உங்கள் iPhone மற்றும் iCloud கணக்கில் உள்ள உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்க Google Driveவை நீங்கள் பயன்படுத்தலாம்.
- படங்கள் Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கப்படும்.
- தொடர்புகள் Google Contactsஸுக்குக் காப்புப் பிரதி எடுக்கப்படும்.
- Calendar Google Calendarருக்குக் காப்புப் பிரதி எடுக்கப்படும்.
காப்புப் பிரதி எடுக்கும் முன்பு
- படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுக்க வைஃபை நெட்வொர்க்கில் உங்கள் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பலமுறை காப்புப் பிரதி எடுத்தால் புதிய படங்கள் மட்டுமே காப்புப் பிரதி எடுக்கப்படும். தொடர்புகள் மற்றும் கேலெண்டர்களுக்கான முந்தைய காப்புப் பிரதியை இது மாற்றியமைக்கும்.
- படங்களை ஆல்பங்களாக ஒழுங்கமைத்தால் அந்த ஆல்பங்கள் Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுக்கப்படாது.
- Facebook, Exchange போன்ற சேவைகளில் இருந்து தொடர்புகளையும் கேலெண்டர்களையும் காப்புப் பிரதி எடுக்க முடியாது.
காப்புப் பிரதி எடுக்கத் தொடங்குதல்
- உங்கள் iPhoneனில் Google Drive ஆப்ஸை நிறுவி திறக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு
என்பதைத் தட்டவும்.
- மேலே உள்ள அமைப்புகள்
காப்புப் பிரதி என்பதைத் தட்டவும்.
- காப்புப் பிரதி எடுக்கத் தொடங்கு என்பதைத் தட்டவும்.
காப்புப் பிரதி எடுத்த பிறகு
காப்புப் பிரதி எடுத்த பிறகு அனைத்துச் சாதனங்களிலும் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கலாம், பயன்படுத்தலாம்.
படங்கள்
- Google Photos ஆப்ஸில் படங்களை நீங்கள் பார்க்கவும் திருத்தவும் முடியும்.
- படங்கள் அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்படும். உங்கள் சேமிப்பகம் நிரம்பிவிட்டால் மீதமுள்ள படங்கள் அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்படும்.
தொடர்புகள்
- உங்கள் iPhoneனிலோ iPadலோ Google தொடர்பை ஒத்திசை என்பதை இயக்கியபிறகு தொடர்புகளை நீங்கள் பார்க்க முடியும்.
- உங்கள் சாதனத்தின் பெயரிலான புதிய குழுவில் iPhone மற்றும் iCloudல் உள்ள உங்கள் தொடர்புகள் இருக்கும்.
Calendar
- Google Calendar ஆப்ஸில் உங்கள் கேலெண்டர் நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.
- உங்கள் சாதனத்தின் பெயரிலான புதிய கேலெண்டரில் உங்கள் நிகழ்வுகள் சேர்க்கப்படும்.
உங்கள் காப்புப் பிரதி எடுப்பது முடிவடையவில்லை எனில்
உங்கள் உள்ளடக்கம் அனைத்தும் அல்லது சிலவற்றைக் காப்புப் பிரதி எடுக்கப்படாதபோது "காப்புப் பிரதி எடுப்பது முடிவடையவில்லை" எனும் மெசேஜை நீங்கள் பார்க்கக்கூடும்.
- உங்கள் iPhoneனிலோ iPadலோ Google Driveவின் மிகவும் சமீபத்திய பதிப்புக்குப் புதுப்பித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்களின் சில உள்ளடக்கம் காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை எனில் மீண்டும் முயலவும். சிக்கல் தற்காலிகமாக இருக்கக்கூடும்.
- எதுவும் காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை எனில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் முயலவும்.