Google Driveவில் வரைபடங்களை நிர்வகித்தல்

நீங்கள் உருவாக்கிய, உங்களுடன் பகிர்ந்த அனைத்து My Mapsஸையும் Google Driveவில் பார்க்கலாம். உங்கள் வரைபடங்களை நிர்வகிக்க Drive அம்சங்களைப் பயன்படுத்தவும்.

வரைபடத்தை உருவாக்குதல்/திறத்தல்

Google Driveவில் வரைபடத்தை உருவாக்க:

  1. உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. Google Driveவைத் திறக்கவும்.
  3. புதிது அதன் பிறகு மேலும் அதன் பிறகு Google My Maps என்பதைக் கிளிக் செய்யவும்.

My Mapsஸில் ஏற்கெனவே உருவாக்கிய வரைபடத்தைத் திறப்பதற்கு:

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. எனது இயக்ககம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் திறக்க விரும்பும் வரைபடத்தை இரு கிளிக் செய்யவும்.

Google Driveவில் உள்ள வரைபடத்தை நீக்குவதற்கு:

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. வரைபடத்தைக் கண்டறிந்து அதை ஒருமுறை கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

வரைபடத்தை நீக்கினால் Driveவில் உள்ள நீக்கியவை கோப்புறைக்கு அது நகர்த்தப்படும். அங்கிருந்து அதை நீங்கள் நிரந்தரமாக நீக்கவோ மீட்டெடுக்கவோ முடியும். நீக்கியவையிலிருந்து உங்கள் வரைபடத்தை நிரந்தரமாக நீக்கும் வரை My Mapsஸில் அது இன்னமும் காட்டப்படும்.

வரைபடத்தைப் பகிர்தல்

Google Driveவில் உங்கள் வரைபடங்களுக்குப் பகிர்தல் விருப்பங்களை நீங்கள் அமைக்கலாம். Driveவில் உள்ள பகிர்தல் அமைப்புகளில் நீங்கள் செய்யும் அனைத்து மாற்றங்களும் My Mapsஸில் தானாகவே காட்டப்படும்.

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. வரைபடத்தைக் கண்டறிந்து அதை ஒருமுறை கிளிக் செய்யவும்.
  3. பக்கத்தின் மேல்புறத்தில் உள்ள கருவிப்பட்டியில், பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "நபர்களை அழை" என்பதற்குக் கீழுள்ள வாக்கியப் பெட்டியில் நீங்கள் பகிர விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை டைப் செய்யவும். ஒரு நபரையோ, அஞ்சல் பட்டியலையோ, உங்கள் தொடர்புகளையோ தேர்வுசெய்யலாம்.
  5. கீழ் தோன்றும் மெனுவில் இருந்து அணுகல் நிலையைத் தேர்வுசெய்யவும்: பார்க்கலாம் அல்லது திருத்தலாம். (வரைபடங்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் விருப்பமும் காட்டப்படும்; இந்த விருப்பம் பார்க்கலாம் விருப்பத்தைப் போன்று செயல்படும்.)
வரைபடத்தின் தலைப்பையோ விளக்கத்தையோ மாற்றுதல்

Google Driveவில் உள்ள வரைபடத்தின் தலைப்பையோ விளக்கத்தையோ நீங்கள் மாற்றினால் அந்த மாற்றங்கள் தானாகவே My Mapsஸில் காட்டப்படும். My Mapsஸில் செய்யும் மாற்றங்கள் Google Driveவில் காட்டப்படும்.

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. வரைபடத்தைக் கண்டறிந்து அதை ஒருமுறை கிளிக் செய்யவும்.
  3. தலைப்பை மாற்ற, கூடுதல் செயல்களுக்கான மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும். அதன்பிறகு மறுபெயரிடு என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. விளக்கத்தை மாற்ற, கூடுதல் செயல்களுக்கான மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும். அதன்பிறகு விவரங்களைக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.
வரைபடங்களை ஒழுங்கமைத்தல்

உங்கள் வரைபடங்களை ஒழுங்கமைக்கவும் எளிதாகக் கண்டுபிடிக்கவும் Google Driveவைப் பயன்படுத்தவும். உதாரணமாக, உங்களின் சுற்றுலா வரைபடங்கள் அனைத்தையும் ஒரே ஃபோல்டரில் வைக்கலாம். நீங்கள் பல வரைபடங்களை உருவாக்கி இருந்து அதில் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் உடனடியாகத் திறக்க விரும்பினால், அந்த வரைபடத்தின் தலைப்பில் உள்ள வார்த்தைகளில் எதையாவது தேடல் பெட்டியில் உள்ளிடவும்.

Google Driveவில் கோப்புகளை ஒழுங்கமைப்பது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிக.

வரைபடத்தை நீக்குதல்

My Mapsஸில் இருந்தோ Google Driveவில் இருந்தோ வரைபடத்தை நீக்கினால் அது நீக்கியவை ஃபோல்டருக்கு நகர்த்தப்படும். நீக்கியவையில் உள்ள வரைபடத்தை நிரந்தரமாக நீக்க (அல்லது மீட்டெடுக்க) Google Driveவைத் திறந்து நீக்கியவை ஃபோல்டரில் அந்த வரைபடத்தைக் கண்டுபிடிக்கவும்.

Google Driveவில் உள்ள நீக்கியவை ஃபோல்டரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Driveவில் உள்ள வரைபடங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
  • சேமிப்பகம்: Google Driveவில் உள்ள சேமிப்பக வரம்பை வரைபடங்கள் பயன்படுத்துவதில்லை.
  • ஆஃப்லைன் ஒத்திசைவு: இணையத்திலுள்ள Google Driveவில் மட்டுமே உங்கள் வரைபடங்களைப் பார்க்க முடியும். ஆஃப்லைனில் அவற்றைப் பார்க்க முடியாது.
மொபைல் சாதனங்களில் My Mapsஸைப் பார்த்தல்
மொபைல் சாதனங்களில் My Mapsஸை உருவாக்க முடியாது. கம்ப்யூட்டரில் வரைபடத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி Google Driveவில் வரைபடத்தைப் பார்க்க:
  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உங்கள் வரைபடத்தைக் கண்டறியவும்.
  3. அதை ஒருமுறை கிளிக் செய்யவும்.
  4. வரைபடத்தை உங்கள் மொபைல் உலாவியில் நீங்கள் பார்க்கலாம்.
மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி Google Driveவில் உள்ள வரைபடத்தை நீக்க:
  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உங்கள் வரைபடத்தைக் கண்டறியவும்.
  3. வரைபடத்தின் இடது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளி ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
  4. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10710898494340287442
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false