Drive for desktop சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்களுடைய சில ஃபைல்கள் அல்லது அனைத்து ஃபைல்களும் கம்ப்யூட்டருக்கும் எனது Driveவுக்கும் இடையே ஒத்திசைக்கப்படாமல் இருந்தால் அதைச் சரிசெய்ய கீழே உள்ள பிழையறிந்து திருத்துதல் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

அடிப்படையான பிழையறிந்து திருத்துதல்

Drive for desktop ஆப்ஸில் இதுபோன்ற பொதுவான சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்:

  • கம்ப்யூட்டருக்கும் எனது Driveவுக்கும் இடையே ஃபைல்கள் ஒத்திசைக்கப்படாமல் இருத்தல்.
  • Drive for desktop ஆப்ஸ் திடீரென்று செயல்படாமல் நின்றுவிடுதல் அல்லது மூடிவிடுதல்.

இந்த எளிய வழிமுறைகள் மூலம் சிக்கல்களைச் சரிசெய்ய முயலுங்கள்:

  • கம்ப்யூட்டரின் இணைய இணைப்பைச் சரிபார்த்தல்.
  • Drive for desktop ஆப்ஸை மீண்டும் தொடங்குதல்.
  • கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்குதல்.
  • உங்கள் கணக்கின் இணைப்பை நீக்கிவிட்டு மீண்டும் இணைத்தல்.
  • Drive for desktop ஆப்ஸை மீண்டும் நிறுவுதல்
இணைய இணைப்பைச் சரிபார்த்தல்
நிலையான இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சில ஃபயர்வால், ப்ராக்ஸி மற்றும் பிற நெட்வொர்க் அமைப்புகள் Drive for desktop ஆப்ஸின் செயல்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். Driveவின் ஃபயர்வால் மற்றும் ப்ராக்ஸி அமைப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Drive for desktop ஆப்ஸை மீண்டும் தொடங்குதல்
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
    1. Mac: மேற்புறத்தில் உள்ள மெனு பட்டியில், அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. Windows: கீழ் வலதுபுறத்தில் உள்ள செயல் பட்டியில், அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. Drive for desktop ஆப்ஸை மீண்டும் திறக்கவும்
உங்கள் கணக்கின் இணைப்பை நீக்கிவிட்டு மீண்டும் இணைத்தல்
முக்கியம்: ஏற்கெனவே ஒத்திசைக்கப்படாத ஃபைல்கள் உங்களின் 'தொலைந்தவை & கண்டறியப்பட்டவை' ஃபோல்டருக்கு நகர்த்தப்பட்டிருக்கலாம். உங்கள் கணக்கின் இணைப்பை நீக்கினால் அவை நீக்கப்படும். உங்கள் கணக்கின் இணைப்பை நீக்கும் முன்பு அந்த ஃபைல்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகலெடுத்துக் கொள்ளவும்.
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பை நீக்க வேண்டிய கணக்கைக் கண்டறியவும்.
  4. கணக்கின் இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஃபைல் ஒத்திசைக்கப்படவில்லை என்றால், தரவு இழப்பைத் தவிர்க்கும் வகையில் அந்த ஃபைல்களை டெஸ்க்டாப்பிற்கு நகர்த்துவதற்கான விருப்பத்தை Drive for desktop ஆப்ஸ் வழங்கும்.
  5. மீண்டும் உள்நுழையவும்.
  6. Google Drive ஃபோல்டருக்கான புதிய சேமிப்பிடத்தைத் தேர்வுசெய்யவும்.
Drive for desktop ஆப்ஸை மீண்டும் நிறுவுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Drive பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Drive for desktop ஆப்ஸின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும்.
  3. ஆப்ஸை நிறுவவும்.

Drive for Desktop ஆப்ஸ் தாெடக்கச் செயல்முறை

Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்குதல்

முக்கியம்: தொடங்குவதற்கு முன் உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் Drive for desktop ஆப்ஸுடன் இணக்கமாக உள்ளதா என்று பார்க்கவும்.

