Gmail அறிவிப்புகளை மாற்றுதல்

புதிய மின்னஞ்சல்களை Gmail எப்படி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அறிவிப்புகளின் வகைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

Gmail ஆப்ஸில் உங்களிடம் பல கணக்குகள் இருந்தால் அனைத்துக் கணக்குகளிலும் இந்த அமைப்பை மாற்ற வேண்டும்.

அறிவிப்புகளை இயக்குதல்

முதன்மை லேபிளில் உள்ள அனைத்து மெசேஜ்களுக்கும் அறிவிப்புகள் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும்.

முதலில் அறிவிப்புகளை இயக்கி உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' ஐகானை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. “அறிவிப்புகள்” என்பதற்குக் கீழே உள்ள மின்னஞ்சல் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. நீங்கள் பெற விரும்பும் மின்னஞ்சல் அறிவிப்பு வகையைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: உங்கள் Android சாதனத்திலும் அறிவிப்பு அமைப்புகள் உள்ளன, இவற்றுக்கும் Gmail ஆப்ஸிற்கும் தொடர்பில்லை.

குறிப்பிட்ட சில லேபிள்களுக்கான அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' ஐகானை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. லேபிள்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் லேபிள்களில் ஒன்றைத் தட்டவும். எ.கா. முக்கியமானவை.
  7. மெசேஜ்களை ஒத்திசை அதன் பிறகு கடந்த 30 நாட்கள் அல்லது அனைத்தும் என்பதைத் தட்டவும். நீங்கள் மெசேஜ்களை ஒத்திசைக்கவில்லை எனில் அந்த லேபிளுக்கான அறிவிப்புகளை இயக்க முடியாது.
  8. அந்த லேபிளுக்கான உங்கள் அறிவிப்பு அமைப்புகளைத் தேர்வுசெய்யவும். நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் லேபிள்களுக்கு இதை மீண்டும் செய்யவும்.
 
அதிக முன்னுரிமை கொண்ட மின்னஞ்சல்களுக்கு மட்டும் அறிவிப்புகளைப் பெறுதல்

அதிக முன்னுரிமை கொண்ட மின்னஞ்சல்களுக்கு மட்டும் அறிவிப்புகளைப் பெறும்படி நீங்கள் அமைக்கலாம்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் ’மெனு’ அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் கணக்கைத் தட்டவும்.
  4. மின்னஞ்சல் அறிவிப்புகள் அதன் பிறகு என்பதைத் தட்டி அதிக முன்னுரிமை மட்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: குறிப்பிட்ட சில லேபிள்களுக்கு நீங்கள் அமைத்துள்ள அறிவிப்பு அமைப்புகள் அதிக முன்னுரிமை கொண்ட மின்னஞ்சல்களுக்குப் பொருந்தாது.

மின்னஞ்சல் அறிவிப்பு ஒலிகளை இயக்குதல் அல்லது முடக்குதல்
  1. Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “அறிவிப்புகள்” என்பதற்குக் கீழே உள்ள அறிவிப்பு ஒலிகள் என்பதைத் தட்டவும். 
  5. “மின்னஞ்சல்” அல்லது "உரையாடல் & ஸ்பேஸ்கள்" என்பதற்குக் கீழே உள்ள அறிவிப்பு ஒலி அதன் பிறகு ஒலி என்பதைத் தட்டவும்.
  6. நீங்கள் பயன்படுத்த விரும்பும் அறிவிப்பு ஒலியைத் தேர்வுசெய்யவும்.
  7. அறிவிப்பு ஒலிகளை முடக்க எதுவும் வேண்டாம் என்பதைத் தட்டவும்.
Meetடிற்கு மட்டும் அறிவிப்புகளை இயக்குதல்

இந்த விருப்பத்தைக் கொண்டு அறிவிப்புகளை இயக்கலாம், நடந்துகொண்டிருக்கும் மீட்டிங்கிற்கு மீண்டும் எளிதாகச் செல்ல இது உதவும். உதாரணமாக வேறு ஆப்ஸில் இருந்து எளிதாக மீண்டும் மீட்டிங் திரைக்குச் செல்லலாம்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' ஐகானை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அறிவிப்புகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  6. Gmail சிஸ்டம் அமைப்புகளுக்குச் செல்வீர்கள், அங்கு Gmail அறிவிப்புகளை இயக்கலாம்.
அறிவிப்புகளை முடக்குதல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' ஐகானை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மின்னஞ்சல் அறிவிப்புகள் என்பதைத் தட்டி அதன் பிறகு எதுவும் வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

எனக்கு எந்த அறிவிப்புகளும் வருவதில்லை

உங்களுக்கு அறிவிப்புகள் வராமல் போனால், அறிவிப்புகளை இயக்க மேலே உள்ள வழிமுறையைப் பின்பற்றவும். இவற்றால் பயனில்லை எனில் இந்த வழிமுறையைப் பின்பற்றிப் பார்க்கவும்:

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'மெனு' ஐகானை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. "Gmailலை ஒத்திசை" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

இன்னும் உங்களுக்கு அறிவிப்புகள் வரவில்லை என்றால் Gmail ஆப்ஸில் ஒத்திசைவுப் பிழைகளைச் சரிசெய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9063826450387585913
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false