Gmail விட்ஜெட்டை நிர்வகித்தல்

முகப்புத் திரையில் Gmail ஆப்ஸ் விட்ஜெட்டைச் சேர்த்தல்

முக்கியம்: iPhoneகளிலும் iPadகளிலும் iOS 14 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.

சாதனத்தின் முகப்புத் திரையில் Gmail ஆப்ஸ் விட்ஜெட்டைச் சேர்க்க கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். பல கணக்குகளுக்கு விட்ஜெட்டைச் சேர்க்க கணக்குகளை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் சமீபத்தில் Gmail ஆப்ஸை நிறுவியிருந்தால் விட்ஜெட் அதன் கேலரியில் தோன்றுவதற்கு முன் ஆப்ஸைத் திறக்க வேண்டியிருக்கலாம்.

Gmail ஆப்ஸ் விட்ஜெட்டைச் சேர்க்க இவற்றைச் செய்யவும்:

  1. iPhone அல்லது iPadல் முகப்புத் திரையைத் தொட்டுப் பிடிக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள சேர் Plus என்பதைத் தட்டவும்.
  3. Gmail ஆப்ஸைத் தட்டவும்.
  4. விட்ஜெட்டைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. விட்ஜெட்டை முகப்புத் திரையில் காட்சிப்படுத்தவும்.
  6. முடிந்தது என்பதைத் தட்டவும்.

கணக்குகளை மாற்றுவதற்கான வழிமுறை

  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸ் விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.
  2. திருத்து அதன் பிறகு கணக்கை மாற்று என்பதைத் தட்டவும்.
  3. பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

பூட்டுத் திரை விட்ஜெட்டைச் சேர்த்தலும் உள்ளமைத்தலும்

முக்கியம்: 

  • iOS 16 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்
  • இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் iOS சாதனத்தில் Gmail ஆப்ஸை நிறுவியிருக்க வேண்டும்.
  1. பூட்டுத் திரையில் இருக்கும் கடிகாரத்தைத் தட்டிப் பிடிக்கவும்.
  2. கீழே உள்ள பிரத்தியேகமாக்கு என்பதைத் தட்டவும்.
  3. பிரத்தியேகமாக்கலைச் சேர்க்க பூட்டுத் திரையைத் தட்டவும்.
  4. விட்ஜெட்களைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. விட்ஜெட் கேலரியில், நீங்கள் சேர்க்க விரும்பும் விட்ஜெட்டைக் கண்டறியவும்.
  6. அந்த விட்ஜெட்டைத் தட்டவும் அல்லது கடிகாரத்தின் கீழ் உள்ள விட்ஜெட் பட்டிக்கு அதை இழுத்து வரவும்.
  7. விட்ஜெட் பட்டியில், நீங்கள் உள்ளமைக்க விரும்பும் விட்ஜெட்டைத் தட்டவும்.
  8. விருப்பமான உள்ளமைவைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. முடிந்தது அதன் பிறகு வால்பேப்பர் இணையாக அமை என்பதைத் தட்டவும்.
  10. பிரத்தியேகமாக்கலை நிறைவுசெய்ய பூட்டுத் திரையைத் தட்டவும்.

ஏற்கெனவே உள்ள பூட்டுத் திரை விட்ஜெட்டை உள்ளமைத்தல்

  1. பூட்டுத் திரையில் இருக்கும் கடிகாரத்தைத் தட்டிப் பிடிக்கவும்.
  2. கீழே உள்ள பிரத்தியேகமாக்கு என்பதைத் தட்டவும்.
  3. பிரத்தியேகமாக்கலைச் சேர்க்க பூட்டுத் திரையைத் தட்டவும்.
  4. விட்ஜெட் பட்டியில், ஏற்கெனவே உள்ள விட்ஜெட்டை இருமுறை தட்டவும்.
  5. விருப்பமான உள்ளமைவைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. முடிந்தது அதன் பிறகு வால்பேப்பர் இணையாக அமை என்பதைத் தட்டவும்.
  7. பிரத்தியேகமாக்கலை நிறைவுசெய்ய பூட்டுத் திரையைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7330527545521350617
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false