  1. Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்குதல்:

    WINDOWSஸிற்குப் பதிவிறக்கு MACகிற்குப் பதிவிறக்கு

    1. கம்ப்யூட்டரில் இதைத் திறக்கவும்:
      1. Windowsஸில் GoogleDriveSetup.exe
      2. Macகில் GoogleDrive.dmg
    2. நிறுவலை நிறைவுசெய்ய திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

Drive for Desktop ஆப்ஸை நிறுவுதல் மற்றும் திறத்தல்

Drive for Desktop ஆப்ஸை நிறுவவும்

கம்ப்யூட்டரில் இதைத் திறக்கவும்:

  • Windowsஸில் GoogleDriveSetup.exe
  • Macகில் GoogleDrive.dmg

Drive for Desktop ஆப்ஸை நிறுவ, திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

  1. கம்ப்யூட்டரில் ஆப்ஸை நிறுவவும்.
  2. கம்ப்யூட்டரில் "Google Drive" என்ற ஃபோல்டர் உருவாகியிருக்கும்.

Drive for desktop ஆப்ஸைத் திறத்தல்:

கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸை நிறுவும்போது Google Drive என்ற பெயரில் ‘என் கம்யூட்டரில்’ ஒரு டிரைவையோ ‘Finderரில்’ ஒரு இடத்தையோ அது உருவாக்கும். எந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் Drive for desktop ஃபைல் அமைந்திருக்கும்:

  • Windows: திரையின் கீழ் வலதுபுறத்தில் இருக்கும்.
  • Mac: திரையின் மேல் வலதுபுறத்தில் இருக்கும்.

Driveவிலும் Drive for desktop ஆப்ஸிலும் நீங்கள் உருவாக்கும் புதிய ஃபைல்களும் ஃபோல்டர்களும் ஒத்திசைக்கப்பட்டு உங்கள் சாதனங்கள் அனைத்திலும் காட்டப்படும்.

  1. Drive for desktop ஆப்ஸைக் கிளிக் செய்து > உங்கள் பெயரைத் தட்டி > Google Driveவைத் திறக்கவும்.
  2. எனது Drive அல்லது பகிர்ந்த இயக்ககங்களில் இருந்து நீங்கள் திறக்க விரும்பும் ஃபைலை இரு கிளிக் செய்யவும்.

Drive for desktop ஆப்ஸில் உள்நுழைதல்

முதல் முறையாக Drive for desktop ஆப்ஸைத் திறக்கும்போது உள்நுழைய இவற்றைச் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. 'உலாவி மூலம் உள்நுழைக' என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Drive for desktop ஆப்ஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google கணக்கில் உள்நுழையவும்.

