Google Newsஸில் இருந்து செய்திகளைப் பகிர்தல்

Google Newsஸில் கண்டறிந்த செய்திகளை Google News ஆப்ஸ் மூலமோ பிற ஆப்ஸ் மூலமோ பகிரலாம்.

உதவிக்குறிப்பு: பகிர்ந்த செய்திகளை ஆப்ஸ் மூலம் மட்டுமே அணுகலாம்.

செய்தியைப் பகிர்தல்

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

Google News ஆப்ஸிலிருந்து நேரடியாகப் பகிர்தல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. பகிர விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள 'மேலும்' 더보기 அதன் பிறகு பகிர் Share என்பதைத் தட்டவும்.
  3. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஃபோன் எண்ணுக்கோ மின்னஞ்சல் முகவரிக்கோ நீங்கள் பகிர்ந்தால் செய்திக்கான இணைப்பு அனுப்பப்படும்.
  4. அனுப்பு என்பதைத் தட்டவும்.

பிற ஆப்ஸ் மூலம் பகிர்தல்

சமூக வலைதளங்கள் போன்ற மற்ற ஆப்ஸ் மூலமும் பகிரலாம். 

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. பகிர விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள 'மேலும்' 더보기 அதன் பிறகு பகிர் Share என்பதைத் தட்டவும்.
  3. விரும்பும் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
    • அது தோன்றவில்லை எனில் இடதுபுறமாக நகர்த்தவும்.

Google News மூலம் பகிர்ந்த செய்திகளை நிர்வகித்தல்

நீங்கள் பிறருடன் பகிர்ந்த செய்திகளையும் உங்களுடன் பிறர் பகிர்ந்த செய்திகளையும் உங்களால் கண்டறியவும் அகற்றவும் முடியும்.

Google News மூலம் பகிர்ந்த செய்திகளைக் கண்டறிதல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தையோ பெயரின் முதலெழுத்தையோ தட்டவும்.
  3. அறிவிப்புகளும் பகிர்ந்தவையும் செயல்பாடு அதன் பிறகு பகிர்ந்தவை என்பதைத் தட்டவும்.

பகிர்ந்த செய்திகளை அகற்றுதல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தையோ பெயரின் முதலெழுத்தையோ தட்டவும்.
  3. அறிவிப்புகளும் பகிர்ந்தவையும் செயல்பாடு அதன் பிறகு பகிர்ந்தவை என்பதைத் தட்டவும்.
  4. அகற்ற விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள 'மேலும்' 더보기 அதன் பிறகு பகிர்வை அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைத் தட்டவும்.

செய்திகளைப் பகிர்பவர்களைத் தடுத்தல்/தடுப்பை நீக்குதல்

உங்களுடன் நேரடியாகச் செய்திகளைப் பகிரும் ஒருவரைத் தடுக்க விரும்பினால் அவரின் கணக்கைத் தடைசெய்யலாம்.

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தையோ பெயரின் முதலெழுத்தையோ தட்டவும்.
  3. அறிவிப்புகளும் பகிர்ந்தவையும் செயல்பாடு அதன் பிறகு பகிர்ந்தவை என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் தடைசெய்ய விரும்பும் நபரால் பகிரப்பட்ட செய்திக்குக் கீழே உள்ள 'மேலும்' 더보기 அதன் பிறகு பயனரைத் தடு இந்த வெளியீட்டை மறை என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: தடைசெய்த கணக்குகளை நீங்கள் தடுப்பு நீக்கிக் கொள்ளலாம். தடுப்பது/தடுப்பை நீக்குவது எப்படி என மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10112636618475650342
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false