Gmail அறிவிப்புகளை மாற்றுதல்

புதிய மின்னஞ்சல்களை Gmail எப்படி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அறிவிப்புகளின் வகைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

Gmail அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

Google Chrome, Firefox, Safari போன்ற உலாவியில் நீங்கள் Gmailலில் உள்நுழைந்து அதைத் திறந்தபடி வைத்திருக்கும்போது மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற முடியும்.

குறிப்பு: உங்கள் உலாவிக்கான அனைத்து அறிவிப்புகளையும் முடக்கியிருந்தால் எந்த அறிவிப்புகளையும் பார்க்க மாட்டீர்கள்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே உள்ள "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" பிரிவுக்குச் செல்லவும்.
  4. புதிய மின்னஞ்சல் அறிவிப்புகள் ஆன், முக்கிய மின்னஞ்சல் அறிவிப்புகள் ஆன் அல்லது மின்னஞ்சல் அறிவிப்புகள் ஆஃப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: நீங்கள் இன்பாக்ஸ் வகைகளைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் புதிய அஞ்சலுக்கான அறிவிப்புகளை இயக்கியுள்ளீர்கள் எனில் உங்கள் Primary வகையிலுள்ள மெசேஜ்களைப் பற்றிய அறிவிப்புகளை மட்டுமே பெறுவீர்கள். முக்கியமான அஞ்சலுக்கான அறிவிப்புகளை இயக்கியிருந்தால் முக்கியமானது எனக் குறிக்கப்பட்ட அனைத்திற்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

மின்னஞ்சல் அறிவிப்புகளை என்னால் பார்க்க முடியவில்லை

நீங்கள் Windows 10 பயன்படுத்தினால் உங்கள் இணைய உலாவிக்கு வெளியே அறிவிப்புகளைப் பார்ப்பீர்கள். Windows செயல் மையத்தில் Chrome அறிவிப்புகளை இயக்கவும்.

அறிவிப்பு ஒலிகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள் அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “டெஸ்க்டாப் அறிவிப்புகள்” என்பதற்குச் செல்லவும்.
  4. புதிய மின்னஞ்சல்களுக்கு அறிவிப்புகளை இயக்கு அல்லது முக்கியமான மின்னஞ்சல்களுக்கு அறிவிப்புகளை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "மின்னஞ்சல் அறிவிப்பு ஒலிகள்" என்பதற்கு அடுத்துள்ள பட்டியலில் இருந்து ஓர் ஒலியைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. மின்னஞ்சல் அறிவிப்பு ஒலிகளை முடக்க, எதுவும் வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. கர்சரைக் கீழே நகர்த்தி அதன் பிறகு மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1206792896052638630
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false