Google Driveவில் உள்ள ஃபைல்களைப் பகிர்தல்

Google Driveவில் நீங்கள் சேகரித்த கோப்புகளையும் கோப்புறைகளையும் எவருடனும் பகிரலாம்.

நீங்கள் Google Driveவில் இருந்து ஃபைலைப் பகிரும்போது அதில் திருத்த, கருத்து தெரிவிக்க அல்லது பார்ப்பதற்கு மட்டும் பிறரை அனுமதிக்கலாமா என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம். Google Driveவில் இருந்து உள்ளடக்கத்தைப் பகிரும்போது Google Drive திட்டக் கொள்கைகள் பொருந்தும்.

படி 1: நீங்கள் பகிர விரும்பும் ஃபைலைக் கண்டறிதல்

ஒரு ஃபைலைப் பகிர்தல்

உதவிக்குறிப்பு: திறந்திருக்கும் ஆவணத்தைப் பகிர்வதற்கான கோரிக்கை நிலுவையில் இருந்தால், மேல் வலதுபுறத்தில் பகிர்வதற்கான ஐகானுக்கு பகிர் அடுத்து ஒரு புள்ளி காட்டப்படும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive, Docs, Sheets அல்லது Slidesஸிற்குச் செல்லவும்.
  2. பகிர வேண்டிய ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைல்களைப் பகிர்தல்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. கீபோர்டில் Shift அழுத்தியபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள பகிர்வதற்கான ஐகானை பகிர் கிளிக் செய்யவும்.

ஃபோல்டரில் ஃபைல்களைச் சேர்ப்பது பற்றியும் முழு ஃபோல்டரையும் பகிர்வது பற்றியும் அறிக.

Google Formsஸை அனுப்புதல் & பகிர்தல்

Google Formsஸில் உள்ள பகிர்தல் விருப்பங்கள் பிற வகை ஃபைல்களில் உள்ள பகிர்தல் விருப்பங்களில் இருந்து வேறுபட்டவை.

படி 2: ஃபைலை யாருக்குப் பகிர வேண்டும், அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல்

குறிப்பிட்டவர்களுடன் பகிர்தல்
கவனத்திற்கு: உங்கள் Google கணக்கைப் பணி அல்லது பள்ளி மூலம் பயன்படுத்தினால் நிறுவனத்திற்கு வெளியே உங்களால் ஃபைல்களைப் பகிர முடியாமல் போகலாம்.
  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.
  2. பகிர வேண்டிய ஃபைலைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு பகிர் அனுமதியளிப்பவரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பகிர விரும்புபவரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும். பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் பரிந்துரைக்கப்படும் பெறுநர்களுடன் பகிரலாம்.
    • உதவிக்குறிப்பு: பெறுநர்கள் பரிந்துரைக்கப்படுவதை முடக்க Drive அமைப்புகள் அமைப்புகள் என்பதற்குச் செல்லவும். "பகிர்தல் உரையாடலில், பரிந்துரைக்கப்பட்ட பெறுநர்களைக் காட்டு" என்பதைத் தேர்வுநீக்கவும்.
  4. பிறர் உங்கள் ஃபைலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவும். ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • பார்வையாளர்
    • கருத்து தெரிவிப்பவர்
    • திருத்தக்கூடியவர்
  5. தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தினால் காலாவதித் தேதியைச் சேர்க்க, காலாவதித் தேதியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் ஃபைலை நீங்கள் பகிரும்போது ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
    • விருப்பத்திற்குரியது: உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலில் மெசேஜைச் சேர்க்கலாம்.
    • பிறருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை எனில் பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  7. அனுப்பு அல்லது பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: எனது Driveவில் இருந்து ஒரு ஃபைலைப் பகிர்வதற்கான அனுமதியை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பகிரும் நபருக்கு அனுமதிகள் இல்லையென்றால் இவற்றுக்கான அனுமதிகளை மாற்றலாம்:

  • ஃபைல் இருக்கும் ஃபோல்டர்
  • ஃபைல் மட்டும்
குறிப்பிட்ட நபர்களைக் கொண்ட குழுவுடன் பகிர்தல்

Google குழுவுடன் பகிர்தல்

குறிப்பிட்ட நபர்களுடன் பகிர்வதற்குப் பதிலாக Google Groups உடன் ஃபைல்களைப் பகிரலாம். நீங்கள்:

  • குழுவில் ஓர் உறுப்பினரைச் சேர்த்தால்: குழுவில் உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் அவரால் அணுக முடியும்.
  • குழுவில் இருந்து ஓர் உறுப்பினரை அகற்றினால்: குழுவில் உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் அவரால் அணுக முடியாது.

