Google சேமிப்பகம் எவ்வாறு செயல்படுகிறது?

ஒவ்வொரு Google கணக்கிற்கும் Gmail, Google Drive, Google Photos ஆகியவற்றில் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய வகையில் 15 ஜி.பை. சேமிப்பகம் வழங்கப்படுகிறது. உங்களுக்கான சேமிப்பக வரம்பை அதிகரிக்க Google One மெம்பர்ஷிப்பை வாங்கிக்கொள்ளலாம் (கிடைக்கும் பட்சத்தில்). அவ்வப்போது சிறப்பு விளம்பரத்தின் மூலமோ அது தொடர்புடைய எதையும் வாங்கும்போதோ கூடுதல் சேமிப்பகத்தைப் பெறலாம். உங்கள் சேமிப்பக வரம்பைப் பற்றி மேலும் அறிய சேமிப்பக வரம்பின் கீழ் கணக்கிடப்படுபவை எவை? என்பதைப் பார்க்கவும்.

Google கணக்குச் சேமிப்பகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

சேமிப்பக வரம்பின் கீழ் கணக்கிடப்படுபவை எவை?

  • Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள அசல் தரமுள்ள படங்களும் வீடியாக்களும்.
  • ஜூன் 1, 2021க்குப் பிறகு Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட உயர்தரம் (இப்போது 'ஸ்டோரேஜ் சேவர்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அடிப்படைத் தரமுள்ள படங்களும் வீடியோக்களும். ஜுன் 1, 2021க்கு முன்பு உயர்தரத்திலோ அடிப்படைத் தரத்திலோ காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் உங்கள் Google கணக்குச் சேமிப்பகத்தின் கீழ் கணக்கிடப்படாது. இந்த மாற்றம் குறித்து மேலும் அறிக.
  • Gmail மெசேஜ்கள் & இணைப்புகள் (ஸ்பேம் & நீக்கியவை உட்பட).
  • Google Driveவில் உள்ள ஃபைல்கள் (PDFகள், படங்கள், வீடியோக்கள் உட்பட).
  • Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard போன்ற இணைந்து பணியாற்றும் ஆப்ஸில் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஃபைல்கள். 
    • ஜூன் 1, 2021க்குப் பிறகு உருவாக்கப்படும்/திருத்தப்படும் ஃபைல்கள் அனைத்தும் உங்கள் சேமிப்பக வரம்பின் கீழ் கணக்கிடப்படும். 
    • ஜூன் 1, 2021க்கு முன்பு பதிவேற்றிய அல்லது திருத்திய ஃபைல்கள் உங்கள் சேமிப்பக வரம்பின் கீழ் கணக்கிடப்படாது. 

நீங்கள் சேமிப்பக ஒதுக்கீட்டைத் தாண்டிவிட்டீர்கள் என்பதன் அர்த்தம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேமிப்பிடத்தை விட அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும். உங்களுக்கான சேமிப்பக வரம்பை விட அதிகமாகப் பயன்படுத்தினால், நீங்கள்:

  • Google Driveவில் புதிய ஃபைல்களையோ படங்களையோ பதிவேற்ற முடியாது.
  • Google Photosஸில் படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுக்க முடியாது.
  • Gmail மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாது.
  • Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard போன்ற இணைந்து பணியாற்றக்கூடிய ஆப்ஸில் புதிய ஃபைல்களை உருவாக்க முடியாது. சேமிப்பக உபயோகத்தை நீங்கள் குறைத்துக்கொள்ளும் வரை பாதிக்கப்பட்ட ஃபைல்களை எவராலும் திருத்தவோ நகலெடுக்கவோ முடியாது.
  • Google கணக்கில் உங்களால் உள்நுழையவும் அதனை அணுகவும் முடியும்.

2 வருடங்களாகவோ அதற்கும் மேலாகவோ சேமிப்பக வரம்பை விட அதிகமாகச் சேமிப்பிடத்தை உபயோகித்து வந்தால்: சேமிப்பிடத்தைப் போதுமான அளவிற்குக் காலியாக்கவில்லை என்றாலோ தேவையான அளவு கூடுதல் சேமிப்பிடத்தை வாங்கவில்லை என்றாலோ நீங்கள் உபயோகிக்கும் Gmail, Google Photos, Google Drive(Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஃபைல்களும் இதிலடங்கும்) ஆகிய தயாரிப்புகளில் இருந்து அனைத்து உள்ளடக்கத்தையும் நாங்கள் அகற்றக்கூடும் . ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன் நாங்கள்:

  • மின்னஞ்சல் மற்றும் Google தயாரிப்புகளினுள் உள்ள அறிவிப்புகள்  மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும். உள்ளடக்கம் நீக்கப்படத் தகுந்ததாக மாறுவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு உங்களைத் தொடர்புகொள்வோம். 
  • கட்டணம் செலுத்திக் கூடுதல் சேமிப்பகத்தை வாங்குவதன் மூலமாகவோ கோப்புகளை அகற்றுவதன் மூலமாகவோ உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படுவதைத் தவிர்க்க வாய்ப்பளிக்கிறோம்
  • எங்கள் சேவைகளில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்க வாய்ப்பளிக்கிறோம். உங்களின் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

பயன்பாட்டை ஒதுக்கீட்டிற்குள் குறைப்பது எப்படி?

https://one.google.com/storage தளத்தில் சேமிப்பிடத்தைக் காலியாக்கும் வழிகளை அறிய உதவும் சேமிப்பக நிர்வகிப்புக் கருவிகளுக்கான அணுகலையும் நாங்கள் வழங்குகிறோம். தனிப்பட்ட சாதனத்தில் உங்கள் கோப்புகளைப் பதிவிறக்கிக்கொண்டு கிளவுட் சேமிப்பகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது சேமிப்பிடத்தைக் காலியாக்குவதற்கான மற்றொரு வழியாகும்.

