மொத்தமாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான சிறந்த நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வணிகரீதியாக அல்லது மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பும்போது பெறுநரின் இன்பாக்ஸிற்கு மதிப்பளிக்கும் விதமான சிறந்த நடைமுறைகள், உள்ளூர்ச் சட்டவிதிகள், Gmail கொள்கைகள் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்கள் மின்னஞ்சல் பிரச்சாரம் சிறப்பானதாக அமைய, மின்னஞ்சலைப் பெறுபவர்களையும் உங்களையும் அர்த்தமுள்ள வகையில் இணைக்கும்படி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் இருக்க வேண்டும். மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பும்போது அவற்றின் செயல்திறனை மேம்படுத்த உதவும் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெறுநர்களின் ஒப்புதலைப் பெறுதல்

வாடிக்கையாளர்களுக்குத் தொழில்ரீதியான மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு முன்பு, அவர்களிடமிருந்து ஒப்புதலைப் பெற வேண்டுமென்பது பல நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தேவையாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலை அனுப்புவதற்கு முன்பு, உங்கள் மின்னஞ்சலைப் பெறுவதற்கு அவர்கள் ஒப்புதல் வழங்குவதற்கான விருப்பமோ குழு சேர்வதற்கான விருப்பமோ அவர்களுக்கு வழங்குவதே ஒப்புதலைப் பெறும் சிறந்த வழியாகும்.

குழுவிலகுவதற்கான விருப்பத்தைப் பெறுநர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் பல நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தேவையாக உள்ளது. குழுவிலகுதல் விருப்பம் உள்ளமைக்கப்பட்ட மொத்த அல்லது தொழில்ரீதியான மின்னஞ்சல்களை அனுப்ப மெயில் மெர்ஜைப் பயன்படுத்தலாம். மெயில் மெர்ஜ் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: ஆர்டர் உறுதிப்படுத்தல்கள், ரசீதை அனுப்பும் மெசேஜ்கள் போன்ற சில வகையான மின்னஞ்சல்களில் இருந்து வாடிக்கையாளர்கள் குழுவிலக முடியாது என்பதை நினைவில்கொள்ளவும்.

பொருந்தக்கூடிய ஸ்பேம் சட்டங்களைப் பின்பற்றுதல்

பல நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தொழில்ரீதியாகவோ மொத்தமாகவோ அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் அவற்றின் அனுப்புநரைக் கண்டறியும் விதமான தகவலைக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் Gmail தளவமைப்புகளைப் பயன்படுத்தக்கூடிய Google Workspace Individual சந்தாதாரர் என்றால் இவற்றைச் சேர்க்க அடிக்குறிப்பு உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்கலாம்:

  • பிசினஸ் பெயர்
  • பிசினஸ் முகவரி
  • மொபைல் எண்

Gmail தளவமைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏமாற்றும் நோக்கமுடைய உள்ளடக்கத்தைத் தவிர்த்தல்

ஏமாற்றுதல் என்பது Gmailலின் கொள்கைக்கு எதிரானது. அதில் ஈடுபடுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் கடுமையாக எதிர்க்கிறோம். வணிகரீதியாகவும் மொத்தமாகவும் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் ஏமாற்றும் நோக்கமின்றி இருக்க வேண்டும்:

  • மின்னஞ்சல் குறித்த தலைப்பு வரிகள் & உள்ளடக்கம்
  • மெசேஜ் தலைப்புகள்
  • அனுப்புநரின் பெயர்கள்
  • பதிலுக்கான முகவரிகள்

தேவையற்ற மின்னஞ்சல்களைப் பெறுவதில் இருந்து குழுவிலகுவதற்குப் பங்கேற்பாளர்களை அனுமதித்தல்

பெறுநர்கள் குழுவிலகுவதற்கான வழியை அனுப்புநர்கள் வழங்க வேண்டும் என்பதும் பல நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தேவையாக உள்ளது. Gmailலில், உங்களுக்கு உதவ மெயில் மெர்ஜில் குழுவிலகுதல் உதவி உள்ளமைக்கப்பட்டுள்ளது. மெயில் மெர்ஜ் மூலம் குழுவிலகுதல் கோரிக்கைகளை நிர்வகிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மின்னஞ்சலைத் தெளிவாக எழுதுதல்

மின்னஞ்சல் அனுப்பும் நோக்கத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் தலைப்புகளையும் உள்ளடக்கத் தலைப்புகளையும் வழங்கவும். பார்வையாளர்களின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு தெளிவான செயலழைப்பு அல்லது பட்டனைச் சேர்க்கவும்.

இவற்றையும் செய்யும்படி உங்களைப் பரிந்துரைக்கிறோம்:

  • உங்கள் பிராண்டு அல்லது இணையதளத்திற்குப் பொருந்தக்கூடிய தகவல்களை மின்னஞ்சலில் சேருங்கள்.
  • ஏமாற்றும் நோக்கமில்லாத உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்.
  • உரிய தகவல்களைத் துல்லியமாகக் காட்டும் இணைப்புகளையும் பட்டன்களையும் பயன்படுத்துங்கள்.

மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான கால அளவுகளை அமைத்தல்

உங்கள் சந்தாதாரர்களுக்குப் பயனில்லாத மெசேஜ்களை அடிக்கடி அனுப்பினால் அவர்கள் குழுவிலகவோ ஸ்பேம் என்று குறிக்கவோ வாய்ப்புகள் அதிகம்.

இதைத் தவிர்ப்பதற்கு இவற்றைப் பரிந்துரைக்கிறோம்:

  • உங்கள் பார்வையாளர்கள் நியாயமானதாகக் கருதும் எண்ணிக்கையில் மின்னஞ்சல்களை அனுப்புவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்கு எத்தனை முறை மின்னஞ்சல் அனுப்புவீர்கள், அவற்றில் என்னென்ன தகவல்கள் இருக்கும் ஆகியவை தொடர்பான தெளிவான தகவல்களை வழங்க வேண்டும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3339974371885796413
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false