உங்கள் Google குழுவுடன் ஃபைலைப் பகிர:

  1. Google குழுவை உருவாக்கவும்.
  2. உங்கள் குழுவில் உறுப்பினர்களைச் சேர்க்கவும்.
  3. உங்கள் குழுவுடன் ஃபைலைப் பகிரவும்.

உதவிக்குறிப்பு: ஒரு ஃபைல் “என்னுடன் பகிர்ந்தவை” ஃபோல்டரில் காட்டப்படுவதற்கு முன் அழைப்பில் இருந்தோ இணைப்பில் இருந்தோ அந்த ஃபைலை நீங்கள் திறக்க வேண்டும். 

Chat ஸ்பேஸில் பகிர்தல்

ஃபைல்களை Chat ஸ்பேஸில் பகிர, நீங்கள் பகிர விரும்பும் ஃபைலை அந்த Chat ஸ்பேஸில் சேர்க்கலாம்.

Chat ஸ்பேஸில் Drive ஃபைலைச் சேர்க்க:

வழிமுறை 1: 

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. ஃபைலைப் பகிர விரும்பும் Chat ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கீழ் இடதுபுறத்தில் உள்ள 'ஒருங்கிணைத்தல் மெனு' ஐகானை  கிளிக் செய்து ​> Drive  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Chat ஸ்பேஸில் பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 2: 

  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.
  2. Chat ஸ்பேஸில் பகிர விரும்பும் ஃபைல் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. பகிர்  > இணைப்பை நகலெடு  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Google Chatடிற்குச் செல்லவும்.
  5. ஃபைலைப் பகிர விரும்பும் Chat ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும். 
  6. நகலெடுத்த இணைப்பை மெசேஜ் டைப் செய்யும் பகுதியில் ஒட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Chat ஸ்பேஸில் ஃபைலைப் பகிரும்போது அணுகலை வழங்கும்படி ஓர் அறிவிப்பு காட்டப்படும்.
    • அந்த Chat ஸ்பேஸிற்கு அணுகலை வழங்கினால் ஸ்பேஸில் பிறகு சேரும் நபர்களும் பகிரப்பட்ட ஃபைல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
  • Chat ஸ்பேஸில் இருந்து நபர்கள் வெளியேறும்போது, பகிர்தலுக்கான அணுகல் அவர்களிடம் இல்லையெனில் அந்த Chat ஸ்பேஸில் உள்ள ஃபைல்களுக்கான அணுகலை அவர்கள் இழப்பார்கள்:
    • தனிநபராக
    • மற்றொரு குழுவின் உறுப்பினராக
  • ஃபைலுக்கான அணுகலை வழங்க, பகிர விரும்பும் ஃபைலைத் திருத்துவதற்கான அணுகல் உங்களிடம் இருக்க வேண்டும். 

ஃபைல்களைப் பிறர் எப்படிப் பார்க்கலாம், கருத்து தெரிவிக்கலாம், திருத்தலாம் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மீட்டிங் பங்கேற்பாளர்களுடன் பகிர்தல்

நீங்கள் ஃபைலின் உரிமையாளராகவோ அதைத் திருத்தக்கூடியவராகவோ இருந்தால் மீட்டிங் பங்கேற்பாளர்களுடன் ஃபைல்களைப் பகிரலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.

