Google News அறிவிப்புகளை நிர்வகித்தல்

Google Newsஸில் இருந்து வரும் அறிவிப்புகளின் எண்ணிக்கையையும் வகைகளையும் தேர்வுசெய்யலாம். Google News ஆப்ஸில் உங்களுக்கான அறிவிப்புகளை நிர்வகிக்கலாம்.

அறிவிப்புகளைப் பார்த்தல்

  1. மொபைல் சாதனத்தில் Google News ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. அறிவிப்புகள் & பகிர்ந்தவை என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: அறிவிப்புகளைப் பார்க்க, உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.

அறிவிப்புகளை மாற்றுதல்

  1. மொபைல் சாதனத்தில் Google News ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. செய்தி அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  4. அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
    • அறிவிப்புகளைப் பெற, அறிவிப்புகளைப் பெறுக என்பதை இயக்கவும்.
    • அனைத்து அறிவிப்புகளையும் நிறுத்த, அறிவிப்புகளைப் பெறு என்பதை ஆஃப் செய்யவும்.
  5. நீங்கள் பெறும் அறிவிப்புகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க, “அறிவிப்புகளின் எண்ணிக்கை” என்பதன் கீழ் “குறைவு,” “அதிகம்” ஆகியவற்றுக்கு இடையே தட்டி ஓர் எண்ணிக்கையைத் தேர்வுசெய்யவும்.
    • எந்த வகையான அறிவிப்புகளைப் பெற விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள பட்டனை இயக்கவும்/முடக்கவும்.

உதவிக்குறிப்பு: அறிவிப்புகளை மாற்ற, உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.

தினசரி செய்திச்சுருக்க மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் புதுப்பித்தல்

  1. மொபைல் சாதனத்தில் Google News ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. செய்தி அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  4. தினசரி செய்திச்சுருக்க மின்னஞ்சல்களைப் பெற, தினசரி செய்திச்சுருக்க மின்னஞ்சல்கள் என்பதை இயக்கவும். 

உதவிக்குறிப்பு: தினசரி செய்திச்சுருக்க மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் பெற, உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.

iPhone & iPad Android
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1831140562285390294
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false