Gmail அறிவிப்புகளை மாற்றுதல்

புதிய மின்னஞ்சல்களை Gmail எப்படி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அறிவிப்புகளின் வகைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் சாதன அறிவிப்பு அமைப்புகளைப் பார்த்தல்

முக்கியம்: Gmail அறிவிப்புகளைப் பெற, சாதன அறிவிப்புகளை இயக்கவும்.

  1. Phone அல்லது iPadல் சாதனத்தின் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. Gmailலுக்கான அறிவிப்பு அமைப்புகளைப் பார்க்கவும்.

Gmail அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

Gmail ஆப்ஸில் உங்களுக்குப் பல கணக்குகள் இருந்தால் அனைத்து கணக்குகளிலும் இந்த அமைப்பை மாற்ற வேண்டும்.

முதன்மை லேபிளில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அறிவிப்புகள் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும்.

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "அறிவிப்புகள்" என்பதன் கீழேயுள்ள மின்னஞ்சல்அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. அறிவிப்பு நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.

முக்கிய மின்னஞ்சல்களுக்கு அறிவிப்புகளைப் பெறுதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "அறிவிப்புகள்" என்பதன் கீழ் உள்ள மின்னஞ்சல் அறிவிப்புகள் அதன் பிறகு அதிக முன்னுரிமை மட்டும் என்பதைத் தட்டவும்.

அறிவிப்பு ஒலிகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. இவற்றுக்கான அறிவிப்பு ஒலியை மாற்ற:
    • மின்னஞ்சல்: "அறிவிப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள மின்னஞ்சல் அறிவிப்புகள் அதன் பிறகு அறிவிப்பு ஒலிகள் என்பதைத் தட்டவும்.
    • Chat & ஸ்பேஸ்கள்: "அறிவிப்புகள்" என்பதன் கீழேயுள்ள Chat அறிவிப்புகள் அதன் பிறகு அறிவிப்பு ஒலிகள் என்பதைத் தட்டவும்.
    • ஒலியை இயக்கியதும் அதன் பெயர் காட்டப்படும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் அறிவிப்பு ஒலியைத் தேர்வுசெய்யவும்.
  5. அறிவிப்பு ஒலிகளை முடக்க எதுவும் வேண்டாம் என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18325974773325875618
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false