செய்தித்தாள்களுக்கான டிஜிட்டல் சந்தாவைப் பெறுதல்

ஒரு வெளியீட்டின் அச்சுப்பிரதி பதிப்பிற்கு ஏற்கெனவே சந்தா சேர்ந்திருக்கிறீர்கள் எனில் Google Newsஸில் அந்த வெளியீட்டின் கட்டணமில்லா டிஜிட்டல் சந்தாவிற்கு நீங்கள் தகுதிபெறக்கூடும். சில வெளியீட்டாளர்கள் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் சந்தாக்களை வழங்குகின்றனர்.

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

உங்களின் தற்போதைய அச்சுப்பிரதி சந்தாவில் கட்டணமில்லா டிஜிட்டல் பதிப்பு கிடைக்கிறதா என்பதை அறிய:

  1. Google News ஆப்ஸை News திறக்கவும்.
  2. சந்தா சேர்ந்துள்ள நிறுவனத்தில் இருந்து செய்திக் கட்டுரை ஒன்றைத் திறக்கவும்.
  3. சந்தாக்களைச் சரிபார்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சந்தா சரிபார்ப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

சந்தாவைச் சரிபார்க்கும்போது இவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

  • நிறுவனத்திற்கான தற்போதைய சந்தா செயலில் இருக்க வேண்டும்.
  • கணக்கு விவரங்களைச் சரியாக வழங்க வேண்டும்.​ 
    • உதவிக்குறிப்பு: அஞ்சல் முகவரியை வழங்க வேண்டியிருந்தால் அச்சுப்பிரதி சந்தாவில் இருக்கும் அதே பெயரையும் முகவரியையும் வழங்கவும்.
பிழைச் செய்திகளுக்கான உதவி

"தவறான மின்னஞ்சல் முகவரி அல்லது கடவுச்சொல். மீண்டும் முயலவும்."

ஆன்லைன் கணக்கில் உள்நுழையப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் டைப் செய்ய வேண்டும். ஆன்லைன் கணக்கு இல்லையெனில் உங்கள் கணக்கை அமைக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

"வழங்கப்பட்ட சந்தாத் தகவல் சரியாக இல்லை. மீண்டும் முயலவும்."

சில சரிபார்ப்புத் தகவல்கள் வெளியீட்டாளரிடம் இருக்கும் உங்கள் கணக்கு விவரங்களிலிருந்து வேறுபடும்பட்சத்தில் இந்தச் செய்தி காட்டப்படும். கணக்கு எண்ணையும் பெயரையும் முகவரியையும் அச்சுப்பிரதி சந்தாவில் இருப்பதைப் போன்று டைப் செய்யவும். கணக்கு விவரங்கள் தொடர்பான உதவிக்கு, வெளியீட்டாளரின் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.

"இந்த வெளியீட்டிற்கான உங்கள் சந்தா செயலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியவில்லை."

உங்கள் சந்தா செயலில் உள்ளதா என்பதையும் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க, வெளியீட்டாளரின் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.

 
சில Google Play தயாரிப்புகளும் அம்சங்களும் அனைத்து நாடுகளிலும் கிடைக்காது. உங்கள் நாட்டில் கிடைப்பவற்றைப் பார்க்கவும்.

சந்தா தொடர்பாக உதவி பெறுதல்

கட்டணச் சந்தா அல்லது பிற Google News பர்ச்சேஸ்கள் தொடர்பாகக் கூடுதல் உதவி பெற எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5760813857678007794
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false