புதிய மின்னஞ்சல்களை Gmail எப்படி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அறிவிப்புகளின் வகைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.
பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.
Gmail அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்
முக்கியம்: Gmail அறிவிப்புகளைப் பெற, உலாவியைத் திறந்து Gmailலில் உள்நுழையவும்.
- கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்து எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே உள்ள "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" பிரிவுக்குச் செல்லவும்.
- அறிவிப்புகளை எப்போது பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- புதிய மின்னஞ்சல்களுக்கு அறிவிப்புகளை இயக்கு: உங்கள் இன்பாக்ஸிற்கோ முதன்மைப் பிரிவிற்கோ மின்னஞ்சல் வரும்போது அறிவிப்பைப் பெறுவீர்கள். Gmailலில் இன்பாக்ஸ் வகைகளை நீங்கள் பயன்படுத்தினால், முதன்மைப் பிரிவிற்கு வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டுமே அறிவிப்புகளைப் பெறுவீர்கள். இன்பாக்ஸ் வகைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- முக்கியமான மின்னஞ்சல்களுக்கு அறிவிப்புகளை இயக்கு: இன்பாக்ஸுக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வரும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள். மின்னஞ்சலின் முக்கியத்துவத்தை Gmail எப்படித் தீர்மானிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- மின்னஞ்சல் அறிவிப்புகளை முடக்கு: அனைத்து மின்னஞ்சல் அறிவிப்புகளும் முடக்கப்படும்.
- விருப்பத்திற்குரியது: அறிவிப்புகள் இயக்கப்பட்டிருக்கும்போது, “மின்னஞ்சல் அறிவிப்பு ஒலிகள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்த்தோன்றல் மெனுவைக் கிளிக் செய்து ஒலியைத் தேர்ந்தெடுக்கவும்.
- பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.