பகிர்தலை நிறுத்துதல் கட்டுப்படுத்துதல் அல்லது மாற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

பிறருடன் ஃபைலைப் பகிர்ந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் பகிர்வதை நீங்கள் நிறுத்தலாம். நீங்கள் ஃபைலைப் பகிர்ந்துள்ளவர்கள் அதைத் திருத்தலாமா பகிரலாமா என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: எனது Driveவில் இருந்து ஒரு ஃபைலைப் பகிர்வதற்கான அனுமதியை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பகிரும் நபருக்கு அனுமதிகள் இல்லையென்றால் இவற்றுக்கான அனுமதிகளை மாற்றலாம்:

  • ஃபைல் இருக்கும் ஃபோல்டர்
  • ஃபைல் மட்டும்

ஃபைலைப் பகிர்வதை நிறுத்துதல்

முக்கியம்:

  • நீங்கள் பிறருடன் ஒரு ஃபைலைப் பகிர்ந்தால் அதன் உரிமையாளரும் திருத்துவதற்கான அணுகல் உள்ளவர்களும் மட்டுமே அந்த ஃபைலின் பகிர்தல் அனுமதிகளை மாற்ற முடியும், ஃபைலைப் பகிர முடியும்.
  • ஃபைலைப் பிறர் அணுகுவதை நீங்கள் விரும்பவில்லை எனில் ஃபைலை வெளியிடுவதை நிறுத்தவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டரைப் பகிர்வதை நிறுத்துதல்
  1. Google Drive, Google Docs, Google Sheets, Google Slides போன்றவற்றில் ஃபைல் அல்லது ஃபோல்டரைக் கண்டறியவும்.
  2. ஃபைல்/ஃபோல்டரைத் திறக்கவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
  3. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இனி நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பாத நபரைக் கண்டறியவும்.
  5. அவரின் பெயருக்கு வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்து அதன் பிறகு அணுகலை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டருக்கான பொதுவான அணுகலை வரம்பிடுதல்

ஓர் ஆவணத்தின் பொது அணுகலை ‘வரம்பிடப்பட்டது‘ என மாற்றினால் அணுகல் உள்ளவர்கள் மட்டுமே ஃபைலைத் திறக்க முடியும்.

  1. Google Drive, Google Docs, Google Sheets அல்லது Google Slidesஸில் ஒரு ஃபைல் அல்லது ஃபோல்டரைக் கண்டறியவும்.
  2. ஃபைலையோ ஃபோல்டரையோ திறக்கவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
  3. பகிர் பகிர் அல்லது பகிர் பகிர் அதன் பிறகு இணைப்பை நகலெடு  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்யவும்.
  5. வரம்பிடப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
பகிர்ந்த ஃபைலை நீக்குதல்

உங்களுக்குச் சொந்தமான பகிர்ந்த ஃபைலை நீக்கினால்:

  • ஃபைலை நிரந்தரமாக நீக்கும் வரையில் அதைப் பார்க்கக்கூடிய, கருத்து தெரிவிக்கக்கூடிய அல்லது திருத்தக்கூடிய அனுமதி உள்ள நபர்களால் அதை நகலெடுக்க முடியும்.
  • ஃபைலை நிரந்தரமாக நீக்குவதற்கு, 'நீக்கியவை' ஃபோல்டரில் அந்த ஃபைலைக் கிளிக் செய்து 'நிரந்தரமாக நீக்கு' Delete forever என்பதைக் கிளிக் செய்யவும். ஃபைல்களை நீக்குவது குறித்து மேலும் அறிக.

உங்களுக்குச் சொந்தமில்லாத பகிர்ந்த ஃபைலை நீக்கினால்:

  • உங்கள் Driveவிலிருந்து ஃபைல் அகற்றப்படும். எனினும், மாற்றும் அனுமதி உள்ள பிறரால் தொடர்ந்து அதை அணுக முடியும்.
  • ஃபைலை மீண்டும் அணுக அதன் இணைப்பைத் திறந்து அதன் பிறகு ஃபைல் அதன் பிறகு எனது இயக்ககத்தில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஃபைல்கள் எப்படிப் பகிரப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் ஃபைலைப் பிறர் பதிவிறக்குவது, அச்சிடுவது அல்லது நகலெடுப்பதைத் தடுத்தல்

திருத்துவதற்கான அணுகல் உள்ளவர்கள் இவற்றைச் செய்ய முடியும்:

  • பிறருடன் ஃபைலைப் பகிர்வது.
  • ஃபைலில் பிறரைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது.
  • அணுகல் அனுமதிகளை மாற்றுவது.
  • ஃபைலை நகலெடுப்பது, அச்சிடுவது, பதிவிறக்குவது.