பிழைச் செய்திகளைச் சரிசெய்தல்

பகிர்ந்த இயக்ககத்தில் ஃபைல்களைச் சேர்க்க முடியவில்லை
பகிர்ந்த இயக்கக வரம்புகள் குறித்த மேலும் தகவல்களுக்கு Google Driveவில் பகிர்ந்த இயக்ககத்திற்கான வரம்புகள் கட்டுரையைப் பார்க்கவும்.
உங்கள் டிஸ்க் சேமிப்பிடம் குறைவாக உள்ளது அல்லது சேமிப்பகம் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது
Drive for desktop மூலம் ஃபைல்களை ஒத்திசைக்க உங்களிடம் போதுமான சாதனச் சேமிப்பகம் இருக்க வேண்டும். சாதனச் சேமிப்பகம் என்பது உங்கள் ஹார்டு டிரைவ் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அகற்றத்தக்க சாதனங்களாகும் (USBகள், வெளிப்புற ஹார்டு டிரைவ்கள் போன்றவை).
டிஸ்க் சேமிப்பிடம் குறைவாக உள்ளது என்ற பிழைச் செய்தி காட்டப்பட்டால் உங்கள் ஹார்டு டிரைவில் உள்ள சேமிப்பிடத்தைக் காலியாக்கவும்:
  1. மெசேஜில் காட்டப்படும் டிரைவில் இருந்து ஃபைல்களை நீக்கவும். உதாரணத்திற்கு Windowsஸில் C: டிரைவ்.
  2. Drive for desktop ஆப்ஸை விட்டு வெளியேறவும்.
  3. Drive for desktop ஆப்ஸை மீண்டும் தொடங்கவும்.
Drive for desktop ஆப்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் ஃபைல்களை அகற்றிவிட்டு ஆஃப்லைன் ஃபைல்களையும் பயன்படுத்தலாம்.
Google Workspace சேமிப்பகம் நிரம்பிவிட்டது
Google சேமிப்பகத்தில் போதுமான இடம் இல்லை என்றால் சேமிப்பிடத்தைக் காலியாக்கவும் அல்லது Google Oneனில் இருந்து கூடுதல் சேமிப்பகத்தைப் பெறவும்.
உங்களுக்குச் சொந்தமில்லாத ஃபைலில் மாற்றங்களை ஒத்திசைக்க முயலும்போதும் ஃபைலின் உரிமையாளரிடம் போதிய சேமிப்பகம் இல்லாதபோதும் இந்தப் பிழை ஏற்படலாம். மாற்றங்களை ஒத்திசைக்க, ஃபைலின் உரிமையை மாற்றும்படியோ அவரது சேமிப்பகத்தை நிர்வகிக்கும்படியோ உரிமையாளரிடம் கூறவும்.
ஃபைல்களை ஒத்திசைக்கும் அனுமதி உங்களுக்கு இல்லை
நீங்கள் செய்த மாற்றங்களை ஒத்திசைப்பதற்குத் தேவையான Google Drive அனுமதி உங்களுக்கு இல்லை.
இந்த ஃபைல்களில் செய்த மாற்றங்களை ஒத்திசைக்க, நீங்கள் திருத்த விரும்பும் ஃபைல் அல்லது ஃபோல்டரின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு திருத்துவதற்கான அணுகலைக் கேட்கவும். ஃபைல் அல்லது ஃபோல்டர் பகிர்ந்த இயக்ககத்தில் இருந்தால் பகிர்ந்த இயக்ககத்தின் நிர்வாகியைத் தொடர்புகொண்டு அணுகலைக் கேட்கவும்.
ஃபைல்களை ஒத்திசைக்க உங்கள் கம்ப்யூட்டர் அனுமதிக்கவில்லை
ஃபைல்களை ஒத்திசைக்க, Drive for desktop ஆப்ஸிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் அனுமதி தேவை.
இந்த ஃபைல்களை ஒத்திசைக்க, ஃபைல் அல்லது ஃபோல்டருக்கான ரீடு மற்றும் ரைட் பர்மிஷன் உங்களுக்கு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • Windowsஸில்:
    1. ஃபைல் அல்லது ஃபோல்டரை வலது கிளிக் செய்யவும்.
    2. பிராப்பர்ட்டிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. “பாதுகாப்பு” பிரிவைப் பார்க்கவும்.
  • MacOSஸில்:
    1. ஃபைல் அல்லது ஃபோல்டரை வலது கிளிக் செய்யவும்.
    2. தகவலைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. “பகிர்தல் மற்றும் அனுமதிகள்” பிரிவைப் பார்க்கவும்.
macOSஸில், சிஸ்டம் விருப்பத்தேர்வுகளில் உள்ள “பாதுகாப்பு & தனியுரிமை” அமைப்புகளை மாற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஃபோல்டர்கள் அல்லது Apple Photos தொகுப்பிற்கான அணுகலை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும்.macOSஸிற்கான தேவைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
ஃபைல்கள் மிகவும் பெரிதாக/சிறிதாக உள்ளன

இவற்றை Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்க முடியாது:

  • 200 மெ.பை. அல்லது 150 மெ.பி.க்கும் அதிக அளவுள்ள படங்கள்
  • 10 ஜி.பை.க்கும் அதிக அளவுள்ள வீடியோக்கள்
  • 256 x 256 பிக்சல்களுக்குக் குறைவான அளவுள்ள ஃபைல்கள்

ஃபைல் மிகவும் பெரிதாக இருந்தால், நீங்கள்:

  • படம் அல்லது வீடியோவின் அளவைக் குறைக்கலாம்.
  • படம் அல்லது வீடியோவை நீக்கலாம்.
  • படம் அல்லது வீடியோவை ஒத்திசைக்கப்படாத ஃபோல்டருக்கு நகர்த்தலாம்.

