உங்கள் ஃபைலின் உரிமையாளராக வேறொருவரை நியமித்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் ஃபைல்களுக்கான உரிமை உங்களிடம் இருக்கும். உங்களுக்குச் சொந்தமாக உள்ள ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களுக்கான உரிமையை வேறொரு கணக்கிற்கு நீங்கள் மாற்றலாம்.

உரிமையை மாற்றுவதற்கு முன்

நீங்கள் பணி அல்லது பள்ளிக்கான Google கணக்கைப் பயன்படுத்தினால்:

  • உங்கள் நிறுவனத்தில் உள்ளவருக்கு மட்டுமே ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களின் உரிமையை மாற்ற முடியும்.
  • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையைப் புதிய உரிமையாளர் ஏற்க வேண்டிய அவசியமில்லை.

உரிமையை மாற்றியபிறகு

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பும்போது:

  • அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டால் ஃபைலின் உரிமையாளராகிவிடுவார் என அறிவிக்கும் மின்னஞ்சல் அவருக்கு அனுப்பப்படும். ஆனால், அதுவரை நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.
  • அவர் ஏற்கெனவே திருத்தக்கூடியவராக இல்லையெனில் இப்போது அந்தப் பொறுப்பிற்கு மேம்படுத்தப்படுவார்.
  • அவர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் திருத்தக்கூடியவர் பொறுப்பில் இருந்து நீங்கள் அகற்றப்படுவீர்கள். அத்துடன், புதிய உரிமையாளர் உங்களை அகற்றவும் முடியும்.
  • அவர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தால் நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.

Google Driveவில் உரிமையாளர்களை மாற்றுதல்

முக்கியம்: நீங்கள் ஏற்கெனவே ஃபைலைப் பகிர்ந்துள்ளவர்களுக்கு ஃபைலின் உரிமையை மாற்றலாம். Google Driveவில் இருந்து ஃபைல்களைப் பகிர்வது குறித்து மேலும் அறிக.

  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. மாற்ற வேண்டிய ஃபைலைக் கண்டறிந்து அதன்மீது வலது கிளிக் செய்யவும்.
  3. பகிர் > பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெறுநர்களின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்து அதன் பிறகு உரிமையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

Docs, Sheets, Slides ஃபைல்களில் உரிமையாளர்களை மாற்றுதல்

முக்கியம்: நீங்கள் ஏற்கெனவே ஃபைலைப் பகிர்ந்துள்ளவர்களுக்கு ஃபைலின் உரிமையை மாற்றலாம். Google Driveவில் இருந்து ஃபைல்களைப் பகிர்வது குறித்து மேலும் அறிக. 

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் ஃபைலின் உரிமையை மாற்ற:

  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. Google Docs, Sheets அல்லது Slides ஃபைலைத் திறக்கவும்.
  3. மேல் வலது மூலையில் உள்ள பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெறுநர்களின் பெயருக்கு அடுத்துள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்து அதன் பிறகு உரிமையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உரிமை மாற்றத்தை ரத்துசெய்தல்

முக்கியம்: புதிய உரிமையாளர் உரிமையை ஏற்றுக்கொண்ட பிறகு உங்களால் உரிமை மாற்றத்தை ரத்துசெய்ய முடியாது. 

Google Docs, Sheets, அல்லது Slidesஸில் ஃபைலின் உரிமை மாற்றத்தை ரத்துசெய்ய:

  1. கம்ப்யூட்டரில், ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் உள்ள பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெறுநர்களின் பெயருக்கு அடுத்துள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்து அதன் பிறகு உரிமை மாற்றப்படுவதை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுதல் & நிராகரித்தல்

ஃபைலின் உரிமையை மாற்றுமாறு யாரேனும் கோரிக்கை விடுக்கும்போது அதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த அழைப்பை நீங்கள் ஏற்கலாம்/நிராகரிக்கலாம். உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கைக்கு இன்னும் நீங்கள் பதிலளிக்காத ஃபைல்களைக் கண்டறிய Driveவிலும் தேடலாம்.

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பட்டியில் pendingowner:me என டைப் செய்யவும்.
  3. நீங்கள் பதிலளிக்க விரும்பும் ஃபைல்/ஃபைல்களை வலது கிளிக் செய்யவும்.
  4. பகிர் பகிர் அதன் பிறகு உரிமையை ஏற்கிறீர்களா? அதன் பிறகு ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்:

  • கோரிக்கை நிலுவையிலுள்ள உரிமையாளர் உங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள். உரிமையை மாற்றியபிறகு உங்களுக்கான அனுமதிகள் மாறும் வரை நீங்கள் ஃபைலைத் திருத்தலாம்.
  • பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துபவருக்கு உங்கள் தனிப்பட்ட Google கணக்கில் இருந்து ஃபைலின் உரிமையை மாற்ற முடியாது.
  • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை ஒரு தனிப்பட்ட கணக்கிற்கு நீங்கள் அனுப்பிய பின்னர் அந்தக் கணக்குப் பணி/பள்ளிக் கணக்காக மாறிவிட்டால், உரிமையைப் பெற வேண்டியவர் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது.
  • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பிய பின்னர் உங்கள் தனிப்பட்ட கணக்கானது பணி/பள்ளிக் கணக்காக மாறிவிட்டால், உரிமையைப் பெற வேண்டியவர் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது.
  • கோரிக்கையை நீங்கள் ரத்துசெய்யலாம்.
  • கோரிக்கை நிலுவையிலுள்ள உரிமையாளர் அந்தக் கோரிக்கையை நிராகரிக்கலாம்.
  • ஒரு ஃபைலின் உரிமையை மாற்றும்போது அது 'எனது Drive' ஃபோல்டரில் இருந்து அகற்றப்படும், அந்த ஃபைல் உங்கள் சேமிப்பகத்தில் கணக்கிடப்படாது. அது புதிய உரிமையாளரின் சேமிப்பகத்தில் கணக்கிடப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10238230007867905437
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false