்கு நீக்கப்படும்போது குழுவிலகிய தரவை நிராகரிக்க மாட்டோம்.
  • தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அனுப்புநர்களிடம் இருந்து பெறுநர்களால் குழுவிலக முடியாது.
உங்கள் மெசேஜ்கள் ஸ்பேம் என்று குறிக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி?
மொத்தமாக மெசேஜ்களை அனுப்பும்போது, பெறுநரின் இன்பாக்ஸை மதிக்கும் வகையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். உள்ளூர் ஒழுங்குமுறைகளையும் Gmail கொள்கைகளையும் பின்பற்றவும்.
மின்னஞ்சல் விளம்பரம் பயனளிக்க வேண்டுமெனில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் உங்களையும் பெறுநர்களையும் அர்த்தமுள்ள வகையில் இணைக்க வேண்டும். மொத்தமாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து மேலும் அறிக.
மெயில் மெர்ஜ் அம்சத்தின் வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்
இந்த வகையான மெசேஜ்களில் மெயில் மெர்ஜ் அம்சத்தைப் பயன்படுத்த முடியாது:
  • பதிலளித்தல்
  • முன்னனுப்புதல்
  • திட்டமிட்டு அனுப்புதல்
  • இரகசியப் பயன்முறை
மெசேஜில் ஏதேனும் இணைப்பைச் சேர்த்தால், அந்த இணைப்பு ஒவ்வொரு பெறுநருக்கான மெசேஜின் நகலிலும் சேர்க்கப்படும். இதனால், சேமிப்பகம் அதிகமாகப் பயன்படுத்தப்படலாம்.
  • எடுத்துக்காட்டாக, 10 மெ.பை அளவுள்ள ஓர் இணைப்புடன் 500 பெறுநர்களுக்கு ஒரு மெசேஜை அனுப்பும்போது அதற்காக உங்கள் சேமிப்பகத்தில் 5 ஜி.பை. பயன்படுத்தப்படும்.

உதவிக்குறிப்பு: சேமிப்பிடத்தை மிச்சப்படுத்த, ஃபைலை இணைப்பதற்குப் பதிலாக அதை Google Driveவில் பதிவேற்றி அதற்கான இணைப்பை மெசேஜில் சேர்க்கவும். Google Driveவில் இருந்து ஃபைல்களைப் பகிர்வது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பதிலீட்டுக் குறிச்சொற்களை இவற்றில் பயன்படுத்த முடியாது:
  • தலைப்பு வரிகள்
  • லிங்க் சேர்க்கப்பட்ட வார்த்தைகள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8686061574249909081
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false