ஃபைல் மிகவும் சிறியதாக இருந்தால், நீங்கள்:

  • படம் அல்லது வீடியோவை நீக்கலாம்
  • படம் அல்லது வீடியோவை ஒத்திசைக்கப்படாத ஃபோல்டருக்கு நகர்த்தலாம்
உதவிக்குறிப்பு: அளவு வரம்பிற்குக் கீழே உள்ள படங்களுக்கு ஃபோட்டோ சிறுபடங்களையோ பிற ஃபைல்களையோ சில ஆப்ஸ் தானாகவே உருவாக்கும்.
ஃபோல்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை

கம்ப்யூட்டரில் Google Drive ஃபோல்டரைப் புதிய இடத்திற்கு நகர்த்தியிருந்தால்

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. காட்டப்படும் அறிவிப்பில் கண்டுபிடி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெயர் மாற்றிய பதிப்பைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Google Drive மீண்டும் இணைக்கப்படும்.

Google Drive ஃபோல்டரின் பெயரை மாற்றி இருந்தால்

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. காட்டப்படும் அறிவிப்பில் கண்டுபிடி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெயர் மாற்றிய பதிப்பைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Google Drive மீண்டும் இணைக்கப்படும்.

'எனது Drive' பிரிவை மிரர் செய்யும் ஃபோல்டரை நீக்கி இருந்தால்

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. காட்டப்படும் அறிவிப்பில் இந்த டைரக்டரி ஒத்திசைவை நிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இனி அந்த ஃபோல்டரை ஒத்திசைக்க விரும்பவில்லை எனில்

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் சென்று அதன் பிறகு ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, Drive மற்றும்/அல்லது Photosஸைத் தேர்வுநீக்கவும்.

காணாமல் போன ஃபோல்டரைக் கண்டறிந்த பிறகு, ஒத்திசைவை நிறைவுசெய்ய Drive for desktop ஆப்ஸிற்குச் சிறிது நேரம் ஆகும்.

கிளவுடில் சில ஃபைல்களைக் கண்டறிய முடியவில்லை
ஃபைல் நீக்கப்பட்டதாலோ Driveவில் உங்களுடன் பகிர்வது நிறுத்தப்பட்டதாலோ மாற்றங்களை ஒத்திசைக்க முடியவில்லை.
  • மாற்றங்களை ஒத்திசைக்க, ஃபைலை மீண்டும் பகிரும்படி உரிமையாளரைக் கேட்கவும்.
  • ஃபைல் நீக்கப்பட்டிருந்தால் ஒத்திசைக்கும் ஃபோல்டரில் இருந்து அதை அகற்றிவிட்டு மீண்டும் சேர்க்கவும்.
  • மாற்றங்களை ஒத்திசைக்காமல் பிழையைச் சரிசெய்ய விரும்பினால் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைலை நீக்கவும்.
கம்ப்யூட்டரில் சில ஃபைல்களைக் கண்டறிய முடியவில்லை

கம்ப்யூட்டரில் ஃபைல் நீக்கப்பட்டதாலோ ‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு நகர்த்தப்பட்டதாலோ மாற்றங்களை ஒத்திசைக்க முடியவில்லை.

மாற்றங்களை ஒத்திசைக்க, கம்ப்யூட்டரின் ‘நீக்கியவை’ ஃபோல்டரில் இருந்து ஃபைலை மீட்டெடுக்கவும்.

இணைய வேகம், பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியவற்றுக்கான வரம்புகளை ஃபைல்கள் மீறுகின்றன
சில ஃபைல்களை ஒரு நாளில் குறிப்பிட்ட முறை மட்டுமே பதிவிறக்க முடியும். மேலும், Drive பயனர்களுக்குத் தினசரி பதிவேற்ற வரம்பும் உள்ளது.
இந்தச் சமயங்களில் Drive for desktop தானாகப் பின்னர் ஒத்திசைக்க முயலும் என்பதால் ஃபைல் ஒத்திசைக்கப்படும். ஒத்திசைக்கப்படவில்லை என்றால் ஒரு நாள் கழித்து Drive for desktop ஆப்ஸை மீண்டும் தொடங்கவும்.
Google ஃபைல்களைப் பதிவேற்ற முடியவில்லை

