Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் உங்கள் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. உங்கள் கணக்கின் சேமிப்பக வரம்பை அடைந்துவிட்டால் நீங்கள் Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றவோ உருவாக்கவோ முடியாது. Google சேமிப்பகக் கொள்கைகள் குறித்து மேலும் அறிக.
Google Drive சேமிப்பகத்தில் உள்ள ஃபைல்களை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்துகொள்ள:
- உங்களிடம் எவ்வளவு சேமிப்பிடம் உள்ளது என்று பாருங்கள்
- திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் எப்படி மாறுபடுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்
- சேமிப்பிடத்தைக் காலியாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்
- சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
- சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாதவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
- உங்கள் சேமிப்பிடம் நிரம்பிவிட்டால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்
உங்களிடம் எவ்வளவு சேமிப்பிடம் உள்ளது என்று பாருங்கள்
உங்களிடம் மீதமுள்ள சேமிப்பிட அளவைத் தெரிந்துகொள்ள, கம்ப்யூட்டரில் google.com/settings/storage தளத்திற்குச் செல்லவும்.
- பணி அல்லது பள்ளிக்காக Google Driveவைப் பயன்படுத்தினால் தனிநபருக்கான சேமிப்பக வரம்பை உங்கள் நிர்வாகி அமைத்துள்ளாரா என்பதைப் பார்க்கவும்.
- சேமிப்பக வரம்பை நெருங்கினாலோ அடைந்துவிட்டாலோ இவற்றைச் செய்யலாம்:
- சேமிப்பிடத்தைக் காலியாக்க ஃபைல்களை நிரந்தரமாக நீக்குதல்.
- கூடுதல் சேமிப்பகத்தைப் பெறுதல்:
- தனிப்பட்ட கணக்கிற்கு, Google Oneனில் பதிவு செய்யலாம் அல்லது Google One சேமிப்பகத்தைக் கூடுதலாக வாங்கலாம்.
Change your storage plan
- பணி அல்லது பள்ளிக் கணக்கிற்கு, கூடுதல் சேமிப்பகத்தை வழங்குமாறு உங்கள் நிர்வாகியிடம் கேட்கலாம். உங்களுக்கான கூடுதல் சேமிப்பகத்தை உங்களால் வாங்க முடியாது.
- தனிப்பட்ட கணக்கிற்கு, Google Oneனில் பதிவு செய்யலாம் அல்லது Google One சேமிப்பகத்தைக் கூடுதலாக வாங்கலாம்.
திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் எப்படி மாறுபடுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்
திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் மாறுபடும்:
- உங்களின் கணக்கு, கட்டணம் இல்லாத 15 ஜி.பை. சேமிப்பகம் கொண்ட தனிப்பட்ட கணக்காகும்: Drive, Gmail, Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் இந்தச் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது.
- Google கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை: எந்தத் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து இந்தக் கட்டுரையை ரெஃப்ரெஷ் செய்யவும்.
Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் Google Workspace சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. சேமிப்பக உபயோகம் எப்படி கணக்கிடப்படுகிறது என அறிக.
Google Workspace பதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு பயனருக்கான சேமிப்பக அளவு இருக்கும். பெரும்பாலான Google Workspace பதிப்புகளில் பகிரப்பட்ட சேமிப்பகம் உள்ளது. பகிரப்பட்ட சேமிப்பகம் பின்வரும் அட்டவணைகளில் மொத்தச் சேமிப்பகமாகவோ இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைச் சேமிப்பக அளவால் பெருக்கி வரும் மொத்தச் சேமிப்பக அளவாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும்.
