ஒருங்கிணைக்கப்பட்ட புதிய Gmail தளவமைப்பு குறித்து அறிந்துகொள்க

Gmail புதிய ஒருங்கிணைக்கப்பட்ட காட்சி இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இதில் அஞ்சல், Chat, ஸ்பேஸ்கள், Meet ஆகியவற்றை ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.
புதிய தளவமைப்பில் நீங்கள்:
  • Gmailலின் முதன்மை மெனுவில் ஒருங்கிணைப்பட்ட Google ஆப்ஸைப் பார்க்கலாம்
  • சுருக்கக்கூடிய பேனலில் குறிப்பிட்ட ஆப்ஸ் மெனுக்களைப் பார்க்கலாம்
  • அறிவிப்புக் குமிழ்கள் மூலம் புதிய Chat & ஸ்பேஸ் மெசேஜ்களுக்கான அறிவிப்புகளைப் பெறலாம்
  • ஒவ்வொரு ஆப்ஸ் ஐகான் மீதும் கர்சரை வைத்து தளவமைப்பை மாற்றாமலேயே அங்கே இருப்பவற்றை மாதிரிக்காட்சியாகப் பார்க்கலாம்
  • பக்கவாட்டுப் பேனலைப் பார்க்கலாம் மறைக்கலாம்

புதிய ஆப்ஸ் மெனு அனுபவம்

Googleளின் Mail, Chat, Spaces, Meet ஆகிய அனைத்தும் இப்போது Gmail முதன்மை மெனுவில் ஒருங்கிணைப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆப்ஸின் முதன்மை மெனுவும் சுருக்கக்கூடிய பேனலில் காட்டப்படும். சுருக்கக்கூடிய பேனலை எப்போது வேண்டுமானாலும் மறைக்கலாம் காட்டலாம். இதற்கு:
  • ஆப்ஸிற்கு இடையே மாற: ஓர் ஆப்ஸ் பெயரைக் கிளிக் செய்யவும்.
  • ஐகான் மூலம் மாதிரிகாட்சியைப் பார்க்க: ஓர் ஐகான் மீது கர்சரை வைக்கவும்.
  • சுருக்கக்கூடிய பேனலை மறைக்க அல்லது காட்ட: மேல் இடதுபுறத்தில் உள்ள முதன்மை மெனுவைக் காட்டு அல்லது மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • முதன்மை மெனுவில் உள்ள ஆப்ஸைப் பிரத்தியேகமாக்க:
    1. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். விரைவு அமைப்புகள் மெனு காட்டப்படும்.
    2. "Gmailலில் உள்ள ஆப்ஸ்" பிரிவில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. Gmailலில் பயன்படுத்த வேண்டிய ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

புதிய உரையாடல் அனுபவம்

Chat பிரிவில், தனிநபர் அல்லது குழு உரையாடல் மெசேஜ்களை நீங்கள் அணுகலாம்.

திரையின் கீழ்ப்பகுதியில் சிறிய பாப்-அப் சாளரமாக உரையாடலைத் திறக்க, உரையாடலின் மேல் பகுதியில் அல்லது பக்கவாட்டுப் பேனலில் உள்ள உரையாடல் மெசேஜிற்கு அடுத்து தோன்றும் 'பாப்-அப்பில் திற' என்பதைக் கிளிக் செய்யவும். அஞ்சல், ஸ்பேஸ்கள் போன்ற பிற பிரிவுகளுக்கு மாறினாலும் இந்தச் சாளரம் காட்டப்படும். 

உரையாடல் மெசேஜ் அறிவிப்புக் குமிழ்கள்

புதிய உரையாடலோ ஸ்பேஸ் மெசேஜோ வரும்போது அதுதொடர்பான அறிவிப்பு கீழ் இடது மூலையில் குமிழாகக் காட்டப்படும். குமிழ் மீது கர்சரை வைக்கும்போது மெசேஜின் மாதிரிக்காட்சி காட்டப்படும்.

குமிழில் காட்டப்படும் மெசேஜுக்குப் பதிலளிக்க:

  • மெசேஜைத் திறந்து உரையாடல் அல்லது ஸ்பேஸ்கள் பிரிவில் இருந்து நேரடியாகப் பதிலளிக்க, குமிழைக் கிளிக் செய்யவும்.
  • திரையின் கீழ்ப்பகுதியில் சிறிய பாப்-அப் சாளரமாக உரையாடலைத் திறந்து பதிலளிக்க, பாப்-அப்பில் திற அல்லது பதிலளி என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிவிப்புக் குமிழ்களை இயக்க:

  1. Gmail சாளரத்தின் மேல் வலது மூலையில் உங்களின் நிலை இண்டிகேட்டருக்கு அடுத்துள்ள மேலும் விருப்பங்கள் கீழ் தோன்றுதல் அம்புக்குறி அதன் பிறகு அரட்டை அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அதன்பின் தோன்றும் சாளரத்தில், "அரட்டை அறிவிப்புகளை அனுமதி", "புதிய மெசேஜ்களுக்கு அரட்டைக் குமிழ்களைத் திற" ஆகியவற்றுக்கு அடுத்துள்ள பெட்டிகளைத் தேர்வுசெய்யவும்.
  3. சாளரத்தின் கீழே உள்ள முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்

  • அறிவிப்புக் குமிழ்களை முடக்க, "புதிய மெசேஜ்களுக்கு அரட்டைக் குமிழ்களைத் திற" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  • முழுத் திரைக்குப் பதிலாக பாப்-அப் காட்சியில் அரட்டைக் குமிழ்களைத் திறக்க, "அரட்டைக் குமிழ்களை முழுத்திரையில் திற" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14071615553071145454
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false