நீங்கள் ஒத்திசைக்க முயலும் Google ஃபைல் சிதைந்துள்ளது. Google Docs (.gdocs) மற்றும் பிற Google ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படுவதில்லை என்பதால் மூன்றாம் தரப்பு எடிட்டரைப் பயன்படுத்தி இந்த ஃபைல்களில் மாற்றங்களைச் செய்வது அவற்றைச் சிதைக்கக்கூடும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய அசல் Google ஃபைலை இணையத்திலுள்ள Driveவில் நகலெடுத்த பிறகு, தவறான Google ஃபைலை உங்கள் கம்யூட்டரில் இருந்து நீக்கிவிடவும். கூட்டுப்பணி செய்பவர்களுக்கு அந்த ஃபைலை நீங்கள் மீண்டும் பகிர வேண்டியிருக்கும்.

Macகில் இருக்கும் சிதைந்த டைரக்டரியைச் சரிசெய்தல்

முக்கியம்: இந்தப் படிகளை நிறைவுசெய்ய, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரின் நிர்வாகியாக இருந்து கடவுச்சொல்லை டைப் செய்ய வேண்டும்.

நீங்கள் MacOS Mojave அல்லது High Sierra பதிப்பில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தினால் Drive ஃபைல்களை ஒத்திசைப்பதற்குத் தேவையான அனுமதிகளில் சிக்கல் ஏற்படலாம்.

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய:

  1. கம்ப்யூட்டரில் Finder அதன் பிறகு ஆப்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. யூட்டிலிட்டிகள் ஃபோல்டரைத் திறக்கவும்.
  3. டெர்மினல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. sudo kextcache -clear என டைப் செய்யவும்
  5. Return பட்டனை அழுத்தவும்.
  6. sudo mv /private/var/db/KernelExtensionManagement /private/var/db/KernelExtensionManagementBackup என டைப் செய்யவும்
  7. Return பட்டனை அழுத்தவும்.
  8. sudo kextutil -l /Library/Google/DriveFS/dfsfuse.kext என டைப் செய்யவும்
  9. Return பட்டனை அழுத்தவும்.
  10. Drive for desktop ஆப்ஸைத் தொடங்கவும்.
கணக்கை ஏற்ற முடியவில்லை

உங்கள் கணக்கு ஏற்றப்படாததற்கான சில காரணங்கள்:

  • நீங்கள் இணைய இணைப்பில் இல்லாதது.
  • உங்களிடம் இயக்கக எழுத்துகள் இல்லாதது (Windows மட்டும்).
  • உங்களின் ப்ராக்ஸி அமைப்புகள் Drive for desktop ஆப்ஸை இயக்க அனுமதிக்காதது.
  • உங்கள் நிறுவனத்திற்கோ சாதனத்திற்கோ Drive for desktop ஆப்ஸை நிர்வாகி அனுமதிக்காதது.

உங்கள் கணக்கை ஏற்ற:

ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் தொடர்பாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது
நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது அல்லது அதைக் கண்டறிய முடியவில்லை.
நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் ஒரு டிரைவ் எழுத்து என்றால் அதை வேறொரு சாதனம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் அடுத்து கிடைக்கக்கூடிய டிரைவ் எழுத்தை Drive for desktop ஆப்ஸ் தேர்ந்தெடுக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டிரைவ் எழுத்தைப் பயன்படுத்த இந்த எழுத்தைப் பயன்படுத்தும் சாதனத்தின் இணைப்பை நீக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் ஒரு ஃபோல்டர் என்றால் அது காலியாக இருப்பதோடு ஃபோல்டர் இருக்குமிடத்திற்கான அணுகல் Drive for desktop ஆப்ஸிற்கு இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
ஃபைலை ஒத்திசைக்க முடியவில்லை அல்லது அசல் ஃபைலில் செய்த மாற்றங்களைச் சேமிக்க முடியவில்லை
உங்களின் அசல் ஃபைலை அணுக முடியவில்லை, ஆனால் நீங்கள் செய்த திருத்தங்களுடன் இருக்கும் ஃபைலின் நகல் அதன் அசல் முதல்நிலை ஃபோல்டரின் கீழே இருக்கும். அசல் முதல்நிலை ஃபோல்டரை அணுக முடியவில்லை என்றால், அந்த ஃபைல் ‘எனது Driveவின்’ மூலத்திற்கு நகர்த்தப்படும். சில சூழ்நிலைகளில் ‘தொலைந்தவை & கண்டறியப்பட்டவை’ ஃபோல்டருக்கு ஃபைல் நகர்த்தப்படலாம்.
இந்தப் பிழை பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழும்:
  • சாதனத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் கிளவுடில் உள்ளவற்றுடன் இணக்கமாக இல்லாதபோது.
  • அசல் ஃபைல் நீக்கப்பட்டிருக்கும்போது அல்லது நகர்த்தப்பட்டிருக்கும்போது.
  • அந்த ஃபைலைத் திருத்துவதற்கான அனுமதி உங்களுக்கு அப்போது இல்லாதபோது.
  • நீக்கப்பட்ட ஃபோல்டர் அல்லது திருத்துவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லாத ஃபோல்டருக்கு அந்த ஃபைலை நீங்கள் நகர்த்தும்போது.
நீங்கள் செய்த மாற்றங்களை ஒத்திசைக்க, அசல் ஃபைலுக்கான அணுகல் உங்களுக்கு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். ஃபைல் உங்களுக்குச் சொந்தமானது இல்லை என்றால் ஃபைல் அல்லது ஃபோல்டரின் உரிமையாளரிடம் அணுகலைக் கேட்கவும். ஃபைல் அல்லது ஃபோல்டர் பகிர்ந்த இயக்ககத்தில் இருந்தால் பகிர்ந்த இயக்ககத்தின் நிர்வாகியைத் தொடர்புகொண்டு அணுகலைக் கேட்கவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டரை ஒத்திசைக்க முடியவில்லை, "தொலைந்தவை & கண்டறியப்பட்டவை" என்பதற்கு நகர்த்தப்பட்டது
அரிதான சில சந்தர்ப்பங்களில், அனுமதிகள், நெட்வொர்க் பிழைகள் மற்றும் பிற காரணங்களால் Drive for desktop ஆப்ஸால் ஒரு ஃபைலைப் பதிவேற்ற முடியாமல் போகலாம். ஒத்திசைக்கப்படாத அந்த ஃபைல் உங்கள் ஹார்டு டிரைவில் உள்ள “தொலைந்தவை & கண்டறியப்பட்டவை” ஃபோல்டரில் நகலெடுக்கப்பட்டிருக்கும். இப்படி நிகழும்போது “தொலைந்தவை & கண்டறியப்பட்டவை” போல்டரைத் திறப்பதற்கான இணைப்புடன் ஓர் அறிவிப்பு காட்டப்படும். இயல்பாக, இந்த ஃபோல்டர் இங்கே இருக்கும்:
  • macOS: /Users/<username>/Library/Application Support/Google/DriveFS/<account_token>/lost_and_found
  • Windows: C:\Users\<username>\AppData\Local\Google\DriveFS\<account_token>\lost_and_found
முக்கியம்:
  • macOSஸில்: “லைப்ரரி” ஃபோல்டர் இயல்பாகவே macOSஸில் மறைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கும் மறைக்கப்பட்டிருந்தால் Finderரைத் திறந்து மேல் இடது மூலையில் உள்ள செல் அதன் பிறகு லைப்ரரி என்பதைக் கிளிக் செய்தும் இதை அணுகலாம்.
  • Windowsஸில்: %AppData% என்பதை முகவரிப் பட்டியில் நேரடியாக டைப் செய்வதன் மூலம் AppData ஃபோல்டரைக் கண்டுபிடிக்கலாம்.
    • Google Driveவில் உள்நுழைந்துள்ள ஒவ்வொரு கணக்கிற்கும் தொடர்புடைய <account_token> ஃபோல்டர்கள் இருக்கும். ஃபோல்டரின் பெயராக எண்கள் அடங்கிய நீண்ட வார்த்தை இருக்கும்.
      • உதாரணத்திற்கு போல்டரின் பெயர்: 1245555729303
நீங்கள் செய்த மாற்றங்களை ஒத்திசைக்க, “தொலைந்தவை & கண்டறியப்பட்டவை” ஃபோல்டரில் உள்ள ஃபைல்களைப் பார்க்கவும். மீண்டும் ஒத்திசைக்க இந்த ஃபைல்களை எனது Driveவுக்கோ உங்கள் கம்ப்யூட்டரில் வேறொரு இடத்திற்கோ நகர்த்தவும்.

