உங்கள் ஃபைலின் உரிமையாளராக வேறொருவரை நியமித்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் ஃபைல்களுக்கான உரிமை உங்களிடம் இருக்கும். உங்களுக்குச் சொந்தமாக உள்ள ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களுக்கான உரிமையை வேறொரு கணக்கிற்கு நீங்கள் மாற்றலாம்.

உரிமையை மாற்றுவதற்கு முன்

நீங்கள் பணி அல்லது பள்ளிக்கான Google கணக்கைப் பயன்படுத்தினால்:

  • உங்கள் நிறுவனத்தில் உள்ளவருக்கு மட்டுமே ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களின் உரிமையை மாற்ற முடியும்.
  • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையைப் புதிய உரிமையாளர் ஏற்க வேண்டிய அவசியமில்லை.

உரிமையை மாற்றியபிறகு

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பும்போது:

  • அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டால் ஃபைலின் உரிமையாளராகிவிடுவார் என அறிவிக்கும் மின்னஞ்சல் அவருக்கு அனுப்பப்படும். ஆனால், அதுவரை நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.
  • அவர் ஏற்கெனவே திருத்தக்கூடியவராக இல்லையெனில் இப்போது அந்தப் பொறுப்பிற்கு மேம்படுத்தப்படுவார்.
  • அவர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் திருத்தக்கூடியவர் பொறுப்பில் இருந்து நீங்கள் அகற்றப்படுவீர்கள். அத்துடன், புதிய உரிமையாளர் உங்களை அகற்றவும் முடியும்.
  • அவர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தால் நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.

Android சாதனத்தில் இருந்து உரிமையாளர்களை மாற்ற முடியாது

கோப்பின் உரிமையாளரை மாற்ற கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7896648966370257227
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false