Google Workspace பதிப்பு அல்லது சந்தா | சேமிப்பக வரம்புகள் |
---|---|
G Suite Basic புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது |
ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 30 ஜி.பை. கிடைக்கும் |
G Suite Business G Suite Business - காப்பிடப்பட்ட பயனர்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது |
வரம்பற்ற சேமிப்பகம் ஒவ்வொரு காப்பிடப்பட்ட பயனருக்கும் 1 டெ.பை. கிடைக்கும் |
Google Workspace Business Starter | காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 30 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Business Standard | காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 2 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Business Plus | காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Enterprise Starter | இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Enterprise Standard Google Workspace Enterprise Plus |
காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட இறுதிப் பயனர்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் Google Workspace உதவிக் குழுவுக்கு வைக்கும் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் Googleளின் விருப்புரிமையின்படி கூடுதல் சேமிப்பகம் கிடைக்கக்கூடும். |
Google Workspace for Education
Google Workspace பதிப்பு அல்லது சந்தா | சேமிப்பக வரம்புகள் |
---|---|
Google Workspace for Education Fundamentals Google Workspace for Education Standard |
இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் மொத்தம் 100 டெ.பை. கிடைக்கும் |
Google Workspace for Education Teaching and Learning Upgrade | இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace for Education Plus | இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக 20 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace for Education சேமிப்பகம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு சேமிப்பகம் கிடைக்கும் நிலையையும் பயன்பாட்டையும் புரிந்துகொள்ளுதல் என்பதற்குச் செல்லவும்.
Google Workspace Essentials
Google Workspace Essentials பதிப்புகளில் Gmail இருக்காது.
Google Workspace பதிப்பு அல்லது சந்தா | சேமிப்பக வரம்புகள் |
---|---|
Google Workspace Essentials Starter |
ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 15 ஜி.பை. கிடைக்கும் |
Google Workspace Essentials புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது |
இறுதிப் பயனரின் எண்ணிக்கையை 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம், அதிகபட்சம் 2 டெ.பை. வரை |
Google Workspace Enterprise Essentials | இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Enterprise Essentials Plus | இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம் |
Google Workspace Frontline
Google Workspace பதிப்பு அல்லது சந்தா | சேமிப்பக வரம்புகள் |
---|---|
Google Workspace Frontline Starter Google Workspace Frontline Standard |
ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 5 ஜி.பை. கிடைக்கும்* |
*இந்தச் சேமிப்பக வரம்பு Google Workspace Frontline பதிப்பைப் பயன்படுத்தும் இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் பொருந்தும் (வெவ்வேறு சேமிப்பக வரம்புகளை வழங்கும் வேறொரு Google Workspaceஸை வாடிக்கையாளர் வாங்கியிருந்தாலும் கூட).
Google Workspace for Nonprofits
Google Workspace பதிப்பு அல்லது சந்தா | சேமிப்பக வரம்புகள் |
---|---|
Google Workspace for Nonprofits |
ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 30 ஜி.பை. கிடைக்கும் |
Google One Plan |
Payment |
Availability |
---|---|---|
100 GB |
Monthly or yearly |
Everyone |
200 GB |
Monthly or yearly |
Everyone |
2 TB |
Monthly or yearly |
Everyone |
5 TB |
Monthly or yearly |
Upgrade for existing members |
10 TB |
Monthly |
Upgrade for existing members |
20 TB |
Monthly |
Upgrade for existing members |
30 TB |
Monthly |
Upgrade for existing members |
சேமிப்பிடத்தைக் காலியாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்
சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Drive- 'எனது Driveவில்' உள்ள பெரும்பாலான ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்களும் (PDFகள், படங்கள், வீடியோக்கள் போன்றவை) ஃபோல்டர்களும் 'எனது Driveவில்' இருக்கும். நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides, Forms போன்ற ஃபைல்களும் அதில் அடங்கும்.
- 'நீக்கியவை' ஃபோல்டரில் உள்ளவையும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன. 'நீக்கியவை' ஃபோல்டரை எப்படிக் காலியாக்குவது என்று அறிக.
- பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Driveவைப் பயன்படுத்தினால், பகிர்ந்த இயக்ககத்தின் 'நீக்கியவை' ஃபோல்டரில் உள்ளவையும் நிறுவனத்தின் சேமிப்பகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
- ஜூன் 1, 2021க்குப் பிறகு உயர் தரத்தில் (இப்போது ஸ்டோரேஜ் சேவர் என்று பெயரிடப்பட்டுள்ளது) அல்லது அடிப்படைத் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும். ஜூன் 1, 2021க்கு முன் உயர்தரத்திலோ அடிப்படைத் தரத்திலோ நீங்கள் காப்புப் பிரதி எடுத்த படங்களும் வீடியோக்களும் Google கணக்குச் சேமிப்பகத்தில் கணக்கிடப்படாது. Photos காப்புப் பிரதி விருப்பங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Gmail, Drive, Photos ஆகியவற்றில் உள்ளவை தவிர்த்து பிற ஃபைல்களும் உங்கள் Google சேமிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். உதாரணங்கள்: உங்கள் WhatsApp மெசேஜ்கள் மற்றும் மீடியாவின் காப்புப் பிரதிகள்.
உங்கள் WhatsApp மெசேஜ்கள் காப்புப் பிரதி எடுக்கப்படுவதை முடக்க:
- WhatsApp ஆப்ஸைத் திறந்து அமைப்புகளுக்குச் செல்லவும்.
- Drive காப்புப் பிரதிகள் என்பதை முடக்கவும்.
ஏற்கெனவே உள்ள உங்கள் WhatsApp காப்புப் பிரதிகளை இவற்றின் மூலம் நிர்வகிக்கலாம்:
- WhatsApp ஆப்ஸ்
- "உங்கள் Google கணக்கை நிர்வகியுங்கள்" என்பதற்குக் கீழ் உள்ள Google கணக்கு அமைப்புகள்
Google Drive for desktopபில் உள்ள ஆவணங்கள் drive.google.com தளத்திலுள்ள அதே ஆவணங்களை விட மாறுபட்ட அளவுள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
- ‘நீக்கியவை’ ஃபோல்டரிலுள்ள ஆவணங்கள் Google Driveவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். ஆனால் அவை உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்கப்படாது.
- பகிரப்படும் ஆவணங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். ஆனால் Google Drive சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது.
- ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோல்டர்களில் உள்ள ஆவணங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள அனைத்து ஃபோல்டர்களுடனும் ஒத்திசைக்கப்படும் என்பதால் அதிகச் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும்.
- உங்கள் கம்ப்யூட்டருடன் சில ஃபோல்டர்களை மட்டும் ஒத்திசைத்தால் Google Driveவில் காட்டப்படுவதை விட உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள சேமிப்பிடம் குறைவாக இருக்கும்.
- Mac அல்லது PC தேவைகள் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் ஃபைலின் அளவு drive.google.com தளத்தில் காட்டப்படுவதைவிடச் சிறிதளவு வேறுபடக்கூடும்.
சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாதவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Drive- "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் உள்ள ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது. உரிமையாளரின் Google Driveவில் உள்ள சேமிப்பிடத்தை மட்டுமே இந்த ஃபைல்கள் பயன்படுத்தும்.
- Google Sites.
- ஜூன் 1, 2021க்கு முன்பு நீங்கள் உருவாக்கி அந்தத் தேதிக்குப் பிறகு திருத்தாத Google Docs, Sheets, Slides, Forms, Jamboard மற்றும் Drawings ஃபைல்கள்.
உங்கள் சேமிப்பிடம் நிரம்பிவிட்டால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்
படங்களையோ வீடியோக்களையோ காப்புப் பிரதி எடுக்க முடியாது. கூடுதல் படங்களையும் வீடியோக்களையும் சேர்க்க விரும்பினால் Google சேமிப்பகத்தைக் காலியாக்குங்கள் அல்லது கூடுதல் Google சேமிப்பகத்தை வாங்குங்கள்.