முக்கியம்: உங்கள் கணக்கின் இணைப்பை நீங்கள் நீக்கும்போது “தொலைந்தவை & கண்டறியப்பட்டவை” ஃபோல்டரில் உள்ள ஃபைல்களை இழக்க நேரிடும்.

Drive for desktop ஆப்ஸ் சிக்கலை எதிர்கொண்டது மற்றும் நின்றுவிட்டது

வைரஸ் கண்டறியும் சில மென்பொருட்களும் பாதுகாப்பு தொடர்பான சில மென்பொருட்களும் Drive for desktop ஆப்ஸின் செயல்பாட்டில் குறுக்கிடலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸை ஸ்கேன் செய்யும் மென்பொருள் இயக்கத்தில் இருக்கும்போது, "சிக்கலை எதிர்கொண்டதால் Drive for desktop செயல்படாமல் நின்றுவிட்டது" என்ற பிழைச் செய்தி தொடர்ந்து காட்டப்பட்டால் Drive for desktop ஆப்ஸை வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று மாற்றவும்.

  • Windowsஸில்: இயல்பு ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் G: ஆகும், ஆனால் நீங்கள் உள்ளமைத்த வேறொரு இடமும் இருக்கலாம்.
  • macOSஸில்: இயல்பு ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் /Volumes/GoogleDrive ஆகும், ஆனால் நீங்கள் உள்ளமைத்த வேறொரு இடமும் இருக்கலாம்.