  2. பகிர வேண்டிய ஃபைலைத் தேர்ந்தெடுத்து ‘பகிர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் ஃபைலைப் பகிர விரும்பும் மீட்டிங்கின் பெயரை டைப் செய்யவும்.
  4. உங்கள் ஃபைலைப் பிறர் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • பார்வையாளர்
    • கருத்து தெரிவிப்பவர்
    • திருத்தக்கூடியவர்
  5. மீட்டிங் அழைப்புடன் ஃபைல் இணைக்கப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும். 
  6. நீங்கள் ஃபைலைப் பகிரும்போது, ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
    • விருப்பத்திற்குரியது: உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலில் மெசேஜைச் சேர்க்கலாம்.
    • பிறருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை எனில் பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  7. அனுப்பு அல்லது பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
காலாவதித் தேதியைச் சேர்த்தல்

தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே காலாவதித் தேதி அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

நீங்கள் தற்போது உள்நுழைந்திருக்கவில்லை.

பணி அல்லது பள்ளிக் கணக்கில் உள்நுழையுங்கள்

ஃபைலுக்குப் பொதுவான அணுகலை வழங்குதல்

உங்கள் ஃபைலை அனைவரும் அணுகலாமா அல்லது அணுகல் உள்ளவர்கள் மட்டும் அணுகலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இணைப்புள்ள அனைவருக்கும் அணுகல் வழங்கினால் யார் வேண்டுமானாலும் உங்கள் ஃபோல்டரை அணுகலாம்.

  1. பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழேயுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்யவும்.
  4. யாரெல்லாம் ஃபைலை அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.

  1. உங்கள் ஃபைலில் பிறரது பொறுப்பு என்ன என்பதைத் தீர்மானிக்க பார்வையாளர்கருத்து தெரிவிப்பவர், திருத்தக்கூடியவர் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஃபைலைப் பொதுவில் பகிர்தல்
  1. பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழேயுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழே கிளிக் செய்யவும்.
  4. இணைப்புள்ள எவரும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. உங்கள் ஃபைலில் பிறரது பொறுப்பு என்ன என்பதைத் தீர்மானிக்க பார்வையாளர்கருத்து தெரிவிப்பவர்திருத்தக்கூடியவர் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. மின்னஞ்சலிலோ நீங்கள் பகிர விரும்பும் இடத்திலோ இணைப்பை ஒட்டவும்.

Google கணக்கின் மூலம் உள்நுழையாதவர்களுக்கு உங்கள் ஃபைலில் ஏதேனும் அடையாளமற்ற விலங்குகள் தோற்றப்படங்களாகக் காட்டப்படும்அடையாளமற்ற விலங்குகள் தோற்றப்படங்களாகக் காட்டப்படுவது குறித்து மேலும் அறிக.

ஃபைலைப் பலருடன் பகிர்தல் மற்றும் அதில் கூட்டுப்பணி செய்தல்

முக்கியம்:

  • ஒரே நேரத்தில் Google Docs, Sheets அல்லது Slides ஃபைலை அதிகபட்சமாக 100 உலாவிப் பக்கங்களில் அல்லது சாதனங்களில் திறந்து திருத்த முடியும். ஃபைல் 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் திறந்திருப்பின், உரிமையாளரும் திருத்துவதற்கான அனுமதிகளைக் கொண்ட சில பயனர்களும் மட்டுமே ஃபைலைத் திருத்த முடியும்.
  • ஒரு ஃபைலை அதிகபட்சமாக 600 தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டுமே பகிர முடியும்.

அதிகமானவர்களுடன் ஃபைலைப் பகிர்வதற்கும் அதில் கூட்டுப்பணி செய்வதற்கும்:

ஃபைலை வெளியிடுங்கள்

Google தளத்தை உருவாக்குங்கள் 

Google Forms மூலம் கருத்துகளைப் பெறுங்கள்

  • நிறைய தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருந்தால் ஒரு Google படிவத்தை உருவாக்கவும். பயனர்களின் பதில்கள் Google விரிதாளில் பதிவுசெய்யப்படும். பயனர்களின் பதில்களை வைத்துப் பணியாற்ற வேண்டியிருப்பவர்களுக்கு மட்டும் திருத்துவதற்கான அணுகலை வழங்கவும். பயனர்களின் பதில்களை 100க்கும் அதிகமானோர் திறக்க வேண்டும் என்றால் விரிதாளை இணையத்தில் வெளியிட்டு அணுகல் உள்ளவர்களுடன் அதைப் பகிர்வதற்கான இணைப்பை உருவாக்கவும். ஃபைலை வெளியிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்

