சேவைகள் முழுவதும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் ஒழுங்கமைக்க Google Photosஸில் இருந்து Google Driveவிற்கு படங்களை நீங்கள் அனுப்பலாம்.
தொடங்கும் முன்பு
- 256 பிக்சல்களைவிட படத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
- .jpg, .gif, .webp, .tiff அல்லது .raw வடிவமைப்பில் கோப்பு வகை இருக்க வேண்டும்.
- பணியில் அல்லது பள்ளி மூலம் பயன்படுத்தும் Google கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் Google Driveவில் இருந்து பதிவிறக்கி Google Photosஸில் மீண்டும் பதிவேற்ற வேண்டும்.
உதவிக்குறிப்பு: உங்களின் அனைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எப்படி பதிவிறக்குவது என்பது குறித்து அறிக.
Google Driveவில் இருந்து படங்களையும் வீடியோக்களையும் Google Photosஸில் சேர்க்கவும்
- உங்கள் கம்ப்யூட்டரில் photos.google.comமிற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள பதிவேற்று
Google Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் படங்களைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.
- பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு படத்தை மாற்றினாலோ நீக்கினாலோ என்ன நிகழும்?
Driveவில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் Driveவில் மட்டும் செயல்படுத்தப்படும். Photosஸில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் Photosஸில் மட்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் சேமிப்பகத்தைச் சரிபார்த்தல்
Google கணக்கின் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் படங்களும் வீடியோக்களும் சேமிக்கப்படுகின்றன.
- உயர்தரம், அசல் தரம் போன்ற உங்கள் பதிவேற்ற அளவின் அடிப்படையில் Google Driveவில் இருந்து Google Photosஸிற்குச் சேமிக்கப்படும் உருப்படிகள் நகலெடுக்கப்படும்.
- Google Driveவில் இருந்து அசல் தரத்தில் Google Photosஸிற்கு உருப்படியை நகலெடுத்தால் Google Photosஸில் உள்ள அந்தப் புதிய நகல் உங்கள் சேமிப்பக வரம்பில் சேர்க்கப்படும்.
- Google Photos அல்லது காப்புப்பிரதி மற்றும் ஒத்திசைவு என்பதைப் பயன்படுத்தி அசல் தரத்தில் நீங்கள் பதிவேற்றினால் அது உங்கள் சேமிப்பக வரம்பில் சேர்க்கப்படாது.
- உங்கள் பதிவேற்ற அளவை எப்படி மாற்றுவது என்பது குறித்து அறிக.