Gmail, Drive, Photos ஆகியவற்றுக்கு கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால் Google One மூலம் அதிக சேமிப்பிடம் கொண்ட திட்டத்திற்கு மேம்படுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

G Suite/Workspace கணக்குகளுக்கும் நுகர்வோர் கணக்குகளுக்கும் இந்தக் கொள்கைகள் பொருந்துமா?
சேமிப்பக ஒதுக்கீடு தொடர்பான மாற்றங்கள் Google Workspace சிலவற்றுக்கும் G Suite for Education, G Suite for Nonprofits ஆகிய திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த மாற்றங்களால் இவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்ள, Google Workspace தொடர்பான மாற்றங்கள் எனும் இடுகையைப் பார்க்கவும். 
Google Sites, Google Keep மற்றும் இங்கே பட்டியலிடப்படாத உள்ளடக்கத்தை உருவாக்கும் பிற ஆப்ஸுக்கும் இது பொருந்துமா? Blogger, YouTube உள்ளடக்கங்கள் என்னவாகும்?
இல்லை. இந்த மாற்றங்கள் Google Sites தயாரிப்பிற்கோ Google Keep தயாரிப்பிற்கோ பொருந்தாது. மேலும் இந்த மாற்றங்கள் Blogger உள்ளடக்கத்திற்கோ YouTube உள்ளடக்கத்திற்கோ பொருந்தாது. 
ஒதுக்கீடுசெய்யப்பட்ட சேமிப்பகத்தைவிட அதிகமாகப் பயன்படுத்துகிறேன். எனது உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முன்பு எவ்வளவு கால அவகாசம் கொடுக்கப்படும்? 
உங்கள் கணக்கு இந்தக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டால், உள்ளடக்கத்தை நீக்குவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே உரிய அறிவிப்பை வழங்க முயல்வோம். உங்களுக்கான சேமிப்பக ஒதுக்கீட்டைவிட அதிகமான சேமிப்பிடத்தை 2 வருடங்களாக உபயோகித்திருந்தால் உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படத் தகுந்ததாக ஆகிவிடும். உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் சேமிப்பக உபயோகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது Google One மூலம் அதிக சேமிப்பிடம் கொண்ட திட்டத்திற்கு மேம்படுத்தலாம்.
தரவை நீக்குவதற்கு முன்பு எனக்குத் தெரிவிப்பீர்களா? 
உங்கள் கணக்கு இந்தக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டால், உள்ளடக்கத்தை நீக்குவதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே உரிய அறிவிப்பை வழங்குவோம். உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அறிவிப்புகள் மூலமாகவும் உங்களைத் தொடர்புகொள்ள முயல்வோம்.உங்கள் Google கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரிகளை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிக .
2 வருடங்களுக்கு ஒரு முறை நான் செயலில் இருப்பேனா என எனக்குத் தெரியாது. அதற்கு என்ன செய்வது?

வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள் நீண்ட நாட்களுக்கு நீங்கள் மொபைலையோ கம்ப்யூட்டரையோ உபயோகிக்காதவாறு செய்துவிடலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் உங்கள் நிலையைச் செயலில் இல்லை என அமைக்க 2 வருடங்கள் இடைவெளியை நிர்ணயித்துள்ளோம். 

நீங்கள் செயலில் இல்லாத நிலையை அடைந்த பிறகு உங்கள் உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கான மற்றொரு வழியாக, செயலில்லாக் கணக்கு நிர்வாகியைப்பயன்படுத்தலாம். கணக்கைப் பற்றிய நினைவூட்டல்களை இந்தக் கருவி உங்களுக்கு அனுப்புகிறது. அத்துடன் கணக்கைப் பயன்படுத்த முடியாதபோது என்ன செய்ய வேண்டும் என்பதை நிர்வகிக்கவும் உதவுகிறது. கணக்கை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் கணக்கு நீக்கப்படத் தகுந்ததாக ஆகும் முன்பே உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்க, நம்பகமான தொடர்பு ஒன்றையும் இதன் மூலம் அமைத்துக்கொள்ளலாம். 

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்க, முன்கூட்டியே உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

எனது அன்புக்குரியவர் எனக்கு அனுப்பும் உள்ளடக்கத்தை எவ்வாறு பாதுகாப்பது?

தங்கள் ஆன்லைன் கணக்குகளை என்ன செய்வதென்று தெளிவான வழிமுறைகளை விட்டுச் செல்லாமலே பலர் இறந்துபோக நேரிடுவதைக் காண்கிறோம். இறந்துபோன பயனரின் கணக்கில் உள்ள உள்ளடக்கத்தை வழங்க, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடனும் அவரது பிரதிநிதிகளுடனும் (குறிப்பிட்ட சூழ்நிலைகளில்) Google இணைந்து பணியாற்ற முடியும். இறந்துபோன பயனரின் தரவுகளைக் கோருவதற்கான எங்களின் செயல்முறை குறித்து மேலும் அறிக. 

உங்கள் இறப்பிற்குப் பிறகோ நீங்கள் நீண்டகாலமாகச் செயலில் இல்லாத நிலையிலோ உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க, செயலில்லாக் கணக்கு நிர்வாகி குறித்து மேலும் அறிக.  

  • குறிப்பு: செயலில்லாத மற்றும் ஒதுக்கீட்டை மிஞ்சும் கணக்குகளுக்கான கொள்கைகளை மீறி செயலில்லாக் கணக்கு நிர்வாகி அமைப்புகள் செயல்படாது.
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false