பலருடன் பகிரப்பட்ட ஆவணங்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் ஆவணம் பலருடன் பகிரப்பட்டு, சிதைவடைகிறது என்றாலோ விரைவாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ பிழையறிந்து திருத்துவதற்கான இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றிப் பாருங்கள்: 

  • ஆவணத்திலோ விரிதாளிலோ பயனர்களைக் கருத்து தெரிவிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, கருத்துகளைப் பெறும் வகையில் ஒரு Google படிவத்தை உருவாக்கவும். Google படிவத்தை எப்படி உருவாக்குவது என அறிக.
  • ஆவணத்தை நகலெடுக்கிறீர்கள் என்றால் தீர்க்கப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் அதில் சேர்க்காதீர்கள். நகலெடுப்பது எப்படி என அறிக
  • பழைய தகவல்களை நீக்கவும் அல்லது தரவைப் புதிய ஆவணத்திற்கு நகர்த்தவும். 
  • ஆவணத்தைப் பயன்படுத்தாதபோது அதை மூடும்படி அணுகல் உள்ள நபர்களுக்கு அறிவுறுத்தவும். 
  • வெளியிட்ட ஆவணத்தில் மிக முக்கியமான தகவல்களை மட்டுமே சேர்க்கவும். சிறிய ஆவணங்கள் வேகமாக ஏற்றப்படும்.
  • ஆவணத்தைத் திருத்துவதற்கான அணுகல் உள்ள பயனர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும். 
  • பல ஆவணங்களில் இருந்து தகவல்களைச் சேகரிக்கிறீர்கள் என்றால் அதிகமான பயனர்களுடன் பகிரும் வகையில் 'அணுக மட்டுமே அனுமதியுள்ள' புதிய ஆவணத்தை உருவாக்கவும். 

ஃபைல் பகிரப்படும் விதத்தைக் கட்டுப்படுத்துதல்

பிறர் பார்ப்பது, கருத்து தெரிவிப்பது, திருத்துவது போன்றவற்றைச் செய்ய முடியுமா என்பதைத் தேர்வுசெய்தல்

ஃபைலை ஒருவருக்குப் பகிரும்போது அவருக்கான அணுகல் நிலையை நீங்கள் தேர்வுசெய்யலாம்:

  • பார்வையாளர்: ஃபைலைப் பார்க்க முடியும், ஆனால் அதில் மாற்றம் செய்யவோ அதைப் பிறருடன் பகிரவோ முடியாது.
  • கருத்து தெரிவிப்பவர்: கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க முடியும், ஆனால் ஃபைலில் மாற்றம் செய்யவோ ஃபைலைப் பிறருடன் பகிரவோ முடியாது.
  • திருத்தக்கூடியவர்: மாற்றங்களைச் செய்யவும், பரிந்துரைகளை ஏற்கவும் மறுக்கவும் முடியும், அத்துடன் பிறருடன் ஃபைலைப் பகிரவும் முடியும்.
ஃபைலுக்கான பொது அணுகலை மாற்றுதல்

உங்கள் ஃபைலுக்குப் பரவலான அணுகலை அனுமதிக்கலாம். உங்கள் Google கணக்கானது பணிக் கணக்கா, பள்ளிக் கணக்கா அல்லது Gmail மூலம் உருவாக்கப்பட்ட கணக்கா என்பதைப் பொறுத்தே இந்த விருப்பங்கள் அமையும்.

  • பொது: Google கணக்கில் உள்நுழையாமலேயே எவரும் Googleளில் தேடி உங்கள் ஃபைலை அணுகலாம்.
  • இணைப்புள்ள எவரும் அணுகலாம் என அமைக்கப்பட்டிருந்தால்: இணைப்புள்ள எவரும் தங்கள் Google கணக்கில் உள்நுழையாமலேயே உங்கள் ஃபைலை அணுகலாம். 
  • வரம்பிடப்பட்டது: அணுகல் உள்ளவர்கள் மட்டுமே ஃபைலைத் திறக்க முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6106349200803284934
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false