உங்கள் ஃபைலின் உரிமையாளராக வேறு ஒருவரை நியமித்தல்

பணி/பள்ளிக்கான Google Driveவில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்கு இலவசமாகப் பதிவு செய்யுங்கள். 

Google Driveவில் நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் எந்தவொரு ஃபைலுக்கும் இயல்பாக நீங்கள்தான் உரிமையாளர்.

நீங்கள் தனிப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்தினால்:

 • தனிப்பட்ட Google கணக்கை வைத்திருக்கும் ஒருவரை உங்கள் ஃபைல்கள், ஃபோல்டர்கள் ஆகியவற்றின் உரிமையை ஏற்குமாறு அழைக்கலாம்.
 • பணி அல்லது பள்ளிக் கணக்கை வைத்திருக்கும் ஒருவரை உங்கள் ஃபைல்கள், ஃபோல்டர்கள் ஆகியவற்றின் உரிமையை ஏற்குமாறு அழைக்க முடியாது.
 • உரிமை மாற்றம் நிறைவடைய, ஃபைல் அல்லது ஃபோல்டரின் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான உங்கள் கோரிக்கையை நீங்கள் அழைப்பவர் ஏற்க வேண்டும்.

உரிமையை மாற்றும் முன்

Google கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் உரிமைகளை மட்டுமே மாற்ற முடியும்.ஃபோல்டரின் உரிமையாளராக வேறொருவரை நீங்கள் நியமிக்கும்போதும் அதிலுள்ள ஃபைல்கள் உங்களுக்குச் சொந்தமானவையாக இருக்கும். ஃபோல்டர்களைப் பகிர்வது குறித்து மேலும் அறிக.

உதவிக்குறிப்பு: ஒரே நேரத்தில் பல்வேறு ஃபைல்கள், ஃபோல்டர்கள் ஆகியவற்றின் உரிமையை மாற்றினால் அந்த மாற்றங்கள் காட்டப்பட சிறிது நேரம் ஆகலாம்.

உரிமையை மாற்றியபிறகு

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பும்போது:

 • அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டால் ஃபைலின் உரிமையாளராகிவிடுவார் என அறிவிக்கும் மின்னஞ்சல் அவருக்கு அனுப்பப்படும். ஆனால், அதுவரை நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.
 • அவர் ஏற்கெனவே திருத்தக்கூடியவராக இல்லையெனில் இப்போது அந்தப் பொறுப்பிற்கு மேம்படுத்தப்படுவார்.
 • அவர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் திருத்தக்கூடியவர் பொறுப்பில் இருந்து நீங்கள் அகற்றப்படுவீர்கள். அத்துடன், புதிய உரிமையாளர் உங்களை அகற்றவும் முடியும்.
 • அவர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தால் நீங்கள்தான் ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள்.

உரிமையாளர்களை மாற்றுதல்

 1. Google Drive, Google Docs, Google Sheets, Google Slides போன்றவற்றில் ஒன்றைத் திறக்கவும்.
 2. உரிமையை மாற்ற விரும்பும் ஃபைலைக் கிளிக் செய்து அதன் பிறகு பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. ஏற்கெனவே நீங்கள் ஃபைலைப் பகிர்ந்தவரின் பெயருக்கு வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புகுறி கிளிக் செய்யவும்.
 4. உரிமையை மாற்று அதன் பிறகு அழைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை ரத்துசெய்ய, ஏற்கெனவே நீங்கள் ஃபைலைப் பகிர்ந்தவரின் பெயருக்கு வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்து அதன் பிறகுஉரிமை மாற்றத்தை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும். கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்யும்போது ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அனுமதிகளை மாற்றலாம்.

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை மற்றொருவர் ஏற்கும் வரை நீங்கள்தான் அந்த ஃபைலின் உரிமையாளராக இருப்பீர்கள். கோரிக்கையைப் புதிய உரிமையாளர் ஏற்றுக்கொண்டபின் உங்கள் அணுகலை அவர் மாற்றும்வரை அந்த ஃபைலில் நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம்.

உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுதல் & நிராகரித்தல்

ஃபைலின் உரிமையை மாற்றுமாறு யாரேனும் கோரிக்கை விடுக்கும்போது அதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த அழைப்பை நீங்கள் ஏற்கலாம்/நிராகரிக்கலாம். உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கைக்கு இன்னும் நீங்கள் பதிலளிக்காத ஃபைல்களைக் கண்டறிய Driveவிலும் தேடலாம்.

 1. Google Driveவைத் திறக்கவும்.
 2. மேலே உள்ள தேடல் பட்டியில் pendingowner:me என டைப் செய்யவும்.
 3. நீங்கள் பதிலளிக்க விரும்பும் ஃபைல்/ஃபைல்களை வலது கிளிக் செய்யவும்.
 4. பகிர் பகிர் அதன் பிறகு உரிமையை ஏற்கிறீர்களா? அதன் பிறகு ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்:

 • பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துபவருக்கு உங்கள் தனிப்பட்ட Google கணக்கில் இருந்து ஃபைலின் உரிமையை மாற்ற முடியாது.
 • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை ஒரு தனிப்பட்ட கணக்கிற்கு நீங்கள் அனுப்பிய பின்னர் அந்தக் கணக்கு பணி அல்லது பள்ளிக் கணக்காக மாறிவிட்டால், உரிமையைப் பெற வேண்டியவர் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது.
 • உரிமையை மாற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பிய பின்னர் உங்கள் தனிப்பட்ட கணக்கானது பணி அல்லது பள்ளிக் கணக்காக மாறிவிட்டால், உரிமையைப் பெற வேண்டியவர் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது.
 • கோரிக்கையை நீங்கள் ரத்துசெய்யலாம்.
 • உரிமையைப் பெற வேண்டியவர் அந்தக் கோரிக்கையை நிராகரிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false