கவனத்திற்கு ஒரு ஃபோல்டருக்கு இந்த அமைப்பைப் பயன்படுத்த முடியாது. ஆனால் அந்த ஃபோல்டரில் உள்ள தனித்தனி ஃபைல்களுக்குப் பயன்படுத்தலாம்.

உங்கள் ஃபைலின் பார்வையாளர்களும் கருத்து தெரிவிப்பவர்களும் அதை அச்சிடுவது, நகலெடுப்பது மற்றும் பதிவிறக்குவதைத் தடுக்கும் வழிமுறைகள்:

  1. Google Drive, Google Docs, Google Sheets, Google Slides போன்றவற்றில் ஒரு ஃபைல் அல்லது ஃபோல்டரைக் கண்டறியவும்.
  2. அணுகலை வரம்பிட விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே உள்ள அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பார்வையாளர்களும் கருத்து தெரிவிப்பவர்களும் பதிவிறக்குதல், அச்சிடுதல், நகலெடுத்தல் ஆகியவற்றுக்கான விருப்பத்தைப் பார்க்கலாம் என்பதைத் தேர்வுநீக்கவும்.

கவனத்திற்கு: Google Drive, Docs, Sheets, Slides ஆகியவற்றில் பிறர் பகிர்வது, அச்சிடுவது, பதிவிறக்குவது, நகலெடுப்பது ஆகியவற்றை நீங்கள் வரம்பிடலாம். ஆனால் வேறு வழிகளில் ஃபைலின் உள்ளடக்கத்தைப் பிறர் பகிர்வதை உங்களால் தடுக்க முடியாது.

உங்கள் ஃபைல்களைப் பிறர் பகிர்வதைத் தடுத்தல்

நீங்கள் ஒரு ஃபைலைப் பகிர்கிறீர்கள் எனில் உரிமையாளரும் திருத்துவதற்கான அணுகல் உள்ள எவரும் அந்த ஃபைலின் அனுமதிகளை மாற்றி அதைப் பகிர முடியும். உங்கள் ஃபைலைப் பிறர் பகிர்வதைத் தடுக்க:

  1. Google Drive, Google Docs, Google Sheets, Google Slides போன்றவற்றில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திருத்தக்கூடியவர்கள் அனுமதிகளை மாற்றி, பகிரலாம் என்பதைத் தேர்வுநீக்கவும்.

முக்கியம்: ஒரு ஃபோல்டரைப் பகிர்வதைத் தடுத்தால், அது அந்த ஃபோல்டருக்கு மட்டுமே பொருந்தும். அதிலிருக்கும் ஃபைல்கள் பகிரப்படுவதைத் தடுக்க ஃபைல்களின் அமைப்பை மாற்ற வேண்டும்.

பணி அல்லது பள்ளிக்கான Google கணக்குகளில் கிடைக்கும் கூடுதல் விருப்பங்கள்

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவருக்கு ஃபைலுக்கான அனுமதிகளை வழங்குதல்

ஃபைலுக்குக் காலாவதித் தேதியை அமைத்தல்

  1. Google Drive, Google Docs, Google Sheets, Google Slides போன்றவற்றில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பகிர் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு தற்காலிக அனுமதிகளை நீங்கள் வழங்க விரும்பும் பயனரைத் தேர்ந்தெடுக்கவும்.
    • இதுவரை அந்தப் பயனரிடம் ஃபைலைப் பகிரவில்லை எனில் அவருடைய மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்து அனுப்பு என்பதையோ பகிர் என்பதையோ கிளிக் செய்யவும். ஆவணத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள பகிர் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
  3. நபரின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி கீழே  அதன் பிறகு காலாவதித் தேதியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "அணுகல் காலாவதியாகும் தேதி" என்பதற்கு அடுத்துள்ள ஒரு தேதியைக் கிளிக் செய்து காலாவதித் தேதியை அமைக்கவும். தற்போதைய தேதியிலிருந்து ஓராண்டிற்குள்ளாக ஒரு தேதியைத் தேர்வுசெய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Formsஸிற்கான பகிர்தல் அமைப்புகளை மாற்றுதல்

Google Formsஸில் உள்ள பகிர்தல் விருப்பங்கள் பிற வகை ஃபைல்களில் உள்ள பகிர்தல் விருப்பங்களில் இருந்து வேறுபட்டவை.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13027555404796385023
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false