மேம்பட்ட பிழையறிந்து திருத்துதல்

உங்கள் ஃபோல்டரை Google Driveவில் காப்புப் பிரதி எடுக்கவோ ஒத்திசைக்கவோ முடியவில்லை
உங்கள் ஃபோல்டரை ஒத்திசைக்க Driveவுக்கான ரீடு மற்றும் ரைட் பர்மிஷன்களைத் தேர்ந்தெடுத்த ஃபோல்டருக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
  • macOSஸில்:
  1. Finderரில் உங்கள் ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேல் இடது மூலையில், வலது கிளிக் செய்யவும் அல்லது ஃபைல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தகவலைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “பகிர்தல் மற்றும் அனுமதிகள்” என்பதன் கீழே அட்டவணையில் உங்கள் பயனர்பெயருக்கு “ரீடு மற்றும் ரைட்” சிறப்புரிமை இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • Windowsஸில்:
  1. File Explorerரில் உங்கள் ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வலது கிளிக் செய்யவும்.
  3. பிராப்பர்ட்டிகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பாதுகாப்பு பிரிவைக் கிளிக் செய்யவும்.
  5. குழு அல்லது பயனர் பெயர்கள் என்பதில் உங்கள் பெயரைக் கிளிக் செய்து “அனுமதி” என்பது அனுமதிகள் அனைத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதையும் “மறு” என்பதன் கீழே தேர்வுக்குறிகள் தேர்வுசெய்யப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
  6. உங்களுக்கான அனுமதிகளை மாற்றத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளமைவு ஃபோல்டர் பிழையின் காரணமாக Google Driveவைத் தொடங்க முடியவில்லை
முக்கியமான ஆப்ஸ் அமைப்புகளையும் தரவையும் சேமிக்க உள்ளமைவு ஃபோல்டரை Drive பயன்படுத்துகிறது. Google Drive தொடங்க, இந்த ஃபோல்டருக்கான முழு அனுமதியையும் உரிமையையும் நீங்கள் வழங்க வேண்டும்.
  • macOSஸில்:
இந்த ஃபோல்டர்களுக்கான அனுமதிகளை வழங்கவும். ஃபோல்டருக்கான அனுமதிகளை வழங்க 'உங்கள் ஃபோல்டரை Google Driveவில் காப்புப் பிரதி எடுக்கவோ ஒத்திசைக்கவோ முடியவில்லை' என்பதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தவும்.
முக்கியம்: macOSஸில் “லைப்ரரி” ஃபோல்டர் இயல்பாகவே மறைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கும் மறைக்கப்பட்டிருந்தால் Finderரைத் திறந்து மேல் இடது மூலையில் உள்ள செல் அதன் பிறகு லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • /Users/<username>/Library/Application Support/Google
    • இந்த ஃபோல்டருக்கான அனுமதி உங்களுக்கு இல்லை என்றால் உங்களிடம் DriveFS ஃபோல்டர் இருக்காது. இந்த ஃபோல்டருக்கான அனுமதியை நீங்கள் வழங்கியதும் உங்களால் ஆப்ஸைத் தொடங்க முடியும், DriveFS ஃபோல்டரை ஆப்ஸ் உருவாக்கும்.
  • /Users/<username>/Library/Application Support/Google/DriveFS
  • Windowsஸில்:
இந்த ஃபோல்டர்களுக்கான அனுமதிகளை வழங்கவும். ஃபோல்டருக்கான அனுமதிகளை வழங்க 'உங்கள் ஃபோல்டரை Google Driveவில் காப்புப் பிரதி எடுக்கவோ ஒத்திசைக்கவோ முடியவில்லை' என்பதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தவும்.
  • C:\Users\<username>\AppData\Local\Google\
    • இந்த ஃபோல்டருக்கான அனுமதி உங்களுக்கு இல்லை என்றால் கீழே DriveFS ஃபோல்டர் இருக்காது. இந்த ஃபோல்டருக்கான அனுமதியை நீங்கள் வழங்கியதும் உங்களால் ஆப்ஸைத் தொடங்க முடியும், DriveFS ஃபோல்டரை ஆப்ஸ் உருவாக்கும்
  • C:\Users\<username>\AppData\Local\Google\DriveFS
உதவிக்குறிப்புகள்:
கம்ப்யூட்டரில் உள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரியை அணுக முடியவில்லை
  1. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரிக்கோ கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரி அமைப்பின் கீழே காட்டப்படும் தடத்திற்கோ செல்லவும்.
  2. கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரிக்குச் சென்று இந்த ஃபோல்டர்கள் ஒவ்வொன்றுக்கும் ரீடு மற்றும் ரைட் பர்மிஷன்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
    • ஃபோல்டர் பெயராக நீண்ட எண்களை வார்த்தைகளாகக் கொண்ட ஃபோல்டர் அல்லது ஃபோல்டர்கள் இருக்கும்
      • உதாரணத்திற்கு போல்டரின் பெயர்: 1245555729303
    • இந்த ஃபோல்டர்கள் ஒவ்வொன்றும் Google Driveவில் உள்நுழைந்துள்ள ஒவ்வொரு கணக்கிற்கானவை.
  3. கணக்கு ஃபோல்டர்களுக்குச் சென்று “content_cache” என்ற பெயருள்ள ஃபோல்டரைக் கண்டறியவும்.
    • கணக்கு ஃபோல்டர்களுக்குள் உள்ள ஒவ்வொரு “content_cache” ஃபோல்டர்களுக்கும் ரீடு மற்றும் ரைட் பர்மிஷன்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
File Providerரைத் தொடங்கும்போது ஏற்படும் சிக்கலைப் பிழையறிந்து திருத்துதல்

File Providerரைத் திறக்கும்போது பிழை ஏற்பட்டால் Google Drive வேலை செய்யாது. இந்தப் பிழை macOS காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்தப் பிழை ஏற்பட்டால்:

  1. உங்கள் macOS ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்
  2. கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்கவும்

கருத்தை அனுப்புதல்

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு கருத்தை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கருத்தை டைப் செய்யவும்.
  4. என்ன தவறு என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த, பிழை கண்டறிதல் பதிவுகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிழை அறிக்கையை Googleளுக்கு அனுப்புதல்

உதவிக்காக, Google Drive for desktop ஆப்ஸ் பதிவுகளைப் பெறுவது எப்படி என அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15679358420479363915
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false